புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 அக்., 2022

3 பேர் மட்டுமே போட்டி . ரிஷி சுண்ணக் இம்முறை பிரதமர் ஆகவாய்ப்பு

www.pungudutivuswiss.com

லிஸ் ரஸ் பதவி விலகியதை அடுத்து, டோரி கட்சியில் 5 முனைப் போட்டி தலை தூக்கியுள்ளது. ரிஷி சுண்ணக், மீண்டும் பொறிஸ் ஜோன்சன், பென்னி , சுலைலா மற்றும் தற்போதைய பாதுகாப்பு அமைச்சர் பென் வாலஸ், ஆகியோர் பிரதமர்

பதவிக்கு போட்டி இட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில். டோரி கட்சியின் முக்கிய தலைவர்கள், 3 பேர் மட்டுமே போட்டியிட முடியும் என்று அறிவித்துள்ளதோடு. அந்த மூவரும் யார் என்பதனை இன்று(வெள்ளிக்கிழமை) அறிவிக்க உள்ளார்கள். கட்சிக்கு உள்ளே யாருக்கு அதிகம் , செல்வாக்கு உள்ளது என்று பார்த்து. அவர்களுக்கே போட்டியிடும் தகுதியை கொடுக்க தலைவர்கள் முனைப்புக் காட்டி வருகிறார்கள்.

இதில் நிச்சயம் ரிஷி சுண்ணக்கின் பெயர் உள்ளது. மேலும் 2 பேர் மட்டுமே போட்டியிட முடியும். இன் நிலையில் ரிஷி சுண்ணக்கிற்கு பெரும் வாய்ப்பு உள்ளதாக டோரிக் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள். இதேவேளை முன் நாள் பிரதமர் பொறிஸ் ஜோன்சனையும், போட்டியில் கலந்து கொள்ளுமாறு, அவரது ஆதரவாளர்கள் அழுத்தம் கொடுத்து வருகிறார்கள். ஆனால் பொறிஸ் ஜோன்சனுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பைக் கொடுப்பது தொடர்பாக பெரும் சர்சை கட்சிக்கு உள்ளே இருப்பதால், அவரை தெரிவு செய்ய மாட்டார்கள் , என்று கூறப்படுகிறது.

ad

ad