முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர் 313 பேர் மீண்டும் சமூகத்துடன்
புனர்வாழ்வளிக்கப்பட்ட 313 முன்னாள் தமிழீழ விடுதலைப்புலி உறுப்பினர்கள் சமூகத்துடன் மீள இணைக்கப்பட உள்ளனர். அடுத்த மாதம் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.
யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் விடுதலை தொடர்பில் துணைவேந்தர் பீடாதிபதிகள் மற்றும் நிர்வாக அதிகாரிகள் குறித்து மேற்கொண்டு வருகின்ற விசமத்தனமான பிரசாரங்களை நம்பி செய்திகளை வெளியிட வேண்டாம் எனவும் நிர்வாகத்துடன் தொடர்பு கொண்டு உறுதிப்படுத்திய பின்னர் பிரசுரிக்குமாறும் வணிகபீட மாணவர் ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது சம்பந்தமாக அவர்கள் வெளியிட்டுள்ள உத்தியோக பூர்வ அறிக்கை வருமாறு:
ஊடகங்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்
கடந்த நவம்பர் மாதம் 27ம் திகதி பல்கலைக்கழக சூழலிலும், மாணவர் விடுதிகளிலும் இலங்கை இராணுவ மற்றும் காவல்துறையினர் மேற்கொண்ட அத்துமீறல்களைக் கண்டித்து மறுநாள் மாணவர்கள்
ஆசியாவின் மிக நீண்ட நதியான யாங்ட்ஸியின் குறுக்கே 27 கி.மீ. தூர சுரங்க ரயில் பாதையை சீனா அமைத்துள்ளது. இப்பாதையில் ரயில் பயணம் சனிக்கிழமை தொடங்கியது.
குபெய் மாகாணத்தின் ஊகான் நகரில் அமைக்கப்பட்டுள்ள இந்த சுரங்கப்பாதை, ஊசாங் மற்றும் ஹன்கூ ரயில் நிலையங்களை இணைக்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது. இப்பாதையை 3 நிமிடங்களில் ரயில்கள் கடந்து விடும். நாள்தோறும்
டொரண்டோ மேயருக்கு எதிராக தொடரப்பட்ட அவதூறு வழக்கு ஒன்றை ஒண்டோரியோ நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.
டொரண்டோ மேயர் ராப் ஃபோர்டு மீது $6 மில்லியன் டாலர் தொகைக்கு அவதூறு வழக்கு ஒன்றை ஒரு ரெஸ்டாரண்ட் உரிமையாளர் George Foulidis ஒண்டோரியோ நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அவர் தொடர்ந்த வழக்கிற்கு போதுமான
தமிழக அணி 27-15 என்ற புள்ளி கணக்கில் மத்தியபிரதேசத்தை வீழ்த்தி கால்இறுதிக்குள் நுழைந்தது. பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்திஆதித்தனார் தங்கக் கோப்பைக்கான 39-வது தேசிய ஜூனியர் கபடி சாம்பியன்ஷிப் போட்டி மதுரையில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் பிரிவில் நேற்று நடந்த ஒரு ஆட்டத்தில் தமிழக அணி 27-15 என்ற புள்ளி
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை -5-4 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தான் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது. ஆக்கி போட்டி கத்தார் தலைநகர் டோகாவில் நடந்தது. 6 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் நடப்பு சாம்பியன் இந்தியாவும், பாகிஸ்தானும் நேற்று முன்தினம் இரவு இறுதிப்போட்டியில் மோதின. தொடக்கத்தில் இருந்தே அனல் பறந்த
டெல்லியில் பலாத்காரம் செய்யப்பட்ட மாணவி சிங்கப்பூர் மவுன்ட் எலிசபெத் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பலத்த காயமுற்று இருந்த மாணவி மேல்சிகிச்சைக்காக சிங்கப்பூரில் உள்ள மவுண்ட் எலிசபெத் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு மாணவியின் உடல்நிலை நேற்று மிகவும் மோசமடைந்தது.
பா.ஜ.க. மாநில தலைவராக பொன்.ராதாகிருஷ்ணன் 2வது முறையாக தேர்வு
பாரதீய ஜனதா கட்சியின் மாநில அமைப்பு தேர்தல் பூந்தமல்லியில் உள்ள தனியார் மண்டபத்தில் 28.12.2012 வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த தேர்தலுக்கு முன்னதாக காலையில் செயற்குழு கூட்டமும், பிற்பகலில் பொதுக்குழு கூட்டமும் நடைபெற்றது.
பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகளை சமாளிக்க 65 புதிய அனைத்து மகளிர் போலீஸ் நிலையங்கள்
பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகளை சமாளிக்கும் வகையில் மேற்கு வங்காளத்தில் 65 அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் விரைவில் அமைக்கப்படும் என அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
மன்னார் ஆயர் ராயப்பு யோசப் மீது சிஐடியினர் விசாரணை
அவுஸ்திரேலியாவுக்கு படகு மூலம் சட்டவிரோதமாக செல்லும் புகலிடக் கோரிக்கையாளர்கள் நாடு கடத்தப்படுதல் தொடர்பில் ஆயரினால் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் தொடர்பிலேயே அவரிடமிருந்து பல கோணங்களில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதாக திணைக்களம்
பயங்கரவாத விசாரணைத் திணைக்களத்தினர் தம்மிடம் நடத்திய விசாரணைகளில் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பற்றிய கேள்விகள் எவையும் எழுப்பப்படவில்லை என்றும் அவர் உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்பது பற்றிய எந்தக் கலந்துரையாடலும் நடத்தப்படவில்லை என்றும் யாழ்ப்பாணப் பல்லைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
அண்மையில் யாழ். பல்கலைக்கழக நிர்வாகத்தினர், விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோரைப் பலாலி படைத் தலைமையகத்திற்கு அழைத்துப் பேசிய யாழ்
ஒரு காலத்தில் இலங்கை நாடக உலகில் முடிசூடா மன்னர்களாகத் திகழ்ந்த நகைச்சுவை மன்னர்களில் ஒருவரான 'உபாலி' எஸ்.செல்வசேகரன் அவர்கள் இன்று (28.12.2012) வெள்ளிக்கிழமை காலை கொழும்பில் மாரடைப்பால் காலமானார். அன்னாரது குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கோள்கிறேன்.
கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மன்னார் ஆகிய மாவட்டங்களில்அனைத்துக் குளங்களும் நிரம்பி வழிகின்றன. ஆறுகள் பெருக்கெடுத்துப் பாய்கின்றன.
இதனால் வீதிப்போக்குவரத்து பல இடங்களிலும் தடைப்பட்டுள்ளது. நேற்றிரவு தகவல்களின் படி சில குளங்களின் நீர்மட்டமும் அவற்றில் இருந்து வெளியேறும் நீர் மட்டமும் வருமாறு.. கிளிநொச்சி மாவட்டத்தில் அக்கராயன்குள நீர்மட்டம் 26 அடி 2 அடி வான் பாய்கிறது.
இலங்கைப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபாய ராஜபக்ஷவின் நேரடிக் கட்டுப்பாட்டில் செயற்படும் பயங்கரவாத விசாரணைப் பிரிவு (TID) தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை விசாரணை ஒன்றுக்கு ஆஜராகுமாறு அவசர அழைப்பாணை ஒன்றை அனுப்பிவைத்திருக்கின்றது.
கொழும்பிலுள்ள பயங்கரவாத விசாரணைப் பிரிவின் தலைமையகத்தில் நாளை சனிக்கிழமை ஆஜராகுமாறு இந்த அழைப்பாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அறியவந்திருக்கின்றது. கொழும்பிலுள்ள கஜேந்திரகுமாரின் இல்லத்தில் இந்த அழைப்பாணை நேற்று வியாழக்கிழமை மாலை கையளிக்கப்பட்ட
இலங்கை சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள பிரித்தானிய குடியுரிமை கொண்ட தமிழரை பிரித்தானிய சிறைச்சாலைக்கு மாற்றுவது தொடர்பில் நீதியமைச்சர் ரவூப் ஹக்கீமுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரனுக்கும் இடையில் பேச்சுவார்த்தையொன்று இடம்பெற்றுள்ளது. இந்த பேச்சுவார்த்தை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமையகமான தாருஸ்ஸலாமில் நேற்று புதன்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. இதன்போதே பிரித்தானிய குடியுரிமை கொண்ட தமிழரை பிரித்தானிய சிறைச்சாலைக்கு மாற்றுவது தொடர்பில்; பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
சிறிலங்கா அரசு தமிழ் மக்கள் தொடர்பில் சரியான தீர்வை முன்வைக்கத் தவறினால், மீண்டும் ஒருமுறை விடுதலைப் புலிகளின் அல்லது அவர்களைப் பின்பற்றுபவர்களின் ஆட்சேர்ப்பு முகவராக மாறும் நிலை ஏற்படும். இவ்வாறு எச்சரித்துள்ளார் பி.பி.சி. முன்னாள் செய்தியாளர் பிரான்ஸிஸ் ஹரிசன்.
