புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 ஏப்., 2014

தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக துணை ராணுவப்படை வீரர்கள் சென்னை வந்தனர்.

தேர்தல் பாதுகாப்பிற்காக, துணை ராணுவப்படை வீரர்கள் 574 பேர், சிறப்பு ரயில்கள் மூலம் இன்று சென்னை வந்தனர். அவர்கள் அனைவரும், சிறப்பு பேருந்துகள் மூலம் காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு அனுப்பி

வைக்கப்பட்டனர். பதற்றமானவை என கண்டறியப்பட்ட 1,337 வாக்குச்சாவடி மையங்களும் துணை ராணுவப்படையினரின் கட்டுப்பாட்டில் இருக்கும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தமிழக தேர்தல் பாதுகாப்பு பணியில் 32 கம்பெனிகளை சேர்ந்த 3 ஆயிரத்து 200 துணை ராணுவப்படை வீரர்கள் ஈடுபடுவார்கள் என தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. அதன்படி, 2 கட்டங்களாக துணை ராணுவத்தினர் சிறப்பு ரயில்கள் மூலம் தமிழகம் வந்து சேர்ந்தனர். இன்று 3வது கட்டமாக, சென்னை செண்ட்ரல் ரயில் நிலையத்தில் 485 வீரர்களும், எழும்பூர் ரயில் நிலையத்திற்கு 89 வீரர்களும் வந்து சேர்ந்தனர். மீதமுள்ள வீரர்களும் நாளை காலைக்கு தமிழகம் வருவார்கள் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் மொத்தம் 9 ஆயிரத்து 226 வாக்குச்சாவடி மையங்கள் பிரச்னைக்குறியவை என தேர்தல் ஆணையத்தால் கண்டறியப்பட்டுள்ளது. அதில், ஆயிரத்து 337 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமானவை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 12 வாக்குச்சாவடி மையங்களை உள்ளடக்கிய மண்டலத்திற்கு 5 போலீசார் கொண்ட ரோந்துபடையும் அமைக்கப்பட்டுள்ளது.

ad

ad