தட்டுத் தடுமாறி, பஸ் ஸ்டாண்ட்டை நெருங்கிவிட்டார் அந்த இளம்பெண். ஆனால் அதற்குமேல் நடக்கவும் முடியவில்லை; நிற்கவும் முடியவில்லை. தரையில் சாய்ந்தார்.
-
31 டிச., 2012
நான் அரசியலுக்கு வந்தால்... கலைஞர் மேடையில் ரஜினி கொளுத்திய வெடி!
சமீபகாலமாகவே தான் அரசியலுக்கு வருவது பற்றியும், இதுவரைக்கும் அரசியலுக்கு வராதது பற்றியும் ரஜினி பொது விழாக்களில் பேசி பரபரப்பைக் கிளப்பி வருகிறார். தன் பிறந்தநாள் அன்று ரசிகர்களை நேரில் அவர் சந்தித்தது முதல் இந்த பரபரப்பு பற்றிக் கொண்டது.
30 டிச., 2012
ஒட்டுமொத்த பெண்களை மதுரை ஆதினம் கொச்சைப் படுத்தியுள்ளார் என்று இந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் இன்று (30.12.2012) மதுரை ஆதினத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆதினம் அருணகிரிநாதர், தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண்கள் சமீப காலமாக ஆபாச உடை அணிகிறார்கள். அதனை தவிர்க்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகி சிகிச்சை பலனளிக்காமல் சிங்கப்பூர் மருத்துவமனையில் உயிரிழந்த மாணவியின் உடல் இன்று அதிகாலை டெல்லி கொண்டு வரப்பட்டு, இறுதிச்சடங்குகளுக்கு பின்னர் தகனம் செய்யப்பட்டது.
பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகி சிகிச்சை பலனளிக்காமல் சிங்கப்பூர் மருத்துவமனையில் நேற்று காலை உயிரிழந்த மாணவியின் உடல், இன்று அதிகாலை 3.15 மணிக்கு டெல்லி கொண்டு வரப்பட்டது,
பாகிஸ்தானுடன் முதல் ஒருநாள் போட்டி: டோணி அபார சதம்! இந்தியா-227/ 6(வி)!
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 6 விக்கெட் இழப்புக்கு 227 ரன்கள் எடுத்தது. இந்திய அணியின் தொடக்க வீரர்கள் 4 பேர் 20 ரன்களுக்குள் அவுட் ஆகி அதிர்ச்சி கொடுத்த நிலையில் ரெய்னா, டோணி, அஸ்வின்
ஓடும் பஸ்சில் கல்லூரி மாணவியை கற்பழித்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளில் பலர் புதுடெல்லி ஆர்.கே.புரம் ரவிதாஸ் கேம்ப் பகுதியை சேர்ந்தவர்கள். இச்சம்பவத்தில் ஈடுபட்ட டிரைவர் உள்பட 6 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்து வைத்துள்ளனர்.
மாணவியின் உடல்நிலை மோசமடைந்தபோது, சிறையில் உள்ள குற்றவாளிகளை இதர கைதிகள் தாக்கியதால் அவர்களை தனியாக அடைத்து வைத்திருந்தனர்.
இந்நிலையில், மாணவி நேற்று உயிரிழந்த செய்தி சிறையில் பரவியது. மதிய உணவு வாங்க சென்ற குற்றவாளிகள் 6 பேரையும் இதர கைதிகள் சூழ்ந்துகொண்டு தாக்க முயன்றனர். சிறைக்காவலர்கள், அரண்போல் சுற்றி நின்று அவர்களை காப்பாற்றி அனுப்பி வைத்தார்.
டெல்லி மாணவியின் மரணத்துக்கு காரணமான 6 பேரும் ஜாமீனில் விடுதலையாகி வெளியே வந்தால் அவர்களை எங்கள் வீட்டுக்குள் சேர்க்கமாட்டோம் என்று அவர்களது குடும்பத்தினர் கூறி உள்ளனர். அவர்களை தூக்கி போட்டாலும், அவர்களின் பிணத்தைக் கூட இந்த பகுதிக்குள் அனுமதிக்கமாட்டோம் என்று அப்பகுதி மக்கள் ஆவேசமாக கூறினார்கள்.