“தி ஏசியன் ஏஜ்” ஊடகத்துக்கு வழங்கியுள்ள செவ்வி ஒன்றிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
"பிரபாகரன் படத்தை வைத்திருக்கவில்லை" ! ஹத்துருசிங்கவின் குற்றச்சாட்டை கைதாகியுள்ள மாணவர்கள் மறுப்பு
மாணவர்கள் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் படத்தை வைத்திருந்ததுடன், அந்த அமைப்பை மீண்டும் உருவாக்கும் வகையில் செயற்பட்டதாகவும் யாழ். இராணுவ தளபதி ஹத்துருசிங்க பீடாதிபதிகளிடம் கூறியிருந்த குற்றச்சாட்டை கைதாகியுள்ள மாணவர்கள் மறுத்துள்ளனர்.
‘கைய்ய கால உடைச்சுடுவேன்’ -ராமதாஸ் கூட்டத்தில் பத்திரிக்கையாளருக்கு மிரட்டல்
சேலம் எல்.ஆர்.என் ஹோட்டல் அரங்கத்தில் ராமதாஸ் தலைமையில் 'அனைத்து சமுதாய பாதுகாப்பு பேரவை' ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் பல்வேறு அமைப்பினரும் பங்கேற்க செய்தி சேகரிக்கவும்,புகைப்படம் எடுக்கவும் பத்திரிக்கையாளர்கள் சென்றனர்.
மாணவி புனிதாவை கற்பழித்து கொன்ற ரவுடி சுப்பையா குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கிளாக்குளத்தை சேர்ந்த சவுந்தரபாண்டியன் மகள் புனிதா (வயது 13). பள்ளி மாணவியான இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த ரவுடி சுப்பையாவால் கற்பழித்து கொலை செய்யப்பட்டார்.
தமிழகத்தில் முழுமையான மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் தொடர் போராட்டங்களை அறிவித்திருந்தார். அதன்படி கடந்த 12.12.2012 அன்று தமிழகத்தின் கடலோர கிராமங்களில் ஒன்றான உவரியில் இருந்து மதுரையை
பொலிஸ் மீது முன் நாள் இராணுவச் சிப்பாய் துப்பாக்கிச் சூடு: தானும் தற்கொலை செய்தார்
காவல்துறையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய முன்னாள் இராணுவப் படை சிப்பாய் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என அறியப்படுகிறது. அரலகங்வில சிறிபுர பிரதேசத்தில் இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. ரி56 துப்பாக்கியைப்
புனர்வாழ்வுபெற்ற 28 முன்னாள் போராளிகள் வடமராட்சியில் கடந்த வாரம் மீண்டும் கைது! – பதற்றத்தில் உறவினர்கள்
யாழ். வடமராட்சி பிரதேசத்தில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் முன்னாள் போராளிகள் 28 பேர் பயங்கரவாதத் தடுப்புப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் கடல் கொந்தளிப்பாக இருக்கின்றது. அலையின் வேகமும் அதிகரித்துள்ளதால் மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்த்து வருகின்றனர். யாழ் கடலில் பரவலாக எல்லா இடங்களிலும் இத்தகையை கொந்தளிப்பு நிலை காணப்படுகின்றது கடந்த சில நாட்களாகவே யாழ் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகின்றது. கடல் கொந்தளிப்புடன் காணப்படுவதால் மீனவர்கள் கடலுக்குச் செல்வதை தவிர்க்குமாறு காலநிலை அவதான நிலையம் அறிவுறுத்தியுள்ளது. அத்துடன் சுனாமி அனர்த்தம் ஏற்பட்டு இன்றுடன் 8 வருடங்கள் நிறைவடைந்துள்ளமையால் யாழ்ப்பாணத்தில் கரையோரங்களைச்சேர்ந்தவர்கள் கடலையே இன்றுக்காலை பார்த்துக்கொண்டிருந்தனர்.
