புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 பிப்., 2019

ஜனாதிபதி வேட்பாளராக மைத்திரி பரிந்துரைக்கப்பட்டமைக்கு அங்கீகாரம்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கான சுதந்திரக் கட்சியின் வேட்பாளராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின்
பெயர் பரிந்துரைக்கப்பட்டமைக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அநுராதபுரத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற சுதந்திரக் கட்சியின் மறுசீரமைப்பு மாநாட்டில் இந்த யோசனை, நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திசாநாயக்கவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

ஐ.தே.க. அரசாங்கத்துடன் இணைய மாட்டோம் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளதோடு, எதிர்வரும் தேர்தலில் தனித்தே போட்டியிவோம் என குறிப்பிட்டுள்ளது. அத்தோடு, ஜனாதிபதி வேட்பாளராக மைத்திரியா அல்லது ராஜபக்ஷ தரப்பில் ஒருவரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்நிலையில், சுதந்திரக் கட்சி மாநாட்டில் ஜனாதிபதி மைத்திரியின் பெயருக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது

ad

ad