புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 மார்., 2016

தான் செய்த பிழையை ஒத்துக் கொள்வதன் மூலம்துரைரத்தினம் தான் இந்த விருதுக்கு மாத்திரமன்றி இன்னும் பல விருதுகளுக்கும் தகுதியானவன் என்பதை அவர் நிலைநிறுத்த வேண்டும்..சண் தவராசா


ஊடகர் இரா துரைரெத்தினம் சமூக ஊடகத்தில் தெரிவித்த சாதிவெறிக் கருத்து தொடர்பில் பல்வேறு கருத்தாடல்கள் சமூக ஊடகங்களில் பகிரங்கமாகவும்,
முகப்புத்தகத்தின் உள் பெட்டிகளில் இரகசியமாகவும் நடைபெற்று வருகின்றன. புதினப்பலகை போன்ற ஊடகங்கள் குறித்த விடயத்தை பரந்த வெளிக்கு எடுத்துச் சென்ற அதேவேளை ஐ.பி.சி. ஊடக நிறுவனத்தால் வழங்கப்பட்ட விருது பொருத்தமற்றது என்ற கருத்துக்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இவற்றுக்கும் அப்பால் என்போன்ற ஊடகவியலாளர்களை நோக்கியும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. எங்கோ நடக்கின்ற விடயங்களைப் பற்றியெல்லாம் கட்டுரை எழுதும் சண் தவராஜா தனது சக ஊடகவியலாளர் விடயத்தில் மௌனம் அல்லது கள்ள மௌனம் சாதிக்கிறார் என்ற விமர்சனம் முன்வைக்கப்பட்ட வருகின்றது.
இத்தகைய சூழçல் ஒரு தன்னிலை விளக்கத்தை அளிக்க வேண்டிய நிலையில் நான் உள்ளதாக நினைக்கின்றேன்.
சுவிசில் வாழும் தம்பி இணுவையூர் மயூரன் தனது முகப் புத்தகத்தில் கடந்த 26 ஆம் திகதி வெளியிட்டிருந்த பதிவில் எனது பெயரையும் இணைத்திருந்தார். அதனைப் பார்த்த போது, முதலில் எனக்குத் தோன்றிய எண்ணம் ஐ.பி.சி. விருதை ஒட்டி பழைய பதிவு ஒன்றை வைத்துக் கொண்டு இவ்வாறான பிரசாரம் ஒன்று மேற்கொள்ளப் படுகின்றது என்பதே.
ஏனெனில், இன்று 29 ஆம் திகதி நண்பகல் நண்பர் ஒருவருடன் பேசும்வரை தோழர் ரவிக்குமாருக்கும் துரைரெத்தினத்தக்கும் இடையே நடைபெற்ற உரையாடல் தொடர்பில் நான் நினைத்திருந்தது அது பழைய சம்பவம் என்பதையே. அதாவது, செப்டெம்பரில் ஜெனீவாவில் திருமுருகனுக்கும் துரைரெத்தினத்துக்கும் இடையே நடைபெற்ற சம்பவம் மனதில் பதிந்திருந்த காரணத்தால் இது அதுவே என்றே நினைத்திருந்தேன். எனது நினைவு தவறு என்பதை நண்பர் அனுப்பிய இணைப்பு மூலமே தெளிவாகத் தெரிந்து கொண்டேன்.
சுமார் 25 வருட காலமாக துரைரெத்தினம் அவர்களோடு பழகியதில் அவரது குணநலன்கள் பற்றி நான் அதிகம் தெரிந்து வைத்துள்ள படியால் அவரது வார்த்தைப் பிரயோகம் எனக்கு அதிர்ச்சியை அளிக்கவில்லை. அவர் பிரயோகித்த சொல்லுக்காக அவர் மன்னிப்புக் கோரவில்லை என்பதுவும் ஆச்சரியம் தரவில்லை.
பொதுவெளியில் அவர் பாவித்த சொற்கள் கண்டிக்கத்தக்கவை என்பதில் எவருக்கும் - துரைரெத்தினம் உட்பட – மாற்றுக் கருத்து இருக்க முடியாது. அவர் தான் பாவித்த வார்த்தைகளைத் திரும்பப் பெறுவதுடன், அதற்காக மன்னிப்புக் கோர வேண்டும் என்றும் உரிமையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
எங்கள் இருவருக்கும் இடையே பல விடயங்களில் கருத்து முரண்பாடு இருக்கிறது என்பதை மறைக்க வேண்டிய தேவையில்லை. ஐ.பி.சி. விருதுக்காக அவரின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ள செய்தி வெளியே கசிந்த போது, துரைரெத்தினம் அவர்களுக்கு எதிராகவும், ஐ.பி.சி. நிறுவனத்திற்கு எதிராகவும் காட்டமான பல விமர்சனங்கள் முன்வைக்கப் பட்டன. என்னிடம் கூடப் பலர் இதுபற்றி உரையாடினார்கள்.
