-

15 ஜன., 2013


றிஸானாவின் இறுதி நேரத்தில் றிஸானாவுடன் மௌலவி மக்தூம்

மௌலவி A J M மக்தூம்
அஸ்ஸலாமு அலைகும் :றிஸானாவின் பெற்றோரின் கவனத்திற்கு, நீங்கள் ஷரீஆ சட்டப் படி உங்கள் மகளுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை ஏற்று கொண்டுள்ளீர்கள் என்ற செய்தியை வாசித்தவுடன் மிகவும் சந்தோசம் அடைந்தேன். இதன் மூலம்

14 ஜன., 2013


கைது செய்யப்பட்ட யாழ். மாணவர்கள் புனர்வாழ்வு முடிந்ததும் கல்வியைத் தொடர அனுமதிக்கப்படுவர்: யாழ்.கட்டளைத் தளபதி
வெலிகந்த புனர்வாழ்வு முகாமில் தற்போது புனர்வாழ்வு பெற்றுவரும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் நான்கு பேரும் புனர்வாழ்வுக் காலம் முடிந்த பின்னர் பல்கலைக்கழகத்தில் அவர்களது கல்வியைத் தொடர அனுமதிக்கப்படுவார்கள் என

குழந்தையின் பெற்றோர் மன்னிக்க தயாரில்லை! நாட்டின் சட்டத்தை மதித்தே மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது!- சவூதி அரசாங்கம்
ரிசானா நபீக்குக்கு தமது நாட்டில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டமைக்காக உலக நாடுகள் கண்டனம் வெளியிட்டுள்ளமை தொடர்பில் சவூதி அரேபியா தமது விமர்சனத்தை வெளியிட்டுள்ளது.

பதவி விலகத் தயாரில்லை! பொலிஸ் பாதுகாப்பை பலப்படுத்துமாறு பிரதம நீதியரசர் ஷிராணி கோரிக்கை
பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கா, தனது பதவி விலகல் கடிதம் கிடைக்கப் பெற்ற போதும், அப்பதவியிலிருந்து விலகுவதற்குத் தயாரில்லை என அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


12 வயது மைனர் பெண்ணை கற்பழித்த 58 வயது சமையல்காரர்

சென்னையை சேர்ந்தவர் சீதாராம் (58). இவர் 35 ஆண்டுகளுக்கு முன்பு ஐதராபாத் சென்றார் அங்கேயே தங்கி கைதேர்ந்த சமையல்காரர் ஆனார். வாராசி கூடா என்ற இடத்தில் வாடகைக்கு அறை எடுத்து தனியாக வசித்து வருகிறார்.


மகரஜோதி : சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்

மகரஜோதியைக் காண்பதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் சதிங்கள்கிழமை மாலை பொன்னம்பல மேட்டில் மூன்று முறை ஜோதி காட்சியளிக்கும். அப்போது பக்தர்கள் ஜோதியை தரிசித்தவாறு எழுப்பும் சரண கோஷம் விண்ணை முட்டும்.
பிரெஞ்சு பிணையக் கைதியை விடுவிக்கும் முயற்சி தோல்வி
பிரான்சு ராணுவம் தன்னுடைய அதிகாரி ஒருவரைப் பிணையக் கைதியாகப் பிடித்து வைத்திருந்த சோமாலியருடன் போராடி தோல்வியடைந்தது.

South Africa 525/8d
New Zealand 121 & 157/4 (f/o) (67.0 ov)
New Zealand trail by 247 runs with 6 wickets remaining

ODI
Sri Lanka won by 8 wickets (with 59 balls remaining)

சிராணி பண்டாரநாயக்க 15ம் திகதி பதவி விலக்கப்படுவார்!சிராணி திலகவர்த்தன பதில் பிரதம நீதியரசராகிறார்
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் அமைப்பு தொடர்பான பிரச்சினைக்கு மத்தியி;ல் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அடுத்த வாரத்தில் பதில் பிரதம நீதியரசர் ஒருவரை நியமிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ஆஸி.யில் கிரிக்கெட் அணிக்கெதிராக போராட்டம் நடத்திய தமிழர்களைப் படம்பிடித்த இலங்கை புலனாய்வாளர்கள்
அவுஸ்திரேலியாவில் இலங்கை கிரிக்கெட் அணியை புறக்கணிக்கக் கோரி போராட்டம் நடத்தியவர்களை இலங்கை அதிகாரிகளுடன் தொடர்புடைய புலனாய்வாளர்கள் படம்பிடித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சவூதிக்கான இலங்கைத் தூதுவர் திருப்பியழைக்கப்பட்டதன் காரணம் என்ன?