அவுஸ்திரேலியா மெல்பர்ன் கிரிக்கட் மைதானத்தில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக தமிழ் உணர்வார்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடாத்தியுள்ளனர். யுத்தக் குற்றச் செயல்களுக்கு எதிர்ப்பை வெளியிடும் நோக்கில் இந்த போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும், அரசாங்கத்திற்கும் எதிராக ஆர்ப்பாட்டத்தில் பங்குகொண்டோர் கோஷங்களை எழுப்பியுள்ளனர்.
சிறுமியொருவரை வல்லுறவுக்குட்படுத்தியதாகக் கூறப்படும் மஹகெலேகம சுதர்சனாராம விகாரையைச் சேர்ந்த பிக்குவை அடுத்தமாதம் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அநுராதபுரம் பிரதான மாஜிஸ்திரேட் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
மேலும் சம்பவத்தில் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் 15 வயதான சிறுமியை மருத்துவ பரிசோதனைக்குட்பட்படுத்துமாறும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிராக இலங்கை அரசாங்கம் கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்வரும் ஜனவரி 8 ஆம் திகதிக்கு முன்னர், விலகி கொள்ளுமாறு இலங்கை ஜனாதிபதியை வற்புறுத்துமாறு கனேடிய சட்டத்தரணிகள் சங்கம், அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் ஜோன் பேயார்ட்டிடன் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளது.
டிசம்பர் 21 ஆம் திகதி கனேடிய சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் அரச சட்டத்தரணி ரொபர்ட் சீ. பிரவுண் வெளிவிவகார அமைச்சருக்கு அனுப்பியுள்ள மின்னஞ்சலில் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
இறந்த உறவுகளுக்காக தீபம் ஏற்றுவதை யாரும் தடுக்க முடியாது என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இறந்த உறவுகளுக்காக தீபம் ஏற்றுவதை யாரும் தடுக்க முடியாது என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். பட்டதாரி பயிலுனர்களை பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் இணைத்துக் கொள்வதற்கான நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
தமிழர்களும், முஸ்லிம்களும் தங்களுக்கு என்று சொந்த தலைநகரங்களை வடக்கிலும், கிழக்கிலும் உருவாக்கி கொள்ள வேண்டும் என்று இவர்கள் சொல்கிறார்களா? தமிழர்கள் கைவிட்டு விட்ட, முஸ்லிம்கள் நினைத்து பார்த்திராத பிரிவினை பாதையை இவர்கள் இன்று தூண்டிவிடுகிறார்களா?
எந்த ஒரு நாட்டிலும் அந்நாட்டின் தலைநகரம், அந்நாட்டில் வாழும் அனைத்து இனத்தவர்களுக்கும் பொதுவானது. நாட்டின் தலைநகரில் தமிழ் பேசும் மக்கள் வாழ்வதை இனவாத கண்ணோட்டத்துடன் பார்க்கின்றவர்கள் சொல்ல வருவதுதான் என்ன? தமிழர்களும், முஸ்லிம்களும் தங்களுக்கு என்று சொந்த தலைநகரங்களை
அது ஒரு விலை மதிக்க முடியாத கைதாகத்தான் இருக் கும் என்பது அரசாங்கத்தின் கணக்காக இருந்தது. கிரானைட் மோசடி வழக்கிற்குள்ளான துரை தயாநிதிதான் தேடப்பட்டவர். தி.மு.க.வின் தலைமைக் குடும் பத்தின் உறுப்பினர். மத்திய அமைச்சரின் மகன். மதுரையின் செல்வாக்கான புள்ளி. அதனால் இந்த வழக்கு, மீடியாக்களின் கவனத்திற்குரியதாக இருந்தது. போலீஸில் சிக்காமல் 127 நாட்கள் தலைமறைவாக இருந்து, நீண்ட சட்டப் போராட்டத் திற்குப் பிறகு முன்ஜாமீன் பெற்றி ருக்கிறார் துரை தயாநிதி.நன்றி நக்கீரன்
ஏன் இந்த குற்ற உணர்ச்சி? ஏன் இந்த தலைமறைவு? எங்கே பதுங்கியிருந்தார்? எல்லாக் கேள்விகளுக்கும் நக்கீரனிடம் தான் முதன்முதலாக மனம் திறந்தார் துரை தயாநிதி.
