புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 ஜூலை, 2023

இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்!

www.pungudutivuswiss.com



தண்டனைகளிலிருந்து விடுபடும் போக்கை மேலும் ஆழப்படுத்தக்கூடிய உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் உருவாக்கம் குறித்த ஜனாதிபதியின் அறிவிப்பு தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகள் இலங்கையிடம் கேள்வி எழுப்பவேண்டுமென சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்கள் கூட்டாக வலியுறுத்தியுள்ளன.

தண்டனைகளிலிருந்து விடுபடும் போக்கை மேலும் ஆழப்படுத்தக்கூடிய உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் உருவாக்கம் குறித்த ஜனாதிபதியின் அறிவிப்பு தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகள் இலங்கையிடம் கேள்வி எழுப்பவேண்டுமென சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்கள் கூட்டாக வலியுறுத்தியுள்ளன.

சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டம், இலங்கையில் ஜனநாயகத்துக்கான ஊடகவியலாளர்கள் அமைப்பு மற்றும் காணாமல்போனோர் குடும்ப ஒன்றியம் ஆகிய மூன்று அமைப்புக்களும் இணைந்து வெளியிட்டுள்ள கூட்டறிக்கையிலேயே மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளன.

இலங்கையில் இடம்பெற்ற கடந்தகால மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்கு அவசியமான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்கவேண்டும் என்றும், அதனை முன்னிறுத்தி நம்பகத்தன்மை வாய்ந்ததும் அனைவரையும் உள்ளடக்கியதுமான நிலைமாறுகால நீதி மற்றும் நல்லிணக்கப்பொறிமுறையொன்று ஸ்தாபிக்கப்படவேண்டும் என்றும் இலங்கை தொடர்பான உலகளாவிய காலாந்தர மீளாய்வின்போது நெதர்லாந்து, ஜேர்மனி, நியூஸிலாந்து, நோர்வே, அவுஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் பரிந்துரைத்திருப்பது குறித்து நாம் அவதானம் செலுத்தியுள்ளோம். இருப்பினும் இப்பரிந்துரைகளை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது.

இந்த நிராகரிப்பானது கடந்தகால மீறல்கள் தொடர்பில் நீதியை நிலைநாட்டப்படாமல் இழுத்தடிப்பு செய்யப்படுவதற்கான சாத்தியப்பாட்டையே காண்பிக்கின்றது.

காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் உள்ளிட்ட முன்னைய கட்டமைப்புக்களை ஒத்ததாகத் தற்போது ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள உண்மை மற்றும் நல்லிணக்க அலுவலகம் பாதிக்கப்பட்ட தரப்பினர் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் எதிர்பார்ப்புக்களைப் பூர்த்திசெய்யத் தவறியிருக்கின்றது.

பொறுப்புக்கூறல் தொடர்பில் மேலும் பல கேள்விகளைத் தோற்றுவிக்கக்கூடியவகையில் அண்மையில் கண்டறியப்பட்டுள்ள (முன்னைய யுத்த வலயத்தில்) மனிதப்புதைகுழியானது பாதிக்கப்பட்ட தரப்பினர் மத்தியில் பதற்றத்தை மேலோங்கச்செய்திருக்கும் பின்னணியிலேயே உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஸ்தாபிப்பது குறித்துப் பேசப்படுகின்றது.

உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பான சட்டமூலம் இன்னமும் வெளியிடப்படவில்லை. குறிப்பாக உலகளாவிய காலாந்தர மீளாய்வின்போது சில நாடுகளால் முன்மொழியப்பட்ட பரிந்துரைகளை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளமையை அடிப்படையாகக்கொண்டு நோக்குகையில், உண்மை மற்றும் நல்லிணக்க அலுவலகமானது 'குற்றவியல் விசாரணையை' வலியுறுத்தும் என்பதற்கான எவ்வித உத்தரவாதமும் இல்லை என்றே தோன்றுகிறது. குற்றவியல் பொறுப்புக்கூறலுக்கான பதிலீடாக உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஸ்தாபிப்பதென்பது சர்வதேச நியமங்களுக்கு முற்றிலும் முரணானதாகும் என்று அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ad

ad