புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 ஜன., 2022

ரஷ்யா மீது பயத்தில் பின் வாங்கிய நேட்டோ நாடுகள்: தனியாக களம் இறங்கும் அமெரிக்கா- உக்கிரைன்

www.pungudutivuswiss.com
உக்கிரைன் நாட்டை ரஷ்யா கைப்பற்ற, தனது படைகளை அனுப்பியுள்ளது யாவரும் அறிந்த விடையம். ஆனால் நேட்டோ நாடுகள் கூட்டாக இணைந்து ரஷ்யாவை எதிர்க்கும் என்று எதிர்பார்கப்பட்டது. ஆனால் ரஷ்யா மீது உள்ள பயத்தால் பல ஐரோப்பிய நாடுகள், உக்கிரைனுக்கு உதவ அஞ்சுகிறது. இதில் முக்கியமாக ஜேர்மனி, பிரான்ஸ் போன்ற நாடுகள் அடங்குகிறது. சீனா மற்றும் ரஷ்யாவின் ஆதிக்கத்தை அடக்கவே நேட்டோ நாடுகள் அணி உருவாகியது. ஆனால் தற்போது நேட்டோ நாடுகள் ரஷ்யா மீது உள்ள பயம் காரணமாக உதவி செய்ய மறுப்பது பெரும் கேலிக் கூத்தாக அமைந்துள்ளது. ஒரு சண்டை வரும்போது தான் உங்கள் நண்பர் யார் என்பதனை நீங்கள் உணர்ந்து கொள்வீர்கள் என்று கூறுவார்கள். தற்போது எந்த நாடுகள் பயத்தில் நடுங்கி ஒதுங்கியுள்ளது என்பது தெளிவாக அமெரிக்காவுக்கு புரிந்து விட்டது. ஆனால் பிரித்தானியா எந்த ஒரு அச்சமும் இன்றி…


உக்கிரைன் நாட்டுக்கு தொடர்ந்து உதவி வருவதோடு, ரஷ்ய டாங்கிகளை அழிக்கும் குண்டுகளை எப்படி பயன்படுத்துவது என்று பயிற்சியும் கொடுத்து வருகிறது. இறுதியில் போர் என்று ஒன்று, ஆரம்பித்தால் அமெரிக்காவோடு துணை நிற்க்கப் போவது பிரித்தானியா மட்டும் தான் என்பது தெளிவாகப் புரிகிறது.

ad

ad