-
19 நவ., 2025
காரைநகர் கடற்படை முகாமை அகற்ற வேண்டாம் என 147 பேர் கையெழுத்திட்டு கடிதம் அனுப்பியுள்ளனர்! [Wednesday 2025-11-19 05:00]
![]() வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வேண்டும் என்று தமிழ் அரசியல்வாதிகள் வலியுறுத்தும் நிலையில், யாழ்ப்பாணம் காரைநகர் பகுதியில் உள்ள கடற்படை முகாமை அகற்ற வேண்டாம் என்று அப்பகுதியில் வாழும் தமிழ் மக்கள் என்னிடம் தனிப்பட்ட முறையில் வலியுறுத்தியுள்ளார்கள். 147 பேர் கைச்சாத்திட்டு கையளித்த அந்த கடிதத்தைச் சபைக்குச் சமர்ப்பிக்கிறேன் என பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்தார் |
புலிகளை நினைவு கூர்ந்தால் சட்டநடவடிக்கை! [Wednesday 2025-11-19 05:00]
![]() நாட்டில் 30 ஆண்டு காலமாக இடம்பெற்ற சிவில் யுத்தத்தில் உயிரிழந்த தமது உறவுகளை நினைவு கூர்வதற்கு எவ்வித தடையும் இல்லை. அதற்கான உரிமை ஒவ்வொரு பிரஜைக்கும் உண்டு. ஆனால் அந்த போர்வையில் பயங்கரவாதிகள் நினைவு கூரப்பட்டால் அவற்றுடன் தொடர்புடையோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார் |
தங்காலையில் கணவன்- மனைவி சுட்டுக்கொலை! [Wednesday 2025-11-19 05:00]
![]() தங்காலையில் நேற்று மாலை 68 வயது ஆணும் அவரது 59 வயது மனைவியும் சுட்டுக் கொல்லப்பட்டனர். மாலை 6.55 மணியளவில் உனகுருவாவின் கபுஹேன சந்தி பகுதியில் துப்பாக்கிச் சூடு நடந்ததாகவும், அங்கு அடையாளம் தெரியாத நபர்கள் தம்பதியினரை சுட்டுக் கொன்றதாகவும் பொலிசார் தெரிவித்தனர். இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விசாரணைகள் நடந்து வருகின்றன, கொலைக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை |
18 நவ., 2025
Co-hosts: Canada, Mexico, USA AFC: Australia, IR Iran, Japan, Jordan, Korea Republic, Qatar, Saudi Arabia, Uzbekistan CAF: Algeria, Cabo Verde, Côte d'Ivoire, Egypt, Ghana, Morocco, Senegal, South Africa, Tunisia CONMEBOL: Argentina, Brazil, Colombia, Ecuador, Paraguay, Uruguay OFC: New Zealand UEFA: England, France, Croatia, Germany, Netherlands, Norway, Portugal (34 of 48 teams).
துருக்கிக்கு சுற்றுலா சென்ற ஜேர்மானியக் குடும்பம் ஒன்றுபலி

வெளியில் சாப்பிட்ட உணவு...
17 நவ., 2025
திக் திக் நிமிடம்: கடைசி நேரத்தில் ரஷ்ய வீரர்களை காப்பாற்றிய பன்றி! டிரோன் காட்சிகள்! (வீடியோ)

கடைசி நேரத்தில் காப்பாற்றி
மீண்டும் புத்தர் சிலை நிறுவப்படும்! [Monday 2025-11-17 16:00]
![]() திருகோணமலை கடற்கரையை அண்டிய பகுதியில் வைக்கப்பட்ட புத்தர்சிலை பாதுகாப்பு காரணங்களுக்காகவே, அகற்றப்பட்டதாகவும், இன்றையதினம் மீண்டும் அதே இடத்தில் மீண்டும் வைக்கப்படும் எனவும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேயபால தெரிவித்துள்ளார். |
புத்தர் சிலையால் பரபரப்பு! [Monday 2025-11-17 16:00]
![]() சர்ச்சைக்குரிய திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர ஒழுங்கு பிரச்சினைகளை எழுப்பிய நிலையில் அதற்கு சபாநாயகர் அனுமதியளிக்காமையினால் சபையில் திங்கட்கிழமை(17) அமைதியின்மை ஏற்பட்டது |
அகற்றப்பட்ட புத்தர் சிலை மீண்டும் வைக்கப்பட்டது! [Monday 2025-11-17 16:00]
![]() திருகோணமலை கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை காலை, அனுமதி பெறப்படாமல் பௌத்த வணக்கஸ்தலம் ஒன்றை அமைக்கும் முயற்சி, கரையோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர மூலவள திணைக்களத்தின் தலையீட்டை அடுத்து பொலிஸாரினால் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது. புத்தர் சிலையும் அகற்றப்பட்டது. அந்த புத்தர் சிலை, இன்று பிற்பகல் 1,30 மணியளவில் அதே இடத்தில் மீண்டும் வைக்கப்பட்டது |
ஹசீஸ் போதைப்பொருளுடன் யாழ். மருத்துவபீட மாணவன் கைது! [Monday 2025-11-17 16:00]
![]() யாழ்ப்பாணம் குற்றத் தடுப்பு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் யாழ் பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது ஊவா பரனகம பிரதேசத்தைச் சேர்ந்த யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட இரண்டாம் வருட சிங்கள மாணவன் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை (16) யாழ் கந்தர்மடம் பகுதியில் கைது செய்யப்பட்டார். 24 வயதுடைய குறித்த மாணவனிடம் இருந்து 33 கிராம் 230 மில்லிக்கிராம் ஹசீஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது |
வெளிநாட்டு பெண் சுற்றுலாப் பயணிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது! [Monday 2025-11-17 06:00]
![]() திருக்கோவில் பகுதியில் வெளிநாட்டு சுற்றுலாப் பெண் ஒருவரிடம் பாலியல் தொல்லை செய்த சம்பவத்தில் தேடப்பட்ட சந்தேக நபரை பொலிஸார் களவாஞ்சிக்குடி பிரதேசத்தில் வைத்து கைது செய்துள்ளனர். |
சிறிதரனுக்கு எதிராக விசாரணை ஆரம்பம்! [Sunday 2025-11-16 06:00]
![]() இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனுக்கு எதிராக கையூட்டல் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் செய்யப்பட்டுள்ள முறைப்பாடு தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. |
17 புதிய போர் விமானங்கள்: பதற்றத்துக்கு மத்தியில் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட அதிபர்!