இன்று காலை, மாணவியின் உடல் தகனம் செய்யப்பட்ட நிலையில் டெல்லி மாணவியின் மரணத்துக்கு காரணமான 6 பேரும் ஜாமீனில் விடுதலையாகி வெளியே வந்தால் அவர்களை எங்கள் வீட்டுக்குள் சேர்க்கமாட்டோம்
பாசையூரில் இடம் பெற்ற குழு மோதலில் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றுமொருவர் படுகாய மடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் நேற்றிரவு 9 மணியளவில் இடம்பெற்றது.
சம்பவத்தில் பாசையூரைச் சேர்ந்த அல்பேர்ட் பீரிஸ் கலிஸ் தயான் (வயது23) என்ற இளைஞர் கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். மற்றுமொருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அனுராதபுரத்தில் சுகாதார வைத்திய அதிகாரியாகக் கடமையாற்றும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மருத்துவர் இ.சிவசங்கர் நேற்றுக் கைது செய்யப்பட்டு கொக்காவில் இராணுவ முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்த முடியாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவம் பற்றித் தெரியவருவதாவது:
இராணுவத்தில் இணைத்துக் கொள்ளப்பட்ட கிளிநொச்சி உருத்திரபுரத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் சாதாரண தரப்பரீட்சை எழுதுவதற்காக வீடு வந்துள்ளார். பரீட்சை முடிந்ததும் அவரை
29 டிச., 2012
ஈழத்தில் பரிதவிக்கும் விதவைகள்- அனாதை குழந்தைகளுக்கு தமிழக மக்கள் உதவ வேண்டும்: 'சங்கம் 4' விழாவில் ஜெகத் கஸ்பார் பேச்சு
`நாம்' அமைப்பும் தமிழ் மையம் அமைப்பும் இணைந்து சங்கம் 4 என்ற பெயரில் 21 நாள் மார்கழித் தமிழ் விழா ராயப்பேட்டையில் நடந்து வருகிறது. 7-ம் நாள் நிகழ்ச்சியில் "முள்ளி வாய்க்கால் முடிவா, தொடக்கமா?'' என்ற தலைப்பில்
நான்கு வயதுச் சிறுமி ஒருவர் வன்புணர்வின் பின்னர் கழுத்து நெரிக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். அவரது சடலம் நேற்றுத் தோட்டக் கிணறு ஒன்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தக் கொடூரச் சம்பவம் மண்டைதீவு 2 ஆம் வட்டாரப் பகுதியில் இடம் பெற்றுள்ளது. இந்தச் சம் பவத்தால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் விடுதலை தொடர்பில் துணைவேந்தர் பீடாதிபதிகள் மற்றும் நிர்வாக அதிகாரிகள் குறித்து மேற்கொண்டு வருகின்ற விசமத்தனமான பிரசாரங்களை நம்பி செய்திகளை வெளியிட வேண்டாம் எனவும் நிர்வாகத்துடன் தொடர்பு கொண்டு உறுதிப்படுத்திய பின்னர் பிரசுரிக்குமாறும் வணிகபீட மாணவர் ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது சம்பந்தமாக அவர்கள் வெளியிட்டுள்ள உத்தியோக பூர்வ அறிக்கை வருமாறு:
ஊடகங்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்
கடந்த நவம்பர் மாதம் 27ம் திகதி பல்கலைக்கழக சூழலிலும், மாணவர் விடுதிகளிலும் இலங்கை இராணுவ மற்றும் காவல்துறையினர் மேற்கொண்ட அத்துமீறல்களைக் கண்டித்து மறுநாள் மாணவர்கள்
ஆசியாவின் மிக நீண்ட நதியான யாங்ட்ஸியின் குறுக்கே 27 கி.மீ. தூர சுரங்க ரயில் பாதையை சீனா அமைத்துள்ளது. இப்பாதையில் ரயில் பயணம் சனிக்கிழமை தொடங்கியது.