சவூதி அரேபியாவுக்கான புதிய தூதுவர் ஒருவர் விரைவில் நியமிக்கப்படவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


பிரதம நீதியசரை பதவி விலக்கும் அறிக்கையில் கையெழுத்திட்டார் ஜனாதிபதி

நாடாளுமன்றத்தில் பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிராக நிறைவேற்றப்பட்டுள்ள குற்றப்பிரேரணை அறிக்கையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கையொழுத்திட்டுள்ளதாக


அரசாங்கத்தின் திட்டமிட்ட ஒரு சதிச் செயல்: சிறிதரனின் எம்.பி.

கிளிநொச்சியில் இருக்கும் தமது அலுவலகத்தில் இருந்து பயங்கரவாதத் தடுப்பு பொலிசார் வெடிமருந்துகளும், பல்வேறு ஆவணங்கள் சேமித்து வைக்கப்பட்ட இரு மடி கணனிகளும், ஆபாச வீடியோ ஒளிப்பதிவு செய்யப்பட்ட


முன்னாள் போராளிகள் 313 பேர் சமூகத்துடன் இணைப்பு

தைப் பொங்கல் தினத்தை முன்னிட்டு, இன்றையதினம் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் 313 சமூகத்துடன் இணைக்கப்;பட்டுள்ளதாக புனர்வாழ்வு அமைச்சின் ஆலோசகர் சதீஸ்குமார் வீரகேசரி இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.


2-வது ஒரு நாள் போட்டியில் இலங்கை வெற்றி
ஆஸ்திரேலியா - இலங்கை கிரிக்கெட் அணிகள் இடையிலான இரண்டாவது ஒரு நாள் போட்டி அடிலெய்டில் நடந்தது. இதில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 46.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 170 ரன்கள் குவித்தது.

13 ஜன., 2013


ரிசானாவின் வீட்டு நிர்மாணப்பிற்காக சவூதி இளவரசி ஹிஸ்புல்லாவிடம் 10 லட்சம் கையளிப்பு


சவூதி அரேபிய நாட்டின் இளவரசி ஆதிலாவின் இணைப்புச் செயலாளரும் விசேட ஆலோசகருமான சட்டத்தரணி யஹ்யா பின் அப்துல் அஸீஸ் அர்ராஸித் மட்டக்களப்பு, காத்தான்குடிக்கு விஜயம் செய்தார். 

DSC09555
றிஸானாவின் வீட்டிற்குச் சென்ற போது பொய்யனாகிய நான்
றிஸானாவிற்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட செய்தி கேட்டு அவரின் பெற்றாரின் நிலைமையை அறிந்து கொள்வதற்காக மூதூர் ஷhபி நகரில் அமைந்துள்ள வீட்டுக்குச் சென்றேன். அங்கு சென்றதும் அந்தக் ‘குஞ்சி’ வீட்டில் முன்பக்கத்தில் றிஸானாவின் தங்கை தனியாக குந்திக் கொண்டு அழுததையும்

புங்குடுதீவு மடத்துவெளியில் வெள்ளத்தில் பாய்ந்த தனியார் பயனிகள் பேருந்து


குறிகாட்டுவானில் இருந்து யாழ்பாணம் நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பயனிகள் பேருந்து திடிர் என வீதியை விட்டு விலகி வெள்ளம் நிறைந்த தரவையில் இறங்கியது. பயனிகள்  அனைவரும் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டதால் பெரும் சேதம் தவிர்கப்பட்டது.


கிளிநொச்சிப் பிரதேசத்திலிருந்து அண்மையில் இராணுவத்திலிணைந்து கொண்ட தமிழ் யுவதிகள் இலங்கை இராணுவத்தின் வீராங்கணைகளாக சீருடை அணிந்து கொழும்பில் இராணுத் தலைமையகத்தில் பல்வேறு சந்திப்புக்களையும் மகிழ்வுடன் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றனர். 