நக்கீரன் : உங்கள் மீது வழக்குப் பாய்ந்ததும் என்ன மனநிலைக்கு ஆளானீர்கள், சொல்லுங்கள்?
துரை தயாநிதி : அதுதான் ஊர் உலகத்துக்கே தெரியுமே. என் மீது போடப்பட்டது பொய் வழக்கு. அந்த ஒலிம்பஸ் கம் பெனியிலிருந்து 2008-ஆம் ஆண்டே விலகிவிட்டேன். அது போக நான் அப்ப இருந்த சினிமா பிஸியில், இந்த கம் பெனியில் எனக்கு என்ன நடக் குது என்றுகூட
நூலிழையில் "தல' தப்பிய அந்த படக் காட்சிகளைப் பார்த்தவர்கள் பதைபதைத்துப் போயிருக்கிறார்கள்.
"பைக் ரேஸ், கார் ரேஸ் விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்வது... உங்களின் துணிச்சலைக் காட்டலாம். ஆனால் உங்களை நம்பி கோடிக்கணக்கில் முதலீடு செய்திருக்கிறார்கள் தயாரிப்பாளர்கள். அதனால் இப்படிப்பட்ட "ரிஸ்க்'கை இனிமேல் எடுக்காதீர்கள்' என தயாரிப்பாளர் கேயார் ஒருமுறை சொன்னபோது...
தயாநிதிக்காக தடை போடும் மத்திய அரசு-அ தி மு க மைத்ரேயன் பேட்டி சென்னையில் டிஜிட்டல் அட்ரஸ் சிஸ்டம் செட் ஆப் பாக்ஸ்களை தொலைக் காட்சி நேயர்களுக்கு யார் வழங்குவது என்பதில் தமிழ்நாடு அரசு கேபிள் நிறுவனத் திற்கும் சன் டி.வி. நெட்வொர்க்கின் சுமங்கலி கேபிள் நிறுவனத்திற்கும் இடையே நடக்கும் மோதல் இந்திய நாடாளுமன்றத்தில் எதிரொலித் திருக்கிறது. மக்களவையில் தம்பிதுரையும்,
""ஹலோ தலைவரே... பெரியார் நினைவு நாள், எம்.ஜி.ஆர் நினைவு நாள்னு இரண்டு நிகழ்வுகளை இந்த வாரம் கடந்து வந்திருக்கோம்.''Nakeeran ""ஆமாப்பா.. தன் 95 வயது வரைக்கும் இந்த மக்களோட இழிவுநிலை நீங்கி, சமூக விடுதலை கிடைக்கணும்னு பாடுபட்டவர் பெரியார். கடைசிக் காலத்தில் மூத்திர சட்டியை ஏந்திக்கிட்டு பிரச்சாரம் செய்தார். அவரை மறக்காமல் பல கட்சியினரும் நினைவுநாளில் அஞ்சலி செலுத்துறாங்க. ஆனா, அவர் எந்த சாதி ஏற்றத்தாழ்வை
இந்தியத் தலை நகர் டில்லியில், 16-12-12 இரவு 10 மணிக்கு, பேருந்தில், போதை இளைஞர்கள் 6 பேரால் சிதைத்து சின்னாபின்னமாக்கப்பட்டு, ஓடும் பேருந்தில் இருந்தே தூக்கியெறியப்பட்ட, அந்த 22 வயது மாணவி இந்த நிமிடம் வரை உயிருக்குப் போராடிக் கொண்டுதான் இருக்கிறார்.
திராவிட அரசியல் இயக்கங்களான தி.மு.க, அ.தி.முக. இடையிலான தேர்தல் களப் போட்டிகளே தமிழகத்தில் முதன்மையாக இருப்பதால், ஆட்சியைப் பிடிப்பது ஒன்றே இயக்கத்தின் வெற்றி என்ற எண்ணம் இரு கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்களின் மனதில் ஆழமாகப் பதிந்துள்ளது. அந்த வெற்றிக்காக எதையும் செய்வது என்பதே அரசியல்
திரைப்படங்கள் மிக வலிமையான ஊடகங்கள். பல்வேறு கலைகளின் கலவையாகத் திரைப்படம் திகழ்வதால் அத்தனை கலைகளின் ஈர்ப்பாற்றலும் திரைப்படத்திற்குக் கிடைத்து விடுகிறது. தணிக்கை செய்யாமல் சில திரைப்படங்களை எடுத்து வெளியிட அனுமதித்தால், திராவிட நாடு என்ற இலட்சியத்தை அடைந்துவிடுவோம்
உலக அளவில் திரைத்துறையில் வழங்கப்படும் மிகப்பெரிய விருது ‘ஆஸ்கார் விருது’. உலக அளவில் பல பிரிவுகளின் கீழ் படங்களும், திரைக்கலைஞர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டு, கடைசியில் ஒருவருக்கே அந்த விருது வழங்கப்படும். இந்தியாவிலிருந்து ஆஸ்கார் விருந்துக்கு படங்களும், திரைக்கலைஞர்களும் தேர்ந்தெடுக்கப்படுவது அரிதிலும் அரிதான ஒன்று.
