புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 டிச., 2024

ஹைட்டியில் பில்லி சூனியம் செய்த 110 பேர் படுகொலை!

www.pungudutivuswiss.com

பில்லி சூனியம் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட 110 பேரை
ஹைட்டி ஆயுதக் கும்பல் ஒன்று கொடூரமாகப் படுகொலை
செய்தது.
ஹைட்டியின் தலைநகரான போர்ட்-ஓ-பிரின்ஸில் உள்ள ஒரு சேரியில் குறைந்தது 110 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

உள்ளூர் ஆயுதக் கும்பல் ஒன்றின் தலைவனான மிகானோவின் (மோனல் பெலிக்ஸ்) மகன் நோய்வாய்ப்பட்டு இறந்ததை அடுத்து இவர்கள் குறிவைக்கப்பட்டனர்.

மகனின் நோய்க்கு சூனியம் செய்யும் வயதான உள்ளூர்வாசிகளைக் குற்றம் சாட்டி கும்பலின் தலைவன் பாதிரியார் ஒருவரிடம் ஆலோசனைகளைப் பெற்றதாகக் கூறப்படுகிறது.

ஹைட்டியில் இந்த ஆண்டு இதுவரை பரவி வரும் ஆயுதக் கும்பல்களின் வன்முறையில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிர்ச்சியூட்டும் வகையில் 5,000 வரை எட்டியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

ஹைட்டிய தலைநகரின் பெரும்பகுதியைக் கட்டுப்படுத்தும் விவ் அன்சன்ம் கும்பல் கூட்டணியின் ஒரு பகுதியாக இந்தக் குழு உள்ளது.

ad

ad