புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 ஜன., 2023

யானை- மொட்டு கூட்டு - இன்னமும் முடிவில்லை!

www.pungudutivuswiss.com


உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவது தொடர்பில் இதுவரை உத்தியோகபூர்வமான தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவது தொடர்பில் இதுவரை உத்தியோகபூர்வமான தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்

உள்ளூராட்சிமன்றத் தேர்தலை பிற்போட வேண்டிய தேவை ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவிற்கு கிடையாது. வெற்றியோ, தோல்வியோ தேர்தலை எதிர்கொள்வோம். தேர்தல் உரிய காலத்தில் நடத்தப்பட வேண்டும் என்பது கட்சியின் அடிப்படை கொள்கையாக உள்ளது.

உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கைகள் களுத்துறையில் ஆரம்பிக்கப்பட்டது. பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரசார கூட்டம் களுத்துறை நகரில் இருந்து ஆரம்பிக்கப்பட்டது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான அடுத்தக்கட்ட தேர்தல் நடவடிக்கைகளை அநுராதபுர நகரில் இருந்து ஆரம்பிக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையில் தாமரை மொட்டுச் சின்னத்தை முன்னிலைப்படுத்தி அரசியல் கூட்டணியை அமைக்க ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ லங்கா பொதுஜன பெரும்பாலான தேர்தல் தொகுதிகளில் மொட்டு சின்னத்தில் போட்டியிடும்.

பரந்துபட்ட அரசியல் கூட்டணி அமைப்பது தொடர்பில் பெரும்பாலான அரசியல் கட்சிகளுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை சாதகமாக நிறைவு பெற்றுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன பெரமுன கூட்டணியில் ஒன்றிணைந்த அரசியல் கட்சிகளை ஒன்றிணைத்து மீண்டும் புதிய நாமத்தில் அரசியல் கூட்டணி அமைக்கப்படும். ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டணி அமைப்பது தொடர்பில் இதுவரை உத்தியோகப்பூர்வமான தீர்மானங்கள் ஏதும் எடுக்கப்படவில்லை.

இரு தரப்பு பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன. ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டணிமைக்கும் போது பொதுஜன பெரமுனவின் தனித்துவத்தை விட்டுக் கொடுக்க கூடாது என பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் உறுதியாக வலியுறுத்தியுள்ளார்கள் என்றார்.

ad

ad