புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 ஏப்., 2014



நீலகிரி தொகுதியில் பா.ஜ.க. ஆதரவு யாருக்கு?: பாஜக தேசிய பொதுச்செயலாளர் முரளிதரராவ் பதில்

பாரதீய ஜனதா கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் முரளிதரராவ் கோவையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறும் போது,வருகிற பாராளுமன்ற தேர்தல் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தேர்தல் ஆகும்.
பாரதீய ஜனதா கூட்டணி அமைவதற்கு முன்பு தமிழகத்தில் இருந்த அரசியல் நிலை வேறு.
இப்போதுள்ள அரசியல் நிலை வேறாக உள்ளது. அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. கட்சிகளுக்கு எதிரான கூட்டணியாக தேசிய ஜன நாயக கூட்டணி உள்ளது. உண்மையில் இந்த தேர்தலில் அ.தி.மு.க. வுக்கும், தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் இடையில் தான் போட்டி நிலவுகிறது.
நீலகிரியில் வேண்டு மென்றே வேட்பாளர் தவறிழைத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து விசாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. விசாரணைக்குப்பிறகு அவர் மீது தவறு இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். நீலகிரி பாராளுமன்ற தொகுதியில் யாரை ஆதரிப்பது என்பது குறித்து ஓரிரு நாட்களில் முடிவு அறிவிக்கப்படும். இவ்வாறு  முரளிதர ராவ் கூறினார்.

ad

ad