புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 ஏப்., 2014

அதிரடி நடவடிக்கை; பல இலட்சம் பெறுமதியான தங்கூசி வலைகள் மீட்பு 
யாழ். மாவட்ட நீரியல் வளத்துறைத்திணைக்களத்தின் அதிரடி நடவடிக்கையில் பல இலட்சம் பெறுமதியான தங்கூசி வலைகள் மீட்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட நீரியல்வளத்துறை திணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 


அதன்படி திணைக்களத்தினருக்கு கிடைத்த தகவலின் படி வேலனை, அம்பியநகர், செட்டிபுலம் ஆகிய இடங்களுக்கு மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில்  கடற்கரையோரத்தில் பல இலட்சம் பெறுமதியான தங்கூசி வலைகள் மீட்கப்பட்டன.

மேலும் சட்டவிரோத உபரணமாக அடையாளப்படுத்தப்பட்ட தங்கூசி வலையானது தற்போதும் திருட்டுத்தனமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது. எனினும் மீட்கப்பட்ட வலைகளுக்கு எவரும் உரிமை கோரவில்லை.

நாளை ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் பாரப்படுத்தப்படவுள்ளதாகவும் இவ்வாறான உபகரணங்களை பயன்படுத்துபவர்களுக்கு எதிராக தொடர்ந்தும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

ad

ad