கிளிநொச்சி இராணுவத் தலைமையத்தின் ஏற்பாட்டில் கொழும்பு அனுப்பி வைக்கப்பட்ட இவர்கள் கொழும்பிலுள்ள இராணுவ முக்கிய தளங்களுக்கு விஜயம் செய்துள்ளதுடன் அங்கு அவர்களுக்கு அமோக வரவேற்பளிக்கப்பட்டுள்ளது. MORE PHOTOS







அன்று இரவு உண்மையில் என்ன நடந்தது ?


பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லைக்குள் நுழைந்து, இரண்டு ராணுவ வீரர்களை சுட்டுக் கொன்று, அதில் ஒருவரின் தலையை துண்டித்து சென்ற, சம்பவத்தை அடுத்து, எல்லை பகுதியில் கடும் பதட்டம் நிலவுகிறது. எல்லையோர இந்தி


எம்.பி சிறிதரன் லாப்டொப்பில் ஆபாச வீடியோவாம் ATHIRVU-PHOTOS
தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பி சிறிதரன் அலுவலகத்தில் சி- 4 வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டது என்பது தானே நீங்கள் அறிந்த விடையமாக இருக்கும். ஆனால் புதுக் கதையும் இதனுடன் அதற்போது இணைக்கப்பட்டுள்ளது. அதாவது சிறிதரன் அலுவக வெடிகுண்டு பாட் - 2 (பாகம் 2) 

திருமண ஆசை காட்டி பல முறை கற்பழித்த பாதிரியார் 
 திருமண ஆசைகாட்டி சீரழித்து பலமுறை கர்ப்பத்தை கலைத்துவிட்டு தன்னை ஏமாற்றிய பாதிரியார் மீது நர்ஸிங் மாணவி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார். விழுப்புரத்தைச் சேர்ந்தவர் காவ்யா(25

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நளினி – முருகன் இன்று சந்திப்பு 
தமிழகத்தின் வேலூர் சிறையில் சில மாதங்களுக்கு முன்னர் பொலிசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில் முருகன் அறியில் இருந்து செல்போன்கள், சிம்கார்டுகள் உள்ளிட்ட 13 வகையான தடை செய்யப்பட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக பொலிசார் குற்றஞ்சுமத்தினர். இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை சந்தேக நபர், முருகன் அறையில் இருந்து சிம்கார்டு, மெமரிகார்டு, ஹெட்போன் என்பன சிக்கியது என்று கூறபடுகிறது. தடை செய்யப்பட்ட பொருட்கள் பயன்படுத்தியது தொடர்பாக முருகன் மீது சிறைதுறை நன்னடத்தை விதிகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

வவுனியா பற்றைக் காட்டில் இராணுவ வீரரின் சடலம் மீட்பு

ஹிங்குராங்கொட பகுதியைச் சேர்ந்த ஏ.எம்.பிரியந்த குமார (வயது 31) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்.வவுனியா, நாவற்குளம் கிராமத்திலுள்ள பற்றைக் காட்டிலிருந்து இராணுவ வீரரொருவரின் சடலம் உருக்குலைந்த நிலையில் இன்று வியாழக்கிழமை

பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் கிளிநொச்சி அலுவலகத்தில் வெடி மருந்து மீட்பு
கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனின் அலுவலகத்தில் இருந்து இன்று வெடிமருந்து மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பா.உ. சி.சிறீதரனின் கிளிநொச்சி மாவட்ட அலுவலகத்தில் வினோதமான விசாரணையும்! அம்பலத்துக்கு வந்த சில நடவடிக்கைகளும்-TAMILWIN
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனின் கிளிநொச்சி மாவட்ட அலுவலகத்தில் வரலாற்றில் என்றுமில்லாத வினோதமான விசாரணை நடவடிக்கையொன்றினை இன்று இராணுவத்தினரும், பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸாரும் நடத்தியிருக்கின்றனர்.

