புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 ஜன., 2022

ரஷ்யாவுக்கு அடி பணிந்த ஜேர்மனி: உக்கிரைன் நாட்டிற்கு ஆயுதம் வழங்க மறுத்து தொடை நடுங்குகிறது ?

www.pungudutivuswiss.com
ஐரோப்பிய நாடுகள் அனைத்தும் உக்கிரைன் நாட்டிற்கு தமது ஆதரவை தெரிவித்து வரும் நிலையில். பிரான்ஸ் இதில் பங்கு கொள்ளாமல் இருக்கிறது. ஆனால் ஜேர்மனியோ ரஷ்யாவுக்கு முற்றாக அடி பணிந்த நாடாக மாறிவிட்டதோ என்று எண்ணத் தோன்றுகிறது. காரணம் உக்கிரைன் நாட்டுக்கு ஆயுதங்கள் கொடுக்க ஜேர்மனி மறுத்துள்ளதோடு. உக்கிரைனுக்கு ஆயுதங்களை கொண்டு செல்லும் விமானங்கள் கூட, தமது வான் பரப்பில் பறக்க கூடாது என்று ஜேர்மனி கூறியுள்ள விடையம், பல உலக நாடுகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. இதற்கு முக்கிய காரணமே சமையல் எரிவாயு தான். ரஷ்யாவில் இருந்து தான் ஜேர்மனிக்கு 95% சத விகிதமான சமையல் எரிவாயு பைப் லைன் ஊடாக வருகிறது. இதனை ரஷ்யா நிறுத்தினால் போதும் முழு ஜேர்மனியுமே இருட்டில் மூழ்கிவிடுவதோடு … அங்கே


எரிவாய்வு இல்லாமல் போய்விடும். இதனால் ரஷ்யாவை தான் முழுக்க முழுக்க ஜேர்மனி நம்பி இருக்கிறது. இப்படியான ஒரு நிலை தமக்கு ஏற்படக் கூடாது என்று தான் பிரித்தானியா சமையல் எரிவாயு ஊடாக வீட்டை சூடாக்கும் திட்டத்தை கொஞ்சம் கொஞ்சமான நிறுத்தி வருவதோடு. மின்சாரத்தில் வீட்டை சூடாக்கும் மற்றும் வென்னீரை உருவாக்கும் திட்டத்தை ஊக்குவித்து வருகிறது. 2023ம் ஆண்டு தொடக்கம் பிரித்தானியாவில் புதிதாக கட்டப்படும், வீடுகளில் கேஸ் பாயிலர் இருக்காது. மாறாக மின்சாரத்தில் வெப்பமாக்கும் பாயிலர்களே இருக்கும்

ad

ad