புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 ஜூலை, 2016

கமரூனின் ஆதரவாளர்கள் பலரை நீக்கி தனது அமைச்சரவையில் மாற்றத்தை கொண்டுவந்துள்ளார்தெரசா.

பிரித்தானியாவின் புதிய பிரதமராக பதவியேற்ற தெரசா மே, முன்னாள் பிரதமர் டேவிட் கமரூனின் ஆதரவாளர்கள்
பலரை நீக்கி தனது அமைச்சரவையில் மாற்றத்தை கொண்டுவந்துள்ளார்.
இந்த அமைச்சரவையில் பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற வேண்டும் மற்றும் நீடித்திருக்க வேண்டும் என கூறிய இரு தரப்பினருக்கும் வாய்ப்பளித்துள்ளார்.
இந்நிலையில், பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலக வேண்டும் என்று வாதிட்ட போரிஸ் ஜான்சன் புதிய வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தலைமைப் பதவிக்குத் தன்னுடன் போட்டியிட்டு பின்னர் விலகிக் கொண்ட ஆன்ரியா லீட்சம், சுற்றுச்சூழல் துறை அமைச்சராக தரம் உயர்த்தப்பட்டிருக்கிறார்.
டேவிட் கமரூன் அமைச்சரவையில் இருந்த ஜார்ஜ் ஆஸ்பர்ன், மைக்கோல் கோவ், ஜான் விட்டிங்டேல், நிக்கி மோர்கன், ஆலிவர் லெல்வின் ஆகியோர் நீக்கப்பட்டிருக்கிறார்கள்.
புதிதாக உருவாக்கப்பட்ட பிரெக்ஸிட் அமைச்சர் பொறுப்பில் டேவிட் டேவிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறும் நடைமுறைகள் குறித்த செயல்பாடுகளை அவர் மேற்கொள்வார்.
புதிதாக உருவாக்கப்பட்ட இன்னொரு பதவியான சர்வதேச வர்த்தக அமைச்சர் பதவியில், லியம் ஃபாக்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் எரிசக்தித்துறை அமைச்சர் ஆம்பர் ரூட், தெரசா மே முன்னர் வகித்து வந்த உள்துறை அமைச்சர் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
அமைச்சரவையில் ஆண்கள் 70 வீத, பெண்கள் 30 வீதம் என்ற அளவில் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கெபினட் அமைச்சர்களில், தெரசா மே உள்பட 16 பேர் ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன் நீடிக்க வேண்டும் என்ற நிலைப்பாடு கொண்டவர்கள். ஏழு பேர், எதிரணியைச் சேர்ந்தவர்கள்.
இந்நிலையில், தெரசா மே தனது அமைச்சரவையை ஏற்படுத்தியிருக்கும் விதமானது, பாராட்டத்தக்க வகையில் கருணை காட்டப்படாத ஒன்று என கன்சர்வேடிவ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் வெளியுறவுச் செயலர் சர் மால்கம் ரிஃப்கின்ட் குறிப்பிட்டுள்ளார்.
நிதியமைச்சர் ஜார்ஜ் ஆஸ்பனை அமைச்சரவையில் இருந்து நீக்கிய தெரீசா, அவருக்கு அமைச்சரவையில் இடமே தராதது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

ad

ad