புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 மார்., 2019

ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயம் தமக்கே உரியது- தொல்லியல் திணைக்களம்…


வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயம் உள்ளிட்ட பகுதியும் தமது ஆளுகைக்கு உட்பட்ட பகுதியென தொல்லியல் திணைக்களம் உரிமை கோரியுள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் தமது ஆளுகைக்குட்பட்ட பிரதேசங்களை கையக்கப்படுத்தும் முயற்சியில் தொல்லியல் திணைக்களம் ஈடுபட்டுள்ளது.

அந்த வகையில் முல்லைதீவிலுள்ள 40 இடங்கள் தமது ஆளுகையின் கீழ் உள்அடங்குவதனால் அவற்றினை உடன் அளவீடு செய்து தருமாறு தொல்லியல் திணைக்களம் நில அளவைத் திணைக்களத்திடம் கோரியுள்ளது.

இதேவேளை சத்தமின்றி முல்லைதீவில் தொல்லியல் திணைக்களம் தனது கைங்கரியத்தில் ஈடுபட்டுள்ளதோடு , தமிழர் பிரதேசங்களை பௌத்தமயமாக்குவதில் மும்முரமாகியுள்ளதாக சமூக அவதானிகள் விசனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ad

ad