ஒருவருக்கு விருது வழங்குவது ஒரு நிறுவனத்தின் தனிப்பட்ட உரிமை. அதில் நாம் தலையிட முடியாது. அதேவேளை, துரைரெத்தினம் அவர்களின் ஊடகப் பணியையும் குறைத்து மதிப்பிட முடியாது. என்னோடு பேசியவர்களுக்கு அவரின் ஊடகப்பணி தொடர்பாக நான் விளக்கமாக எடுத்துக் கூறியிருந்தேன்.
தவிர, விமர்சனங்களை முன்வைத்த பலரும் அவரின் துறைசார் தகைமையைக் குறித்துக் கேள்வி எழுப்பவில்லை. மாறாக, அவரின் பண்புசார் தகைமைகளைக் குறித்தே கேள்வி எழுப்பினர்.
ஆனால், ஐரோப்பியத் தளத்தில் அவருக்கு விருது வழங்கக் கூடாது என்ற கருத்தே பெரிதும் பேசப்பட்டது. உண்மையில், தோழர் ரவிக்குமார் விவகாரம் வருவதற்கு முன்னரேயே துரைரெத்தினம் அவர்களுக்கு விருது வழங்கப் படுவதற்கு எதிரான உணர்வு கிளம்பி விட்டது. குறித்த விவகாரம் இத்தகையோருக்கு மேலதிக ஆயுதமாக மாறிவிட்டது என்பதே உண்மை.
இரா துரைரெத்தினம் அவர்கள் விருது பெறுவது இது முதன் முறையல்ல. அவர் பல்வேறு நிகழ்வுகளில் பல்வேறு விருதுகளைப் பெற்றிருக்கின்றார். அந்த வேளைகளில் எல்லாம் அவரோடு சேர்ந்து அவரோடு பணியாற்றிய நாங்களும் பெருமைப் பட்டிருக்கின்றோம்.
தற்போது ஐரோப்பாவின் மிகப் பாரிய ஊடக நிறுவனங்களுள் ஒன்றான ஐ.பி.சி. நிறுவனம் அவருக்கு வாழ்நாள் சாதனையாளர் என்ற விருதைத் தந்திருக்கின்றது. அந்த விருதின் மாண்பைக் காக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் அவருக்கும் இருக்கிறது. எனவே, - தனது வரட்டுக் கௌரவத்தைத் தள்ளிவைத்து விட்டு - தான் செய்த பிழையை ஒத்துக் கொள்வதன் மூலம் தான் இந்த விருதுக்கு மாத்திரமன்றி இன்னும் பல விருதுகளுக்கும் தகுதியானவன் என்பதை அவர் நிலைநிறுத்த வேண்டும் என உரிமையுடன் கேட்டுக் கொள்கிறேன்.Muthaliar Chenthurselvan உண்மையான உண்மை
Varasithy Vinaayagar அவர்மீது மீது பற்றுக் கொண்டனான் ,அவர்மேல் அன்பு பாசம் கொண்டனான் ! அவரை ,ரி.ஆர் .ரி , குகநாதன் , மூலமாகத்தான் ,அடியேன் அறிந்தேன் , ஒருகாலத்தில் ! அவர்சொல்லித்தான் ,முதல் முதலில் அடியேன் , அன்புத் தம்பி திரு நிராச் டேவிட்டை , சந்தித்தேன் !
சுவிசில் அவர் இருந்து வாழாத காலத்து ,விடையங்களை , அவருக்கு முழுமையாக தெரியாத , விசையங்களை அவர் எப்படி எழுதுவார் !!! இதுதான் எனது கேள்வி !!!
Veluppillai Suppiah அவர்மீது மீது பற்றுக் கொண்டனான் ,அவர்மேல் அன்பு பாசம் கொண்டனான் ! அவரை ,ரி.ஆர் .ரி , குகநாதன் , மூலமாகத்தான் ,அடியேன் அறிந்தேன் , ஒருகாலத்தில் ! அவர்சொல்லித்தான் ,முதல் முதலில் அடியேன் , அன்புத் தம்பி திரு நிராச் டேவிட்டை , சந்தித்தேன் !
சுவிசில் அவர் இருந்து வாழாத காலத்து ,விடையங்களை , அவருக்கு முழுமையாக தெரியாத , விசையங்களை அவர் எப்படி எழுதுவார் !!! இதுதான் எனது கேள்வி !!!
Logan Subramaniam இதுதான் இன்றைய உண்மையின் தர்சனம், தர்மம் வெல்லும் , ஊடகவியளார்களே!!!நாளை நமதே!!!!
Balsubramaniam Jeyapirakasam சன் தவராஜாவின் கருத்தை வரவேற்கிறேன்.அவர் முன்மொழிந்ததை நானும் சகதோழர்களும்வழிமொழிகிறோம்.இப்போது துரைரத்தினத்திடமிருந்து கிட்ட வேண்டியது உடனடிச் செயல்பாடு. தவறைத் திருத்திக் கொள்ளுதல்.
Siva-sandrabalan Web-of Pungudutivu
உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்...

ad

ad