ஈழத்தமிழர் சுயாட்சிக்கழகத்தின் செயலாளர் அனந்தி சசிதரன் காணாமல் போன தனது கணவனை தேடுவதற்காகவே தேர்தல்க்களத்திற்கு வந்தவர். வடக்கு மாகாணசபையிலே அமைச்சராக இருந்த போதும் யாழ் மாவட்டத்தில் சொந்தவீடு கூட கட்டிக்கொள்ளவில்லை. வாடகை வீட்டில் வசித்து வரும் நிலையிலும் நாடாளுமன்றத்தேர்தல்செலவுக்கு தமிழ் உணர்வாளர்கள் நிதி தருகிறோம் என்று சொன்ன போது கொரோனா நிவாரணம் தான் முக்கியம் என்று கூறி அந்தப்பணத்திற்கு நிவாரணம் கொடுத்தவரென கட்சி செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
எனினும் மாகாணசபையில் கிடைத்த சொகுசு கார் பெமிட் விற்பனையால் கிடைத்த ஏழு மில்லியன்,புலம்பெயர் தரப்புக்கள் கொடுத்த பணமென செல்வ செழிப்பில் வாழும் அவர் அனைத்து தரப்புக்களும் ஒழிக்க வேண்டுமென கூறும் மீற்றர் வட்டி சிக்கலுள் இருப்பதாக எதிர்தரப்புக்கள நையாண்டியை முன்னெடுத்துள்ளன