384 இலட்சம் ரூபா பெறுமதியான வல்லப்பட்டைகளுடன் மூவர் கைது
சட்டவிரோதமான முறையில் 384 இலட்சம் ரூபா பெறுமதியான வல்லப்பட்டைகளை இந்தியா, சென்னைக்கு கொண்டுச் செல்ல முயன்ற இலங்கையர் ஒருவர் உட்பட இந்தியர் இ
ருவர் கட்டுநாயக்க விமானநிலையத்தில் இன்று காலை 7.10 மணியளவில் சுங்கப்பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பிலிருந்து யுஎல்121 என்ற விமானத்தில் சென்னைக்கு செல்லவிருந்த இலங்கையைச் சேர்ந்த 55 வயதுடைய நபரும், இந்தியாவைச் சேர்ந்த 30,40 வயதுடைய நபர்களுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து 48 கிலோ கிராம் நிறையுடைய 384 இலட்சம் ரூபா பெறுமதியான வல்லப்பட்டைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
அதிகூடுதலான பெறுமதியுடைய வல்லப்பட்டைகளை கடத்திய முதல் சம்பவம் இதுவே என சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.