புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 ஏப்., 2021

வடக்கிலும் பரவும் ஆபத்து! - வெளியே வரவேண்டாம்.

www.pungudutivuswiss.com
வடமாகாணத்தில் கொரோனா கட்டுப்பாட்டில் இருந்தாலும், புத்தாண்டு தினத்திற்கு பின்னர் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ளது. இலங்கை முழுவதும் நேற்று ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இனம் காணப்பட்டுள்ளனர்.
ஆகவே வடமாகாணத்திலும் இது போன்று பரவல் அதிகரிக்க வாய்ப்புக்கள் இருப்பதாக என வடமாகாண சுகாதார பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வடமாகாணத்தில் கொரோனா கட்டுப்பாட்டில் இருந்தாலும், புத்தாண்டு தினத்திற்கு பின்னர் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ளது. இலங்கை முழுவதும் நேற்று ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இனம் காணப்பட்டுள்ளனர். ஆகவே வடமாகாணத்திலும் இது போன்று பரவல் அதிகரிக்க வாய்ப்புக்கள் இருப்பதாக என வடமாகாண சுகாதார பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் மக்களின் பயணங்களில் எந்தவித கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை, ஆகவே மக்களின் பயணங்கள் தடையின்றி இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. எனவே எந்த நேரத்திலும் வடமாகாணத்தில் கொரோனா பரவல் அதிகரிக்கும் வாய்ப்புக்கள் உள்ளன.

எனவே பொதுமக்கள் அநாவசியமாக வீட்டை விட்டு வெளியில் செல்வதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் தற்போது தனியார் கல்வி நிலையங்கள், பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் என்பன மூடப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் இயலுமானவரை வெளியில் செல்வதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ad

ad