புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 ஜூன், 2021

தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் அமெரிக்க காங்கிரஸ் சபையில் உள்ளனர்

www.pungudutivuswiss.com
அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் உறுப்பினர் டெபோரா கே.ரோஸ் உள்ளிட்ட நான்கு உறுப்பினர்கள் அடங்களாக அந்த நாட்டு காங்கிரஸ் சபையில் கடந்த 18ஆம் திகதி இலங்கை தொடர்பில் முன்வைத்துள்ள H.RES.413 யோசனைக்கு இலங்கை வெளிவிவகார அமைச்சு எதிர்ப்பு வெளியிட்டுள்ளது.

மே 18 ம் திகதி சபையின் வெளிவிவகார குழுவின் பரிசீலனைக்கு அந்த தீர்மானம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

குறிப்பிட்ட தீர்மானத்தில் ஆதாரமற்ற அப்பட்டமான பொய்களை அடிப்படையாக கொண்ட குற்றச்சாட்டுகள் அடங்கியுள்ளன என தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சு இந்த தீர்மானத்தை கடுமையாக எதிர்ப்பதாகவும் தெரிவித்துள்ளது.

இந்த தீர்மானத்தின் நோக்கம் குறித்து கடும் சந்தேகங்கள் எழுவதாகவும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

குறிப்பிட்ட தீர்மானத்தின் தவறான, பக்கச்சார்பான ஒரு தரப்பான தன்மையை கருத்தில்கொள்ளும்போது இது வெறுமனே மனித உரிமை குறித்த தீர்மானம் இல்லை என்பதை சுட்டிக்காட்டவேண்டியுள்ளது.

என தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சு மாறாக அமெரிக்க காங்கிரஸில் உள்ள விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் குழுவினரால் விடுதலைப்புலிகளின் பிரிவினைவாத நோக்கத்தை முன்னெடுக்கும் நோக்கத்துடன் முன்னெடுக்கப்பட்ட முயற்சியாக இது தோன்றுகின்றது எனவும் தெரிவித்துள்ளது.

மேலும் அமெரிக்கா உள்ளிட்ட 32 நாடுகளில் தடைவிதிக்கப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் கோட்பாடுகளை முன்கொண்டு செல்வதற்காக அமெரிக்க காங்கிரஸில் உள்ள விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் சிலரின் அழுத்தம் காரணமாக இந்த யோசனை கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது

ad

ad