புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 செப்., 2018

வடக்கில் என்னை இழிவுபடுத்துகின்றனர்! - பேரணியில் மஹிந்த கவலை

வடபகுதிக்கு செல்லும் ஜனாதிபதியும், பிரதமரும் தன்னை இழிவுபடுத்தி வருவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார்.கொழும்பில் நேற்றைய தினம் நடைபெற்ற சத்தியாக் கிரக போராட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

எனது ஆட்சிக் காலத்தில் நான் ஈட்டிய வெற்றிகளினாலேயே இன்று பிரதமரும், ஜனாதிபதியும் வடக்கில் சென்று என்னை இழிவுபடுத்துகின்றனர்.வடக்கிற்கு சென்று என்னை கேவலப்படுத்துவதற்கான சூழ்நிலையை நானே உருவாக்கியிருக்கின்றேன்.விடுதலைப் புலிகளை தோற்கடித்து பெற்றுக்கொடுத்த சுதந்திரத்தை அரசாங்கம் மீறிச் செயற்படுகின்றது.

தேர்தல்களை ஒத்தி வைப்பதன் மூலம் மக்களின் ஜனநாயக உரிமைகள் முடக்கப்பட்டுள்ளன.நாடு ஜனநாயக ஆட்சியிலிருந்து எதேச்சாதிகாரம் நோக்கி நகர்கின்றது.எனவே புதிய அரசாங்கமொன்றை உருவாக்கி ஜனநாயகத்தை நிலைநாட்ட வேண்டியது நமது கடமையாகும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்

ad

ad