புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 டிச., 2021

லண்டனில் ஒரு நாளில் 1 லட்சத்தி 86,000 ஆயிரம் பேருக்கு ஒமிக்ரான்: வைத்தியசாலைகள் நிரம்பத் தொடங்கியது

www.pungudutivuswiss.com
பிரித்தானியாவில் வரலாறு காணாத அளவு, ஒமிக்ரான் வைரஸ் பரவ ஆரம்பித்துள்ளது. நேற்றைய தினம்(29) மட்டும் சுமார் 1 லட்சத்தி 86,000 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இது இவ்வாறு இருக்க, வைத்தியசாலையில் அனுமதியாகும் நோயாளிகளின் எண்ணிக்கையும் சடுதியாக அதிகரித்துள்ளது. இதனால் பல வைத்தியசாலைகள் நிரம்பத் தொடங்கியுள்ளது என சுகாதார துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். எது எவ்வாறு இருப்பினும், இம் முறை லாக் டவுன் எதனையும் அறிவிக்கப் போவது இல்லை என்ற பிடிவாதத்தில் பொறிஸ் ஜோன்சன் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. எனவே மருத்துவ விஞ்ஞானிகள் தெரிவித்த கருத்தை, பொறிஸ் புறம்தள்ளியுள்ளார்.

ad

ad