புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 மார்., 2022

விமல் கூட்டு கூண்டோடு வெளியே

www.pungudutivuswiss.com
முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுந்திர முன்னணியைச் சேர்ந்த அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் அரசாங்கத்தில் வகிக்கும் பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர் என்று, கட்சி அறிவித்துள்ளது.

அதற்கமைய, களஞ்சிய வசதிகள், கொள்கலன் முனையங்கள், துறைமுக வழங்கல் வசதிகள், இயந்திரப் படகுகள் மற்றும் கப்பற் தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் ஜயந்த சமரவீர, தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

தேசிய சுதந்திர முன்னணியின் தேசிய அமைப்பாளராக ஜயந்த சமரவீரர் பதவி வகிக்கும் நிலையில், தனது இராஜாங்க அமைச்சுப் பதவியை நேற்றுமுன்தினம் (07) முதல் அமுலுக்கு வரும் வகையில் இராஜினாமா செய்துள்ளதாக ஜயந்த சமரவீர உறுதிப்படுத்தியுள்ளார்.

விமல் வீரவன்ச ​தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியில், ஜயந்த சமரவீர (களுத்துறை), நிமல் பியதிஸ்ஸ (நுவரெலியா), காமினி வெலேபொட (இரத்தினபுரி) உத்திக பிரேமரத்ன (அனுராதபுரம், மற்றும் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரான மொஹமட் முஸ்ஸமில் ஆகியோர் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

ad

ad