புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 பிப்., 2015

மகிந்த அன்ட் கோ தியானத்தில் ஈடுபட 100 கோடியில் தியான நிலையம்


மகிந்த ராஜபக்ச மற்றும் அவருக்கு நெருக்கமானவர்கள் தியானத்தில் ஈடுபடுவதற்காக சுமார் 100 கோடி ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட தியான நிலையம் ஒன்று கடவத்தை இம்புல்கொட ராஜசிங்க மாவத்தையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அந்த தியான நிலையத்திற்கு கடந்த புதன் கிழமை சென்ற போது அங்கு மூன்று சிவில் பாதுகாப்பு படையினர் இருந்ததாக பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
குறித்த தியான நிலையத்திற்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உட்பட முக்கிய நபர்கள் வந்து சென்றுள்ளதாக சிவில் பாதுகாப்பு படையினர் ராமநாயக்கவிடம் கூறியுள்ளார்.
முன்னைய அரசாங்கம் ஆட்சியில் இருந்த போது சுமார் 60 சிவில் பாதுகாப்பு படையினர் அங்கிருந்தனர் எனவும் அரசாங்கம் கவிழ்ந்த பின்னர் அவர்கள் அங்கிருந்து சென்று விட்டனர் எனவும் சிவில் பாதுகாப்பு படையினர் ஊடாகவே தியான நிலையத்தின் அனைத்து தேவைகளும் பூர்த்தி செய்யப்படுவதாகவும் ரஞ்சன் ராமநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
பௌர்ணமி தினங்களில் பிரதேச வாசிகள் எவருக்கும் அங்கு செல்ல அனுமதி வழங்கப்படுவதில்லை தன்னிடம் தெரிவிக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

ad

ad