புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 ஜன., 2022

மோசடி வழக்கில் தேடப்பட்டுவந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கைது!

www.pungudutivuswiss.com

ரூ. 3 கோடி மோசடி வழக்கில் தேடப்பட்டுவந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கைது செய்யப்பட்டார். அ.தி.மு.க. ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர் கே.டி.ராஜேந்திரபாலாஜி. இவர் மீது, அரசு துறைகளில் வேலை வாங்கித்தருவதாகவும், கட்சிப் பணிகளுக்காக செலவு செய்த தொகையை திருப்பித் தராமலும் ரூ.3 கோடியே 10 லட்சம் மோசடி செய்ததாக புகார் அளிக்கப்பட்டது.

ரூ. 3 கோடி மோசடி வழக்கில் தேடப்பட்டுவந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கைது செய்யப்பட்டார். அ.தி.மு.க. ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர் கே.டி.ராஜேந்திரபாலாஜி. இவர் மீது, அரசு துறைகளில் வேலை வாங்கித்தருவதாகவும், கட்சிப் பணிகளுக்காக செலவு செய்த தொகையை திருப்பித் தராமலும் ரூ.3 கோடியே 10 லட்சம் மோசடி செய்ததாக புகார் அளிக்கப்பட்டது

அதன்பேரில் பொலிஸார் பல்வேறு பிரிவுகளின் கீழ் ராஜேந்திர பாலாஜி மற்றும் அவரது உதவியாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இதையடுத்து, ராஜேந்திர பாலாஜி முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர் கடந்த 17-ஆம் திகதி முதல் தலைமறைவானார்.

அதனைத் தொடர்ந்து, 8 தனிப்படைகள் அமைத்து பொலிஸார் அவரை தேடி வந்தனர்.

கோவை, மதுரை, தென்காசி, பெங்களூரூ மற்றும் கேரளா உள்ளிட்ட பல பகுதிகளுக்கு சென்று அவரை தேடும் பணியில் தனிப்படையினர் ஈடுபட்டு இருப்பதாக மாவட்ட காவல்துறை தெரிவித்தது.

மேலும் சைபர் கிரைம் பொலிஸார் மூலம் ராஜேந்திர பாலாஜியுடன் நெருங்கிய தொடர்புடைய நபர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்களின் செல்போன் எண்கள் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் கர்நாடக மாநிலம் ஹாசன் பகுதியில் ராஜேந்திர பாலாஜி பதுங்கி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அங்கு விரைந்து சென்ற பொலிஸார் இன்று அதிரடியாக அவரை கைது செய்தனர்.

ராஜேந்திர பாலாஜி வெளிநாடுகளுக்கு சென்று விடக்கூடாது என்பதற்காக விமான நிலையங்களுக்கு ‘லுக்-அவுட்' நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் 6 வங்கிக்கணக்குகள் முடக்கப்பட்டன.

கீழ் கோர்ட்டு மற்றும் ஐகோர்ட்டில் தனது முன்ஜாமின் மனு தள்ளுபடியானதை அடுத்து ராஜேந்திர பாலாஜி சுப்ரீம் கோர்ட்டை நாடினார். தனக்கு முன்ஜாமின் வழங்கக்கோரி அவர் தாக்கல் செய்திருந்த மனு நாளை விசாரணைக்கு வர இருந்தது. ஆனால், அதற்குள் தனிப்படை பொலிஸார் ராஜேந்திர பாலாஜியை சுற்றிவளைத்து கைது செய்தனர். கைதான ராஜேந்திர பாலாஜி தமிழகத்துக்கு அழைத்துவரப்படுகிறார்.

ad

ad