பூந்தமல்லி சிறப்பு முகாம்களை இழுத்து மூடக்கோரி ஆர்ப்பாட்டம்

செங்கல்பட்டு சிறப்பு முகாம்களில் இருபது நாட்களுக்கு மேலாக உண்ணாவிரதம் இருக்கும் ஈழத்தமிழர்களை விடுதலை செய்யக்கோரியும். செங்கல்பட்டு மற்றும் பூந்த்தமல்லி சிறப்பு முகாம்களை இழுத்து மூடக்கோரும் ஆர்ப்பாட்டமானது மே-17 இயக்கத்தால் நேற்று செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையத்திற்கு அருகில் ஒருங்கிணைக்கபட்டது.



மகளுக்கு விடுதலை பெற்றுத்தருவதாக வாக்குறுதியளித்த அரசியல்வாதிகளை காணவில்லை: ரிஸானாவின் தயார்

மகளுக்கு விடுதலை பெற்றுத்தருவதாக வாக்குறுதியளித்த அரசியல்வாதிகள் ஒருவரையும் இப்போது காணவில்லை. என்னை நம்ப வைத்து ஏமாற்றி விட்டார்கள். நான் மகளைப்


ஐந்நூறு பேரின் மரணத்துக்கு மத்தியிலேயே புதிய பிரதம நீதியரசரை நியமிக்க வேண்டிவரும்: அசாத்சாலி

பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிரான குற்றப் பிரேரணையில் அரசாங்கம் வெற்றிபெறலாம். ஆனால் முடியுமானால் புதிய பிரதம நீதியரசரை நியமிக்குமாறு அரசாங்கத்துக்கு சவால் விடுகின்றோம்.


அடுத்த பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் ?

பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க மீதானா குற்றப்பிரேரணை பாராளு மன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளதை அடுத்து நேற்று இரவு குறித்த அறிக்கை ஜனாதிபதியின் ஒப்புதல் கையொப்பத்தினை பெரும் பொருட்டு ஜனாதிபதியிடம்

இலங்கை இளைஞர் ஒருவருக்கு கட்டாரில் உள்ள நீதிமன்றம் ஒன்று மரண தண்டனை விதித்துள்ளது.

வெங்கடாசலம் சுதேஷ்கர் என்ற 22 வயதான இளைஞருக்கே கட்டாரில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக கட்டார் தூதரகத்தின் மூலம் வெளிவிவகார அமைச்சுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

ராம்ஜெத்மலானியை மீண்டும் பாஜகவில் சேர்க்க முடிவு
கட்சி மேலிடத்துக்கு எதிராக பேசியதற்காக, பா.ஜ.,விலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட, ராம்ஜெத் மலானியை, மீண்டும் கட்சியில் சேர்க்க, பா.ஜ., தலைவர்கள் முடிவு செய்துள்ளனர்.


நடிகர் ஜெகதிஸ்ரீகுமார் என் தந்தை: ஐகோர்ட்டில் இளம்பெண் வழக்கு
 

பிரபல மலையாள காமெடி நடிகர் ஜெகதிஸ்ரீகுமார். குணசித்திர வேடங்களிலும் நடித்துள்ளார். இவர் கடந்த வருடம் விபத்தில் சிக்கி காயமடைந்தார். வேலூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


தற்கொலை செய்ததாக எழுதி வாங்கிவிட்டு மகளை கொன்ற தந்தை
உத்தர பிரதேச மாநிலம் மீரட் நகரில் 23 வயது மகளை கொலை செய்ததாக பொறியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

ப.சிதம்பரம் குடும்பத்தினர் ஆக்கிரமித்த இடத்தை இடித்து தள்ளிய
 மீனவர்கள்- பதற்றத்தால் போலீஸ் குவிப்பு 
சென்னையை அடுத்த நீலாங்கரை அருகே மீனவக் கிராமத்தை மத்திய  நிதியமைச்சர் ப.சிதம்பரம் குடும்பத்தினர் ஆக்கிர மித்துக் கட்டியதாகக் கூறப்படும் சுவரை,  இன்று

