புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 நவ., 2022

கெர்சான் பகுதி கடுமையாக சித்திரவதை செய்யப்பட்ட 63 சடலங்கள் ஒரே குழியில்

www.pungudutivuswiss.com
சித்திரவதை

கடந்த ஒம்பது மாதங்களாக ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் கடும் போர் நடைபெற்றுக் கொன்டு இருக்கும் நிலையில், உக்ரைனில் கைப்பற்றிய கெர்சான் பகுதியினை விட்டு ரஷிய படையினர் உடனடியாக வெளியேறினர். இதன் பின்

அந்தப் பகுதியின் நிலமை பற்றி ஆய்வு செய்ய உக்ரைன் அதிகாரிகள் சென்றிருந்தனர்.

இதன்போது, அவர்கள் ஆய்வு நடவடிக்கையினை மேற்கொன்டு இருக்கும்போது ஒரே இடத்தில் கடுமையான சித்திரவதைக் காயங்களுடன் 63 சடலங்களை மீட்டுள்ளனர். இவ்வாறு கொல்லப்பட்டவர்கள் எலக்ரிக் சாக் பிடிக்கப்பட்டும், இறப்பர் மற்றும் பிளாஸ்ரிக் குச்சியினால் தாக்கப்பட்டும் மற்றும் செயற்கையான மூச்சுத் தினறல் மூலமாகவும் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் பிடியிலிருந்த இந்தப் பகுதியில் அதிகளவிலான போர்க் குற்றங்கள் இடம்பெற்றுள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். அதேசமயம் இவ் குற்றங்களை ரஷியா மறுத்துள்ளது.

ad

ad