புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

13 அக்., 2020

கொல்கத்தாவை பந்தாடியது கோலியின் அணி

Jaffna Editor
நடப்பு ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர்லீக் தொடரின் நேற்று (12)நடைபெற்ற போட்டியி விராட் கோலி தலைமையிலான தலைமையிலானபெங்களூர் ரோயல் செலஞ்சர்ஸ் அணி 82 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது

13 PL தொடரின் 28ஆவது போட்டி சார்ஜாமைதானத்தில் நேற்று இரவு 7.30 இற்கு ஆரம்பமானது.

இந்தப் போட்டியில் பெங்களூர் ரோயல் செலஞ்சர்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் பலப்பரிட்சை நடத்தியிருந்தன

இதில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பெங்களூர் ரோயல் செலஞ்சர்ஸ் அணி துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாட ஆரம்பித்த பெங்களூர் ரோயல் செலஞ்சர்ஸ் அணி வெறும் 2விக்கெட்டுகளை இழந்து 194ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

பெங்களூர் ரோயல் செலஞ்சர்ஸ் அணி சார்பாகஏபி டிவில்லியர்ஸ் அதிரடியாக விளையாடி 73 ஓட்டங்களையும் அணித்தலைவர்விராட்கோலி 33 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல்பெற்றுக்கொடுத்தனர் .

இதனைத் தொடர்ந்து பதிலுக்கு துடுப்பெடுத்தாடியகொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 பந்து பந்து பரிமாற்றங்களில் அனைத்து இலக்கு களையும் இழந்து வெறும் 112 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டது

அணி சார்பில் அதிகபட்சமாக,சுப்மான் கில் 34 ஓட்ட ங்களை பெற்றுக்கொடுத்தார்

இதேவேளை, இந்தப் போட்டியின் சிறந்த வீரராக பெங்களூர் ரோயல் செலஞ்சர்ஸ் அணி அதிரடியாக விளையாடி73 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்த ஏபி டிவில்லியர்ஸ் தெரிவானார்