12 ஜன., 2013


ரிஸானா

OlehArulezhilan
January 11, 2013

30-01-2007
அல் த்வாத்மி சிறைச்சாலை,
அல் தவாத்மி, சவுதி அரேபியா.
எனது உண்மையான வயது 19. நான் பிறந்த தேதி 02-02-1988. எனது வயது ஏஜெண்ட் அஜிர்தீன் என்பவரால் 02-02-1982 என மாற்றப்பட்டு எனக்காக கடவுச்சீட்டு வழங்கப்பட்டது. 01-04-2005-ல் நான் சவுதி அரேபியாவுக்கு வீட்டு வேலைக்காக வந்தேன். சுமார் ஒன்றரை மாதங்கள் ஒரு செல்வந்தரின் வீட்டில் வீட்டு வேலை செய்தேன். இந்த வீட்டில் சமைத்தல், பாத்திரங்களை கழுவுதல், நான்கு மாதக் குழந்தையைக் கவனித்துக் கொள்ளுதல் உள்ளிட்ட வேலைகளை நான் பார்த்து வந்தேன். ஐய்ரோப்பாவைச் சார்ந்த எவர் ஒருவரும் இப்படியான தண்டனைகளுக்கு சவுதியில் உள்ளாக முடியாது என்பதெல்லாம் தனிக்கதை. எண்ணெய் வளம் கண்டறியப்பட்டதையொட்டி சவுதி மன்னராட்சி மேற்குலகோடு செய்து கொண்ட தொழிலாளர், மற்றும் வணிக ஒப்பந்தங்கள் சவுதி அரேபியச் சட்டங்களின் படி ஐய்ரோப்பியர்களை தலை வெட்டித் தண்டிக்க முடியாத விலக்கை அளிக்கிறது. ரிஸானா வெள்ளை தேசத்தவராக இருந்தால் நிச்சயம் இந்த தண்டனை அவருக்குக் கிடைத்திருக்காது.
குறித்த சம்பவம் நடந்த தினம் எனக்கு நினைவில் இல்லை. அது ஒரு ஞாயிற்றுக் கிழமை பகல் 12-30 மணியிருக்கும். அப்போது யாரும் வீட்டில் இருக்கவில்லை. நான் மட்டுமே இருந்தேன். அங்குள்ள நான்கு மாதக் குழந்தைக்கு நானே பால் கொடுப்பேன். அன்றைக்கும் வழமை போல பால் கொடுத்த போது குழந்தையின் மூக்கிலிருந்து பால் கொட்டியது. அப்போது நான் குழந்தையின் தொண்டையை தடவிக் கொடுத்தேன். குழந்தை கண் மூடியிருந்த படியால் நான் அது அயர்ந்து உறங்குகிறது என நினைத்துக் கொண்டேன்.

4 தொகுதிகளில் போட்டியிட்டதை எதிர்த்த  ஜெயலலிதா மீதான குற்றவியல் வழக்கு ரத்தானது.  ஜெயலலிதாவின் மேல்முறையீடு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் ஜெயலலிதா மீது தேர்தல் ஆணையம் தொடர்ந்த குற்றவியல் வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது
மேலும் திமுக குப்புசாமி தொடர்ந்த மூல வழக்கை சென்னை ஐகோர்ட் விசாரிக்க அனுமதி வழங்கியும், ஜெ.மீதான வழக்கை சென்னை ஐகோர்ட் 4 மாதத்தில்  விசாரித்து முடிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.  


தயாநிதிமாறன் வழக்கு:
சி.பி.ஐ.க்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்

மத்திய தொலை தொடர்பு துறை அமைச்சராக, தயாநிதி பதவி வகித்த போது, அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, தன் சகோதரருக்கு சொந்தமான, "டிவி' நிறுவனத்துக்கு, 323 தொலைபேசி இணைப்புகளை வழங்கியதாக தொடரப்பட்ட வழக்கில், இதுகுறித்து விளக்கம் அளிக்கும்படி, சி.பி.ஐ., மற்றும் பி.எஸ்.என்.எல்., நிறுவனத்துக்கு, சுப்ரீ

பிரேரணை நிறைவேற்றத்தின் போது மேற்கொள்ளப்பட்ட ஒழுங்குமுறைகள் தவறானவை! அமெரிக்கா
இலங்கையில் பிரதம நீதியரசருக்கு எதிராக குற்றவியல் பிரேரணை நிறைவேற்றப்பட்ட ஒழுங்குமுறைகள் தொடர்பில் அமெரிக்கா, தமது கவலையை வெளியிட்டுள்ளது.

