புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 ஏப்., 2014



மான்டி கார்லோ டென்னிஸ் போட்டியின் இறுதிச்சுற்றில் ஸ்விட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த வாவ்ரிங்காவும், ரோஜர் ஃபெடரரும் மோதுகின்றனர்.
இவர்கள் இருவரும் ஒரே நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதால் கூடுதல் எதிர்பார்ப்பை இறுதிச்சுற்று ஏற்படுத்தியுள்ளது.

மொனாகோவின் மான்டி கர்லோவில் உள்ள களிமண் ஆடுகளத்தில் நடைபெற்று வரும் அரையிறுதிச்சுற்று சனிக்கிழமை நடைபெற்றது. இதில், காலிறுதியில் களிமண் நாயகனும் தரவரிசையில் முதலிடத்தில் உள்ளவருமான ரஃபேல் நடாலை தோற்கடித்த டேவிட் ஃபெரர், அரையிறுதியில் ஆஸ்திரேலிய ஓபனில் பட்டம் வென்ற வாவ்ரிங்காவை எதிர் கொண்டார்.
இதில் 6-1, 7-6 (7/3) என்ற நேர் செட் கணக்கில் தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள வாவ்ரிங்கா வெற்றி பெற்றார்.
இந்த ஆட்டத்தின் முதல் செட்டில் ஆதிக்கம் செலுத்திய வாவ்ரிங்கா 5-0 என்ற முன்னிலை வகித்தார். 2-வது செட்டில் ஃபெரர் ஓரளவு சவாலை அளித்தபோதும், அவரைப் பின்னுக்குத் தள்ளி இறுதிச்சுற்றை எட்டினார் வாவ்ரிங்கா. வெற்றி குறித்து அவர் கூறுகையில், "இந்த ஆட்டத்தை நன்றாகத் தொடங்கினேன். காற்று அதிகமாக அடித்தபோதும் சிறப்பாக விளையாடினேன். 2-வது செட்டில் ஃபெரர் ஆக்ரோஷமாக விளையாடினார்' என்றார்.
தனது தோல்வி குறித்து ஃபெரர் கூறுகையில், "நம்ப முடியாத அளவுக்கு வாவ்ரிங்கா விளையாடினார். அவரை என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை. அவருக்கு எதிராக பந்தை வலுவாகத் திருப்ப முடியவில்லை. ஆனால், 2-வது செட்டில் அவர் சில தவறுகளைச் செய்தார். அதனால், எனது ஃபோர்ஹேண்ட் ஷாட் மூலம் சிறப்பாக விளையாடினேன். இருப்பினும், என்னை விட அவர் அற்புதமாக விளையாடி வெற்றி பெற்றார்' என்று தெரிவித்தார்.
ஜோகோவிச் தோல்வி: மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சை 7-5, 6-2 என்ற நேர் செட்களில் ஃபெடரர் வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.
ஜோகோவிச் வலது மணிக்கட்டில் ஏற்பட்ட காயம் காரணமாக அவதிப்படுவதால் ஃபெடரர் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டது. எதிர்பார்த்தவாறே, ஜோகோவிச்சினால், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை.
இப்போட்டியின் இறுதிச்சுற்றுக்கு 4-வது முறையாக ஃபெடரர் முன்னேறியுள்ளார். கடந்த 3 முறையும் அவர் தோல்வியைச் சந்தித்தார். அதனால், முதன்முறையாக மான்டி கார்லோ டென்னிஸ் பட்டத்தை வெல்ல ஃபெடரர் ஆவலுடன் உள்ளார்.

ad

ad