
இலங்கை கிரிகெட் வீரரான 9) அவுஸ்திரேலிய பொலிசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளார்கள். கடந்த வாரம் அவர் Tinder என்னும் செயலி மூலம், அவுஸ்திரேலியாவில் சிட்னியில் ஒரு பெண்ணைத் தொடர்பு கொண்டுள்ளார். பின்னர் அந்தப் பெண்ணை அழைத்து, ஓப்பிரா ஹவுசுக்கு அருகில் உள்ள Pub ஒன்றில், மது அருந்தியுள்ளார். அந்தப் பெண்ணுக்கு விஸ்கியை கொடுத்து, போதை ஏற்றி விட்டு. ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று.
கழுத்தில் அழுத்தி மூச்சு திணறவைத்துள்ளார். அதன் பின்னர் தனது அந்தரங்கப் பகுதியில் முத்த மிடுமாறு வற்புறுத்தி மீண்டும் மூச்சு திணறவைத்துள்ளார். இவ்வாறு சுமார் 4 தடவை செய்ததால். அந்தப் பெண் சாவு பயத்தினால், உடல் உறவுக்கு சம்மதித்துள்ளார். உடல் உறவு கொண்ட பின்னர் ஹோட்டலில் இருந்து வெளியேறிய பெண், பொலிசாரை தொடர்பு கொண்டு தனக்கு நடந்த கொடுமையை விவரித்துள்ளார். இருப்பினும் தற்போது தனுஷ்க்க இந்த குற்றச்சாட்டை எதிர்த்துள்ளார். அந்தப் பெண் தன்னோடு படுக்கை அறையில் தன்னை அணைத்தபடி உள்ள புகைப்படத்தை அவர் வெளியிட்டு. இந்தப் பெண் தன்னைப் பழி வாங்க நினைப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து பெரும் தேடுதல் வேட்டை ஒன்றை நடத்திய அவுஸ்திரேலிய பொலிசார், அவரை இறுதியாக விமானம் ஏற முன்னர் கைது செய்துள்ளார்கள். தற்போது கொலை முயற்ச்சி, கற்பழிப்பு என்று 2 பிரிவின் கீழ் தனுஷ்க மீது வழக்கு தொடுக்கப்பட உள்ளது என அதிர்வு இணையம் அறிகிறது.




