புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 மே, 2015

கால்கள் மரத்தில் கட்டப்பட்டு புங்குடுதீவு வித்தியா கொடூரமாகக் கற்பழிப்பு -

கொலையாளிகள் அடையாளம் புங்குடுதீவில் மீட்கப்பட்ட பாடசாலை மாணவி பாலியல் வன்புணர்வின் பின்னர்
கொல்லப்பட்டுள்ளார் என்பதை வைத்திய பரிசோதனைகள் உறுதி செய்துள்ளன.
புங்குடுதீவு9ம் வட்டாரத்தை சேர்ந்த சிவலோகநாதன் வித்தியா (19) என்ற மாணவிக்கு இந்த கொடூரம் நிகழ்ந்துள்ளது. அவர் கூட்டு வல்லுறவிற்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக வைத்தியர்கள் கருதுகிறார்கள். இதன்மூலம், கும்பலொன்று திட்டமிட்ட ரீதியில் இந்த கொடூரத்தை புரிந்துள்ளது உறுதி செய்யப்படுகிறது.
நேற்றையதினம் பாடசாலை விட்டு திரும்பிய மாணவி வீடு திரும்பவில்லை. வீட்டிற்கும் பாடசாலைக்குமிடையில் இருந்த சிறிய பற்றைக்காடு போன்ற பகுதியில்த்தான் அவர் கடத்தப்பட்டு, வல்லுறவிற்குள்ளாக்கப்பட்டு, கொல்லப்பட்டுள்ளார்.
எனினும், அந்த சமயத்தில் இதனை யாரும் பெரிய விடயமாக பொருட்படுத்தவில்லை. மகள் மாலை மங்கியும் வீடு திரும்பாததால் குழப்பமடைந்த பெற்றோர், நெடுந்தீவு பொலிசாரிடம் முறையிட்டுள்ளனர்.
முறையிட சென்ற தந்தையை எகத்தாளமாக பார்த்த பொலிசார், காதலித்த பொடியனுடன் ஓடியிருப்பாள். காலமை வந்திடுவாள் என கூறி அனுப்பியுள்ளனர்.
பொலிசாரின் இந்த பொறுப்பற்ற நடத்தையும் கொலைக்கு சாதகமான சூழலை ஏற்படுத்திவிட்டதென்பதே மக்களின் கொதிப்பாக உள்ளது.
மறுநாளாகியும் மகள் வராதநிலையில் பெற்றோர் குழப்பமடைந்துள்ளனர். இந்த சமயத்தில்த்தான், அவர்களது வீட்டிற்கும் பாடசாலைக்குமிடையிலிருந்த காட்டுபகுதியில் கொல்லப்பட்ட மாணவியின் கால் செருப்பை சிலர் கண்டுள்ளனர்.
விடயம் காட்டுத்தீயாக பரவியதையடுத்து, அங்கு தேடுதல் நடத்தப்பட்டது. இதன்போது அங்கிருந்த அலரிமரத்தில் மாணவியின் கால்கள் அகலமாகக் கட்டப்பட்ட நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார்.
அவர் கொடூரமான பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டதற்கான தெளிவான அடையாளங்கள் சம்பவ இடத்திலேயே காணப்பட்டன.
அங்கு மாணவி பலமணிநேரமாக கடத்தி வைத்திருக்கப்பட்டு சித்திரவதை அல்லது திட்டமிட்ட பலமணி நேர வல்லுறவு நிகழ்ந்திருக்கிறதென கூறுகிறார்.
மாணவியின் உடலிலும் கொடூரமான சித்திரவதைக்கான தடயங்கள் காணப்படுகின்றன. அவர் கட்டிவைக்கப்பட்டு கொடூரமாக காமகர்களால் சீரழிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை இச்சம்பவத்தின் கொலை சந்தேகநபர்களான புங்குடுதீவு வல்லனை சேர்ந்த பூபாலன் சரோசா தம்பதிகளின் பிள்ளைகளான “பத்தாயிரம் ரூபாவுக்கு கொலை செய்யும்” கூட்டத்தை சேர்ந்த ரவி, மற்றும் அவரது சகோதரரான கொழும்பில் தொழில் புரியும் செந்தில், மற்றும் இவர்களது இன்னொரு சகோதரரான சின்னாம்பி என்பவரும், மற்றும் ரவியின் கூட்டாளியான “பத்தாயிரம் ரூபாவுக்கு கொலை செய்யும்” கூட்டத்தை சேர்ந்த கிருபா என்பவரும் பொலிசாரினால் அடையாளப்படுத்தப்பட்டு தேடப்பட்டு வருகின்றனர்.
முதலில் பொலிசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் பூபாலன் சரோசா தம்பதிகளின் பிள்ளையான “பத்தாயிரம் ரூபாவுக்கு கொலை செய்யும்” கூட்டத்தை சேர்ந்த ரவி, கைது செய்யப்பட்டு அவனை “விசாரிக்க வேண்டிய முறையில்” பொலிசார் விசாரித்ததுடன், அவர்களின் வீட்டையும் சோதனையிட்ட போது அங்கு இரத்தத்துடன் இருந்த சேட் ஒன்றையும் கைப்பற்றி, அதன் சூத்திரதாரியான அவனது தம்பியான கொழும்பில் தொழில் புரியும் செந்தில் என்பவரும் , அதன் தொடர்ச்சியாக மற்றவர்களும் தேடப்பட்டு வருவதாகத் தெரியவருகின்றது.

ad

ad