புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 பிப்., 2023

களனி பல்கலைக்கழகத்திற்கு அருகில் தொடரும் பதற்றம் (

www.pungudutivuswiss.com
களனி பல்கலைக்கழகத்திற்கு அருகிலிருந்து எதிர்ப்பு பேரணியொன்று 
முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் இந்த போராட்டத்தினை மேற்கொண்டுள்ளனர்.

இந்த போராட்டத்தை கலைக்க பொலிஸார் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டதையடுத்து அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.



அரசாங்கத்திற்கு எதிராகவும், பல்கலைக்கழக மாணவர்களுக்கு எதிரான அடக்குமுறைக்கு எதிராகவும், அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே தடுத்து வைக்கப்பட்டிருந்தமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, 167 நாட்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்த அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே இன்று சிறைச்சாலையில் இருந்து வௌியேறியுள்ளமையு
ம் குறிப்பிடத்தக்கது. 

ad

ad