பிராந்தியத்தில் அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில்,
நள்ளிரவு வேளையில் திருமலையில் அதிரடியாக அகற்றப்பட்ட புத்தர்! விசேட அதிரப்படையினர் குவிப்பு
யாழ்ப்பாணத்தில் 36 மணியாலங்களில் 125 மி.மீ மழை! [Sunday 2025-11-16 16:00]
![]() வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் கிடைத்து வருகின்ற கனமழை எதிர்வரும் 3 நாட்களுக்கு நீடிக்கும் வாய்ப்புள்ளது என யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் புவியியல் துறையின் தலைவரும், வானிலை ஆய்வாளருமான பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார் |
16 நவ., 2025
ரஷ்யாவின் ஐந்தாவது நீண்ட தூரத் தாக்குதல்: பதிலடி என்கிறார் பாதுகாப்பு அமைச்சர்

வடக்கு, கிழக்கில் கனமழை பெய்யும்! [Saturday 2025-11-15 16:00]
![]() நாட்டிற்கு கிழக்காக விருத்தியடைந்த கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை தொடர்ந்தும் நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. |
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடும் மழை - தாழ்நிலப்பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம்! [Saturday 2025-11-15 16:00]
![]() மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்து வரும் கடும் மழை காரணமாக தாழ்நிலப்பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (15) தொடக்கம் தொடர்ந்து கடுமையான மழைபெய்துவருகின்றது. இதன்காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் வெள்ள நிலைமை ஏற்படுவதற்கான நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது |
மாகாண சபைத் தேர்தல் தொடர்பாக தெரிவுக்குழு! [Saturday 2025-11-15 16:00]
![]() மாகாண சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பான சட்ட நிலைமையை மீளாய்வு செய்து, தேர்தலை விரைவாக நடத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள ஒரு தெரிவுக் குழுவை நியமிக்கவுள்ளதாக சபை முதல்வர் மற்றும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார் |
அடுத்தவாரம் தமிழரசு கட்சியை சந்திக்கிறார் ஜனாதிபதி அனுர! [Saturday 2025-11-15 16:00]
| அடுத்தவாரம் தமிழரசு கட்சியை சந்திக்கிறார் ஜனாதிபதி அனுர! [Saturday 2025-11-15 16:00] |
![]() தேசிய இனப் பிரச்சினைக்கு தீர்வு காண்பது குறித்து ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் குழுவினருக்கும் இடையில் வரும் புதன்கிழமை அல்லது வியாழக்கிழமை நண்பகல் ஒரு மணிக்கு கொழும்பில் ஜனாதிபதி செயலகத்தில் நேரடிப் பேச்சுக்கள் நடைபெறும் எனத் தெரியவருகிறது |
15 நவ., 2025
Bihar Election Results - LIVE Updates | 200 இடங்களில் முன்னிலை.. ஆட்சியை பிடிக்கும் NDA கூட்டணி202! பீகார் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுவருகிறது..
www.pungudutivuswiss.comநாங்கள் வெற்றி பெறப் போகிறோம். அனைவருக்கும் நன்றி.
ஒரு மாற்றம் வரப்போகிறது. நாங்கள் அ
14 நவ., 2025
காஸா தாக்குதலில் ‘இறந்த’ சிறுமி உயிருடன் மீட்பு: பெரும் பரபரப்பு!

காஸா மீது இஸ்ரேல் நடத்திய குண்டுவீச்சுத் தாக்குதலி
22 வருட கால்பந்து வாழ்க்கையில் ரொனால்டோவிற்கு முதல்முறையாக ரெட்கார்ட்
பிரான்ஸின் முன்னாள் அதிபர் நிக்கோலஸ் சர்கோஸி விடுதலை
புதிய பயங்கரவாத தடைச்சட்ட வரைவு கையளிப்பு! [Thursday 2025-11-13 16:00]
![]() பயங்கரவாத தடுப்புச் சட்டத்திற்கு மாற்றீடாக, புதிய சட்டத்தை அறிமுகப்படுத்துவது தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவினால் முன்மொழியப்பட்ட புதிய வரைபு, நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. குழுவின் தலைவரான ஜனாதிபதி சட்டத்தரணி ரியன்சி அர்சகுலரத்ன இதனை நீதி அமைச்சரிடம் சமர்ப்பித்துள்ளார். |
13 நவ., 2025
ரஷ்ய ஆயுதப் படைகளுக்குள் அமைக்கப்பட்டுள்ள பிரத்யேகமாக ஒரு புதிய பிரிவு





