தாக்குதல் நடத்தப்பட்டே ரிசானாவிடம் குற்றப்பத்திரிகையில் கையொப்பம் பெறப்பட்டது! மரண தண்டனை கண்டிக்கத்தக்கது! – நவநீதம்பிள்ளை
ரிசானா நபீக் சவூதியில் மரண தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டமையை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை கண்டித்துள்ளார்.

சவுதி அரேபிய சிறைச்சாலைகளில் இலங்கையைச் சேர்ந்த நான்கு பேர் மரண தண்டனையை எதிர்கொள்ளக் கூடிய அபாயம் உள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் பிரபல திரைப்பட நடிகருமான ரஞ்சன் நாமநாயக்க தெரிவித்தார்.
அவர்கள் மீது இப்போது மதரீதியான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தாலும் அது ரிசானாவைப் போலவே மரண தண்டனைக்கு வழி வகுக்கக் கூடும் என அவர்கள்

“ரிஸானா”வின் மரணத்துக்கு யார் பொறுப்பு?(Who is responsible for Rizana’s death

ஓர் அப்பாவிப் பெண்ணின் மரணத்தின் பின்னணியில்… 

—”ஓர் அரசு என்ற வகையில், இலங்கை தன்னுடைய கடமையைச் சரியாகச் செய்யவில்லை; ரிஸானாவின் மரணத்துக்கு இலங்கை அரசாங்கமே முழுப்பொறுப்பு ஏற்க வேண்டும்” என்ற ஆசிய மனித உரிமைகள் ஆணையகத்தின் குற்றச்சாட்டு

—இறந்த குழந்தையின் தாய் மன்னிக்காத படியால் தண்டனையை நிறைவேற்றுவதைத் தவிர வேறு வழியில்லை என்று சப்பைக்கட்டுக் கட்டும் சவூதி அரசு, எந்தக் கட்டத்தில் அதுசெல்லுபடியாகும் என்பதை கவனிக்கத்தவறிவிட்டது. அதாவது, நடந்தது கொலையாக இருக்கும் பட்சத்திலேயே, உரியவர்களின் மன்னிப்பு பற்றிய பேச்சுக்கே இடமிருக்கும். மாறாக, கொலை என்றே உறுதி செய்யப்படாத நிலையில் விதிக்கப்பட்ட மரணதண்டனை முற்றிலும் அநீதியானது என்பதோடு, சவூதி அரசு நடைமுறைப்படுத்துவதாகச் சொல்லும் ஷரீஆ சட்டத்தின் அடிப்படை விழுமியமான “நீதி நிலைநிறுத்தப்படுதல்” என்பதற்கு முற்றிலும் மாறானதும்கூட!

வெளிநாட்டுக்குப் போய்ப் பணியாற்றும் பணிப்பெண்கள் மூலம் மிகப் பெருந்தொகைப் பணத்தை அந்நிய செலாவணியாகப் பெற்றுக்கொள்ளும் ஒரு நாடு, தன்னுடைய குடிமகள் ஒருத்திக்கு ஏற்பட்ட கையறு நிலையின்போது இவ்வாறு மனிதநேயமற்றுச் செயற்பட்டமை வெட்கக்கேடானதாகும். அவ்வாறே, இந்த விடயமாகப் பேசுவதற்கென அடிக்கடி சவூதிக்குப் பறந்த அமைச்சர்களில் யாரும் பாதிக்கப்பட்ட குடும்பத்தை, குறிப்பாக குழந்தையின் பெற்றோரை நேரில் சந்தித்து அவர்களுக்கு நிலைமையைத் தெளிவுபடுத்த முனையவில்லை. வெறுமனே அறிக்கை விடுவதன் மூலமே “எல்லாம்” நடந்துவிடும் என்று மனப்பால் குடித்துவந்த இலங்கை அரசும் சரி, அதன் அமைச்சர்களும் சரி வெறுமனே ஒரு நிமிட நேர நாடாளுமன்ற மௌன அஞ்சலி மூலம், தம்முடைய முகத்தில் படிந்துள்ள கரியைத் துடைத்துக்கொள்ளலாம் என்று கருதிவிட்டார்கள் போலும்!


ad

ad