புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 ஏப்., 2022

இது எங்களின் கடைசி மணி நேரங்கள் - மரியுபோல் கட்டளைத் தளபதி

www.pungudutivuswiss.com



இது எங்களின் கடைசி மணி நேரங்காகவோ அல்லது சில நாட்களாகவோ இருக்கலாம் என உக்ரைனின் துறைமுக நகரமான மரியுபோலின் 36வது படைப்பிரிவின் கடற்படைக் கட்டளைத் தளபதி செர்ஹி வோலினா காணொளி மூலம் தகவல் வெளியிட்டுள்ளார்.

ரஷ்யப் படையினருடன் போராடுவதற்கான படைத்தளபாடங்கள் தீர்ந்துவிட்டன. போரில் காயமடைந்த வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரை வெளியேற்ற உலக நாடுகள் உதவ வேண்டுமென உக்ரைன் கடற்படை தளபதி கேட்டுக்கொண்டார். இங்கு 500 காயமடைந்த உக்ரைனியப் படையினர் பராமரிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

எங்களை விட ரஷ்யர்களின் படை வலு அதிமாக இருப்பதாகவும், உக்ரைனிய படையினரின் மன பலம் அதிகமா இருக்கும் போது அதைவிட ரஷ்யப் படைகள் வானிலும், பீரங்கிகளிலும், தரைப்படைகளிலும், இயந்திரங்கள் மற்றும் டாங்கிகளிலும் மேலோங்கி நிற்கின்றன என்றும் அவர் கூறினார்.

உக்ரேனியப் படைகள் சரணடைவதற்கான ரஷ்ய காலக்கெடு வழங்கியபோதும் அவர்கள் சரணடைய மறுத்துவிட்டார்கள்.

மரியுபோலில் இறுதி இருப்பாக உக்ரைனிடம் இருக்கும் கடைசிப்குதி ஹோல்டவுட்கள் நகரின் மிகப்பெரிய அசோவ்ஸ்டல் என்று இருப்பு உருக்கும் ஆலையாகும். இங்கு 1000 உக்ரைனிய குடிமக்கள் தஞ்சடைந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அங்கு ரஷ்யாவுக்கு எதிராக போராடிய உக்ரைனியப் படையினர் மற்றும் வெளிநாட்டுக் கூலிப்படையினர் மற்றும் போராளிகள் பதுங்கியிருப்பதாக ரஷ்யா தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

அசோவ்ஸ்டல் அயர்ன் அண்ட் ஸ்டீல் ஒர்க்ஸ் - நகரின் தென்கிழக்கில் நான்கு சதுர மைல் (10 சதுர கிமீ) நீளமுள்ள ஆலை  மரியுபோலில் உக்ரேனிய எதிர்ப்பின் கடைசி மையமாக மாறியுள்ளது.

ad

ad