குபெய் மாகாணத்தின் ஊகான் நகரில் அமைக்கப்பட்டுள்ள இந்த சுரங்கப்பாதை, ஊசாங் மற்றும் ஹன்கூ ரயில் நிலையங்களை இணைக்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது. இப்பாதையை 3 நிமிடங்களில் ரயில்கள் கடந்து விடும். நாள்தோறும்
டொரண்டோ மேயருக்கு எதிராக தொடரப்பட்ட அவதூறு வழக்கு ஒன்றை ஒண்டோரியோ நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.
டொரண்டோ மேயர் ராப் ஃபோர்டு மீது $6 மில்லியன் டாலர் தொகைக்கு அவதூறு வழக்கு ஒன்றை ஒரு ரெஸ்டாரண்ட் உரிமையாளர் George Foulidis ஒண்டோரியோ நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அவர் தொடர்ந்த வழக்கிற்கு போதுமான
சர்வதேச கடல் எல்லையில், விடுதலைப் புலிகளால் வடிவமைக்கப்பட்ட பாரிய நீர் மூழ்கி
!விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு ஆயுதங்கள் கப்பல் மூலம் வருவது வழக்கம். ஆசிய மற்றும் ஆபிரிக்க நாடுகளில் இருந்து இலங்கை நோக்கிவரும் ஆயுதக் கப்பல் இலங்கை கடற்பரப்பை அண்மிப்பது மிக மிகக் குறைவாகும்.
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை -5-4 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தான் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது.
ஆக்கி போட்டி கத்தார் தலைநகர் டோகாவில் நடந்தது. 6 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் நடப்பு சாம்பியன் இந்தியாவும், பாகிஸ்தானும் நேற்று முன்தினம் இரவு இறுதிப்போட்டியில் மோதின. தொடக்கத்தில் இருந்தே அனல் பறந்த
ஆக்கி போட்டி கத்தார் தலைநகர் டோகாவில் நடந்தது. 6 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் நடப்பு சாம்பியன் இந்தியாவும், பாகிஸ்தானும் நேற்று முன்தினம் இரவு இறுதிப்போட்டியில் மோதின. தொடக்கத்தில் இருந்தே அனல் பறந்த
BREAKING NEWS
டெல்லியில் பலாத்காரம் செய்யப்பட்ட மாணவி சிங்கப்பூர் மவுன்ட் எலிசபெத் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
பலத்த காயமுற்று இருந்த மாணவி மேல்சிகிச்சைக்காக சிங்கப்பூரில் உள்ள மவுண்ட் எலிசபெத் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு மாணவியின் உடல்நிலை நேற்று மிகவும் மோசமடைந்தது.
டெல்லியில் பலாத்காரம் செய்யப்பட்ட மாணவி சிங்கப்பூர் மவுன்ட் எலிசபெத் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
பலத்த காயமுற்று இருந்த மாணவி மேல்சிகிச்சைக்காக சிங்கப்பூரில் உள்ள மவுண்ட் எலிசபெத் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு மாணவியின் உடல்நிலை நேற்று மிகவும் மோசமடைந்தது.
பயங்கரவாத விசாரணைத் திணைக்களத்தினர் தம்மிடம் நடத்திய விசாரணைகளில் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பற்றிய கேள்விகள் எவையும் எழுப்பப்படவில்லை என்றும் அவர் உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்பது பற்றிய எந்தக் கலந்துரையாடலும் நடத்தப்படவில்லை என்றும் யாழ்ப்பாணப் பல்லைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
அண்மையில் யாழ். பல்கலைக்கழக நிர்வாகத்தினர், விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோரைப் பலாலி படைத் தலைமையகத்திற்கு அழைத்துப் பேசிய யாழ்
28 டிச., 2012
கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மன்னார் ஆகிய மாவட்டங்களில்அனைத்துக் குளங்களும் நிரம்பி வழிகின்றன. ஆறுகள் பெருக்கெடுத்துப் பாய்கின்றன.
