புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 ஜூலை, 2016

ஒலிம்பிக் போட்டியில் ஷரபோவா பங்கேற்க முடியாது

ஊக்க மருந்து பரிசோதனையில் சிக்கிய ரஷிய டென்னிஸ் வீராங்கனை ஷரபோவாவுக்கு சர்வதேச டென்னிஸ் சம்மேளனம்
2 ஆண்டுகள் விளையாட தடை விதித்தது. இந்த தடையை எதிர்த்து ஷரபோவா சுவிட்சர்லாந்தில் உள்ள சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயத்தில் அப்பீல் செய்துள்ளார். அதில் தனக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார். இந்த மனு மீது வருகிற 18-ந் தேதி தீர்ப்பாயம் முடிவு எடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. தங்கள் தரப்பு ஆதாரங்களை தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும் என்று சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் அவகாசம் கேட்டதால் இந்த வழக்கு விசாரணை செப்டம்பர் 19-ந் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதனால் ஆகஸ்டு மாதம் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் ஷரபோவா பங்கேற்க முடியாது

ad

ad