புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 ஜூன், 2021

பர்த்டே கொண்டாட சண்டை; கோபத்தில் நதியா விபரீதம் – தி.மு.க தமிழன் பிரசன்னா மனைவி தற்கொலையில் திடுக்கிடும் தகவல்கள்

www.pungudutivuswiss.com
தி.மு.க செய்தித்தொடர்பு இணை செயலாளர் பொறுப்பில் இருப்பவர் தமிழன் பிரசன்னா. இவர் திமுகவின் முன்னணி பேச்சாளர்களில் ஒருவராக விளங்குபவர். வழக்கறிஞரான தமிழன் பிரசன்னாவுக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர். இவர் தனது குடும்பத்தினருடன் சென்னை எருக்கங்சேரி இந்திரா நகர் மேற்கு பகுதியில் வசித்து வருகிறார். இவரது மனைவி நதியா நேற்று காலை 10 மணியளவில் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக இருந்துள்ளார்.


இதனையடுத்து உடனடியாக கொடுங்கையூர் காவல்நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்த கொடுங்கையூர் காவலர்கள் நதியாவின் உடலைக்கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பிரசன்னா மற்றும் அவரது குடும்பத்தினரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணைக்காக தமிழன் பிரசன்னா கொடுங்கையூர் காவல்நிலையம் அழைத்து செல்லப்பட்டார். காவல்துறையினரின் விசாரணையில், இறந்துபோன நதியாவுக்கு இன்று பிறந்தநாள் என்பதால் தனது பிறந்தநாளை விமர்சையாக கொண்டாட வேண்டும் என கூறியுள்ளார். இதற்கு பிரசன்னா இது கொரோனா காலம் தற்போது ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் விமர்சையாக கொண்டாட முடியாது என மறுத்துள்ளார்.

இதன்காரணமாக கணவன் மனைவி இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த நதியா தூக்கு மாட்டி தற்கொலை செய்துக்கொண்டார் என்று காவல்துறையின் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் கடந்த சில நாட்களாக குடும்ப சண்டையும் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ad

ad