புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 ஆக., 2022

எரிக்கப்பட்ட கிரீன் எகோ லொட்ஜ் றோகிதவினுடையது என அம்பலம்!

www.pungudutivuswiss.com


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இளைய மகனான ரோஹித ராஜபக்ஷவுக்குச் சொந்தமான சொகுசு ஹோட்டலுக்கு தீ வைத்து எரித்த சம்பவம் குறித்து, கொலன்ன பொலிஸாரால் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இளைய மகனான ரோஹித ராஜபக்ஷவுக்குச் சொந்தமான சொகுசு ஹோட்டலுக்கு தீ வைத்து எரித்த சம்பவம் குறித்து, கொலன்ன பொலிஸாரால் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்

சிங்கராஜ வனத்துக்கு அருகாமையில் எம்பிலிப்பிட்டிய பகுதியிலுள்ள கொலன்ன பிரதேசத்தில் அமைந்துள்ள, 'கிரீன் எகோ லொட்ஜ்' ஹோட்டலில், கடந்த மே மாதம் 10 திகதி பொருட்கள் திருடப்பட்டு தீ வைக்கப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பில் திங்கள் (22) மற்றும் செவ்வாய்க்கிழமை (23), 25 மற்றும் 50 வயதுடைய கொலன்ன பிரதேசத்சைச் சேர்ந்த சந்தேகநபர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

மே 10 அன்று இடம்பெற்ற களேபரங்களின் போது, சொகுசு ஹோட்டல் தீக்கிரையாக்கப்பட்ட பின்னர், அந்த ஹோட்டல் மஹிந்த ராஜபக்ஷவின் மகன்களில் ஒருவருக்கு சொந்தமானது என்று தகவல்கள் வெளியாகின.

அந்த ஹோட்டல் யோஷித ராஜபக்ஷவுக்கு சொந்தமானது என சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்த நிலையில், அதனை அவர் நிராகரித்திருந்தார்.

அதன்பின்னர், மஹிந்தவின் மூன்றாவது மகனான ரோஹித ராஜபக்ஷவுக்கு குறித்த ஹோட்டல் சொந்தமானது என பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இதன்மூலம் எந்த பதவியையும் வகிக்காத ரோஹிதவுக்கு ஹோட்டல் இருப்பது இந்த விசாரணை மூலம் வெளிவந்துள்ளது.

தீ வைப்பு சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் சில சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை கொலன்ன பொலிஸார் முன்னெடுக்கப்பட்டு வருகின்றனர்.

ad

ad