
பாஜக கூட்டணியில் சிக்கல் தீர்ந்தது; தொகுதிப் பங்கீட்டில் கட்சிகள் சமரசம்- இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக வாய்ப்பு
பாஜக கூட்டணி தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை.
பாஜக கூட்டணியில் நிலவி வந்த தொகுதிப் பங்கீடு சிக்கல் முடிவுக்கு வந்துள்ளது. கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதிப் பட்டியலை பாஜக மேலிடம் இன்று வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் பாஜக தலை மையிலான கூட்டணியில் தேமுதிக, பாமக, மதிமுக, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, புதிய நீதிக்கட்சி ஆகியவை இடம் பெற்றுள்ளன. ஆனால், ஆரம்பத்தில் இருந்தே தொகுதிப் பங்கீட்டில் சிக்கல் ஏற்பட்டது.
பேச்சுவார்த்தையில் சிக்கல்
சில தொகுதிகளை பாமகவும் தேமுதிகவும் விடாப் பிடியாக கேட்டதால் பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை. நீண்ட நாட்களாக இழுபறி நிலையே நீடித்தது. அதே நேரத்தில் பாஜக தலைவர்களும் நிர்வாகிகளும் கூட்டணியில்