நடிகை த்ரிஷா அடுத்ததாக ‘ரம்’(RUM - Ranba Urvasi Menaka) என்ற படத்தில் நடிக்கவிருக்கிறார். ரம்பா, ஊர்வசி, மேனகாவாக மூன்று நடிகைகள் இப்படத்தில் நடிக்கிறார்கள். இதில் ரம்பா கேரக்டரில் த்ரிஷா நடிக்கிறார். மூன்று மொழிகளில் உருவாகும் இந்த கன்னடப் படத்தின் மூலம் கன்னட திரையுலகிற்கு த்ரிஷா அறிமுகமாகிறார். ஹீரோ இல்லாத இந்த படத்தின் கதை, நடிகைகளை மையப்படுத்தியே எழுதப்பட்டிருக்கிறதாம்.
கன்னடத்தில் ஒக்கடு, வர்ஷம் போன்ற ஹிட் படங்களை கொடுத்த எம்.எஸ்.ராஜு இந்த படத்தை இயக்கி தயாரிக்கிறார். ’ரம்’ படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் முதல் துவங்குகிறதாம். தமிழில் இளம் முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போட்டு சக்கை போடு போட்டுக்கொண்டிருக்கும் த்ரிஷாவிற்கு கன்னடத்திலும் வாய்ப்பு கிடைத்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறதாம்.
தமிழ். தெலுங்கு என இரண்டு திரையுலகிலும் முன்னணி நடிகையாக வலம் வந்து புகழ்பெற்றுவிட்ட த்ரிஷா கன்னட உலகில் கால் பதித்திருப்பது, அங்குள்ள முன்னணி நடிகைகளுக்கிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளதாம்.
26 டிச., 2012
வவுனியாவில் பஸ் மீது மோதுண்டு சுக்குநூறாகி போன ராணுவ வாகனம் பலர் பலி அதிர்ச்சி படங்கள்
வவுனியா மாங்குளம் பகுதியில் இன்று காலை கண்மூடி தனமாக தமது ட்ரக் வண்டியை ஓடி வந்து பஸ் வண்டி மீது மோதி தாமும் பலியாகி மக்கள் உயிரையும் பலி கொண்ட முட்டாள் ராணுவம்
* எழுத முடியாத மாணவருக்கு பெப்.9, 10இல் விசேட பரீட்சை
* சிலாபத்தில் பரீட்சைக்கு தோற்றாத மாணவர்கள் தொடர்பில் வெள்ளி முடிவு
நடைபெற்று முடிந்த க.பொ.த.சாதாரண தரப் பரீட்சை விஞ்ஞான பாடத்திற்குத் தோற்றிய அனைத்து மாணவர்களுக்கும் 19 புள்ளிகளை வழங்குவதற்கு பரீட்சைகள் திணைக்களம் முடிவுசெய்துள்ளது. பரீட்சைகள் ஆணையாளர் தலைமையில் நேற்றுக்கூடிய கல்வியாளர் சபை இந்த முடிவை எடுத்திருப்பதாக கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.
இராணுவத்தில் இணைந்த தமிழ்ப் பெண்களின் பெற்றோர் தினக் கொண்டாட்டம்
இந் நிகழ்வின் பிரதம அதிதியாக கிளிநொச்சி பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதி கலந்து கொண்டதுடன், இராணுவத்தின் உயரதிகாரிகளும் பங்குபற்றியிருந்தனர்.இராணுவத்தின் பெண்கள் படையணியில் கடந்த நவம்பர் மாதம் 17ம் திகதி இணைந்து கொண்ட தமிழ்ப் பெண்களின் பெற்றோர் தினக் கொண்டாட்டம் கிளிநொச்சி பாதுகாப்புப்
ஹத்துருசிங்கவின் முன் மண்டியிட்டு தாய்மார்கள் அழும் போது படையினரின் பலகாரத்தை ருசித்துக் கொண்டிருந்த வசந்தி அரசரட்ணம் !!!
