புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 ஏப்., 2014


இலங்கையின் மொத்த ஏற்றுமதியில் 70 சத வீதமானவை ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளையே சென்றடைகின்றன :ரிஷாத்

இலங்கையின் மொத்த ஏற்றுமதியில் 70 சத வீதமானவை ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளையே சென்றடைகின்றன. இவ்வாறானதொரு நிலையில் இலங்கை வேறு ஏதும் சவால்களை எதிர்நோக்கும் பட்சத்தில் அதற்கான மாற்று வழிகள் கண்டறிப்பட்டுள்ளதாக கைத்தொழில் வர்த்தகத்துறை அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.
 
ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை்கு எதிராக நிறைவேற்றப்பட்டுள்ள பிரேரணைக்கு மேலதிகமாக ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகள் சுய பொருளாதாரத் தடைகளை ஏற்படுத்தும் பட்சத்தில் மாற்று வழிகள் இனங்காணப்பட்டுள்ளனவா என கேட்ட போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
 
இது தொடர்பில் வீரகேசரிக்கு கருத்துத் தெரிவித்த அவர்,
 
எமது உற்பத்தியில் 70 சத வீதமானவை ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளைளே சென்றடைகின்றன. மத்திய கிழக்கு நாடுகளுக்கு 30 சத வீதம் மட்டுமே ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. இவ்வாறானதொரு நிலையில் இலங்கை ஏற்றுமதி வர்த்தகத்தில் எதிர்காலத்தில் சவால்கள் எதிர்நோக்கப்படுமாயின் அதற்கு மாற்றீடாக வேறு சில நாடுகளுக்கு எமது உற்பத்திகளை ஏற்றுமதி செய்யவதற்காக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
 
இதன்படி தென்னாபிரிக்கா, ஜப்பான், ரஷ்யா போன்ற நாடுகளுக்கு எமது உற்பத்திகளை ஏற்றுமதி செய்வதற்கான செயற்றிட்டம் எனது அமைச்சு மூலம் முனெ்னெடுக்கப்பட்டு வருகிறது.
 
இதேவேளை, கடந்த வருடம் 11 பில்லியன் டாலர்கள் பெறுமதியான ஏற்றுமதியும் 20 பில்லியன் டாலர்கள் பெறுமதியான இறக்குமதி நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தன. எமது நாட்டிலிலிருந்து 3 தொடக்கம் 4 பில்லியன் வரையிலான ஆடைகள் ஏற்றுமதி செய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

ad

ad