புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 ஜூன், 2022

படுகொலைகள் குறித்து பிள்ளையானின் சகா ஐ.நாவில் சாட்சியம்!

www.pungudutivuswiss.com



தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியை சேர்ந்த ஒருவர் ஜெனீவாவில் இராஜதந்திரிகள் மத்தியில்  உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் கொலைகள் உட்பட பல விடயங்கள் குறித்த இரகசிய தகவல்களை  அம்பலப்படுத்தியுள்ளார்.

தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியை சேர்ந்த ஒருவர் ஜெனீவாவில் இராஜதந்திரிகள் மத்தியில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் கொலைகள் உட்பட பல விடயங்கள் குறித்த இரகசிய தகவல்களை அம்பலப்படுத்தியுள்ளார்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பல கொலைகள் பலவந்தமாக காணாமல்ஆக்கப்பட்ட சம்பவங்கள் குறித்த மிக முக்கியமான தகவல்களை குறிப்பிட்ட நபர் தெரிவித்துள்ளார் என இராஜதந்திர வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

குறிப்பிட்ட நபர் கொழும்பில் உள்ள மற்றும் வெளிநாடுகளில் உள்ள முக்கிய நாடுகளின் தூதரகங்களிற்கு எழுத்துமூலம் சில தகவல்களை வழங்கியுள்ளார்.

குறிப்பிட்ட நபர் இலங்கையிலிருந்து தப்பி வெளியேறி தனது உயிருக்கு ஆபத்து என தெரிவித்து வெளிநாடொன்றில் தஞ்சமடைந்துள்ளார்.

ஐக்கியநாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தை சேர்ந்த அதிகாரிகளை இந்த நபர் சந்தித்துள்ளார் தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியும் ஏனையவர்களும் இழைத்த குற்றங்கள் குறித்த தகவல்களை வழங்கியுள்ளார்.

ஐநா அதிகாரிகள் தொடர்ச்சியாக ஐந்துநாட்கள் இந்த நபரிடமிருந்து வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளனர். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நடராஜா ரவிராஜ் ஜோசப்பரராஜசிங்கம் படுகொலைகள் ஊடகவியலாளர் பிரகீத்எக்னலிகொட பலவந்தமாக காணாமல்போகச்செய்யப்பட்டமை உட்பட பல சம்பவங்கள் குறித்து குறிப்பிட்ட நபர் தகவல்களை வழங்கியுள்ளார், தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி நேரடியாக தொடபுபட்ட கொலைகள் உட்பட கட்சியுடன் தொடர்புடைய குற்றங்கள் குறித்தும் இவர் தகவல்களை வழங்கியுள்ளார்.

ஐநா மற்றும் இராஜதந்திர வட்டாரங்களிற்கு வழங்கப்பட்ட தகவல்கள் முன்னைய அரசாங்கத்துடன் தொடர்புடைய சிலர் மீது நேரடியாக குற்றச்சாட்டுகளை சுமத்தும் வகையில் அமைந்துள்ளன,இந்த தகவல்களை அடிப்படையாக வைத்து ஐநாவும் தூதரங்களும் என்ன நடவடிக்கையை எடுக்கப்போகின்றன என்பது தெரியவில்லை,என ஆங்கில ஊடகம் தெரிவித்துள்ளது.

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரை தொடர்புகொள்வதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை எனவும் ஊடகம் தெரிவித்துள்ளது.

   
   Bookmark and Share Seithy.com

    ad

    ad