இதனால் வீதிப்போக்குவரத்து பல இடங்களிலும் தடைப்பட்டுள்ளது. நேற்றிரவு தகவல்களின் படி சில குளங்களின் நீர்மட்டமும் அவற்றில் இருந்து வெளியேறும் நீர் மட்டமும் வருமாறு.. கிளிநொச்சி மாவட்டத்தில் அக்கராயன்குள நீர்மட்டம் 26 அடி 2 அடி வான் பாய்கிறது.
இலங்கைப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபாய ராஜபக்ஷவின் நேரடிக் கட்டுப்பாட்டில் செயற்படும் பயங்கரவாத விசாரணைப் பிரிவு (TID) தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை விசாரணை ஒன்றுக்கு ஆஜராகுமாறு அவசர அழைப்பாணை ஒன்றை அனுப்பிவைத்திருக்கின்றது.
கொழும்பிலுள்ள பயங்கரவாத விசாரணைப் பிரிவின் தலைமையகத்தில் நாளை சனிக்கிழமை ஆஜராகுமாறு இந்த அழைப்பாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அறியவந்திருக்கின்றது. கொழும்பிலுள்ள கஜேந்திரகுமாரின் இல்லத்தில் இந்த அழைப்பாணை நேற்று வியாழக்கிழமை மாலை கையளிக்கப்பட்ட
இலங்கை சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள பிரித்தானிய குடியுரிமை கொண்ட தமிழரை பிரித்தானிய சிறைச்சாலைக்கு மாற்றுவது தொடர்பில் நீதியமைச்சர் ரவூப் ஹக்கீமுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரனுக்கும் இடையில் பேச்சுவார்த்தையொன்று இடம்பெற்றுள்ளது. இந்த பேச்சுவார்த்தை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமையகமான தாருஸ்ஸலாமில் நேற்று புதன்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.
இதன்போதே பிரித்தானிய குடியுரிமை கொண்ட தமிழரை பிரித்தானிய சிறைச்சாலைக்கு மாற்றுவது தொடர்பில்; பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
இதன்போதே பிரித்தானிய குடியுரிமை கொண்ட தமிழரை பிரித்தானிய சிறைச்சாலைக்கு மாற்றுவது தொடர்பில்; பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
சிறிலங்கா அரசு தமிழ் மக்கள் தொடர்பில் சரியான தீர்வை முன்வைக்கத் தவறினால், மீண்டும் ஒருமுறை விடுதலைப் புலிகளின் அல்லது அவர்களைப் பின்பற்றுபவர்களின் ஆட்சேர்ப்பு முகவராக மாறும் நிலை ஏற்படும். இவ்வாறு எச்சரித்துள்ளார் பி.பி.சி. முன்னாள் செய்தியாளர் பிரான்ஸிஸ் ஹரிசன்.
“தி ஏசியன் ஏஜ்” ஊடகத்துக்கு வழங்கியுள்ள செவ்வி ஒன்றிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
"பிரபாகரன் படத்தை வைத்திருக்கவில்லை" ! ஹத்துருசிங்கவின் குற்றச்சாட்டை கைதாகியுள்ள மாணவர்கள் மறுப்பு
மாணவர்கள் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் படத்தை வைத்திருந்ததுடன், அந்த அமைப்பை மீண்டும் உருவாக்கும் வகையில் செயற்பட்டதாகவும் யாழ். இராணுவ தளபதி ஹத்துருசிங்க பீடாதிபதிகளிடம் கூறியிருந்த குற்றச்சாட்டை கைதாகியுள்ள மாணவர்கள் மறுத்துள்ளனர்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)