புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 ஏப்., 2021

தன்சானிய ஜனாதிபதியின் இறுதிச் சடங்கில் ஏற்பட்ட துயரம்! 45 பேர் பரிதாபமாக பலி

www.pungudutivuswiss.com
தன்சானிய ஜனாதிபதி ஜோன் மெகுபுலியின் இறுதிச் சடங்கில் ஏற்பட்ட சன நெரிசலில் சிக்கி 45 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த 17 ஆம் திகதி காலமான அவரின் பூதவுடல் ஹிக்ரு மைதானத்தில் கடந்த வாரம் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.

ஜோன் மெகுபுலியின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக இலட்சக்கணக்கான மக்கள் வருகைத் தந்திருந்தனர்.

சிலர் அந்த மைதானத்தின் சுவர் ஏறி குதித்து அங்கு சென்ற போது திடீரென அந்தச் சுவர் இடிந்து கீழே விழுந்துள்ளது.

இதன்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 45 பேர் உயிரிழந்துள்ளதாக தன்சானியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மறைந்த ஜனாதிபதியின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்த சென்ற பொதுமக்கள் 45 பேர் நெரிசலில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அந்த நாட்டில் மேலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

ad

ad