புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 மார்., 2023

பிரித்தானியாவிற்கு நேரடி ரயில் சேவை ஆரம்பிக்க வேண்டுமென கோரிக்கை

www.pungudutivuswiss.com
சுவிட்சர்லாந்திற்கும் பிரித்தானியாவிற்கும் இடையில் நேரடி ரயில் சேவைகளை ஆரம்பிக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

சுவிட்சர்லாந்திற்கும் பிரித்தானியாவிற்கும் இடையில் நேரடி ரயில் சேவைகளை ஆரம்பிக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தின் நாடாளுமன்ற உறுப்பினர் மாத்தியாஸ் எபிசிச்சர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

சுவிட்சர்லாந்து சமஷ்டி அரசாங்கத்திடம் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸ் மற்றும் பிரித்தானிய ஆகிய நாடுகளுக்கு இடையில் நேரடி ரயில் சேவைகளை ஆரம்பிக்கும் சாத்தியப்பாடுகள் பற்றி ஆராயுமாறு கோரியுள்ளார்.

இவ்வாறான நேரடிய ரயில் சேவை ஆரம்பிப்பதற்கான தொழில்நுட்ப ரீதியான சாத்தியங்கள் காணப்படுவதாகவும், ஏற்கனவே ரயில் பாதைகள் உண்டு எனவும் தெரிவித்துள்ளார்.

சுமார் ஐந்தரை மணித்தியாலங்களில் சுவிட்சர்லாந்திற்கும் பிரித்தானியாவிற்கும் இடையில் ரயில் பயணங்கள மேற்கொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு ரயில் சேவையொன்றை ஆரம்பிப்பது பல்வேறு வழிகளில் நன்மை பயக்கும் எனவும், விமான போக்குவரத்து சேவைகளுக்கு போட்டியை உருவாக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த திட்டம் குறித்த சாத்திய ஆய்வுகளை மேறகொள்ளும் பொறுப்பு சுவிஸ் போக்குவரத்து அமைச்சரான அல்பர்ட் ரொஸ்டியைச் சாரும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ad

ad