கைதான நான்கு மாணவர்களையும் விடுவித்தால்தான் பல்கலைக்கழகத்தை மீள ஆரம்பிப்போம் என்பீர்களானால் அது நடக்காது. கைதான மாணவர்கள் இன்றும் பிரபாகரன் இருக்கிறார் என்று வாதிடுகின்றனர்.
ஆலையடிவேம்பு பிரதேச சபையின் 2013ம் ஆண்டுக்காக வரவு - செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது. நேற்று திங்கட்கிழமை சபையின் அமர்வில் தவிசாளரால் முன்வைக்கப்பட்ட வரவு - செலவுத்திட்டத்திற்கு ஆளுங்கட்சி மற்றும் எதிர்கட்சி உறுப்பினர்கள் 4 பேர் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்புச் செய்து வரவு - செலவுத் திட்டத்தை தோற்கடித்துள்ளனர். இவ் பிரதேச சபையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றி ஆட்சி அமைத்து செயற்பட்டு வருகின்ற நிலையில் சபையின் மாதாந்த அமர்வு
வாணி, சரிகா போல் கெளதமி கல்யாணம் செய்து கொள்ளுமாறு என்னை வற்புறுத்தவில்லை. கமல்
தான் திருமணமே செய்திருந்திருக்கக் கூடாது என்று உலக நாயகன் கமல் ஹாசன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியின்போது கூறுகையில், எனக்கு திருமணத்தின் மீது நம்பிக்கையே இல்லை. நான் திருமணமே முடிக்காமல் இருந்திருக்கணும்.
யாழ். புத்தூர் வடக்கில் வசிக்கும் முகுந்தன் என்ற ஈபிடிபி உறுப்பினர் ஒருவரை திருமணம் செய்ய கனடாவில் இருந்து சென்ற தமிழ்ப்பெண் இனந்தெரியாத நபர்களினால் எரித்துக் கொலை செய்யப்பட்டுள்ள நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அடுத்த மாதம் முதல் வாரத்தில் திருமணம் நடைபெறவிருந்த நிலையில் குறித்த பெண் புத்தூர் வடக்கில் உறவினர் ஒருவரின் வீட்டில் தங்கியிருந்த வேளை எரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
குப்தில் கடைசி பந்தில் பவுண்டரி அடித்து வெற்றி பெற வைத்தார். நியூசிலாந்து கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான மூன்று 20 ஓவர் போட்டியில் முதல் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரு அணிகள் மோதிய 2-வது போட்டி நேற்று நடந்தது.
இந்தியாவில் இசை, நடனம், நாடகம், திரைத்துறை மற்றும் பொம்மலாட்டம் உள்ளிட்ட கலைத் துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு இசை, நடனம், நாடகக் கலைகளுக்கான தேசிய மன்றம் சார்பில் சங்கீத நாடக அகாடமி விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான சங்கீத நாடக அகாடமி விருதுக்கு 36 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன், புலனாய்வுப் பொறுப்பாளர் பொட்டுஅம்மான், கடற்புலிகளின் தளபதி சூசை போன்றோர், சிறிலங்கா இராணுவ முற்றுகையை உடைத்துக் கொண்டு தப்பிச் சென்றிருக்கலாம் என்று சிறிலங்கா இராணுவத்தின் உயர்மட்ட அதிகாரிகள் பலரும் கருதினர் என்று கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
போரின் இறுதிக்கட்டத்தில் சவேந்திர சில்வாவை பதவியில் இருந்து
தற்போது வாகரைப் பிரதேசத்தில் ஒவ்வொரு கிராமத்திலும் இடைத்தங்கல் முகாம்களில் மக்கள் அமர்த்தப்பட்டுள்ளனர். இதனை கேள்வியுற்ற மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரும் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவருமான சீ.யோகேஸ்வரன் ஞாயிற்றுக்கிழமை மரக்கறி உட்பட்ட உணவுப் பொருட்கள் மருந்துப் பொருட்கள் படுக்கை விரிப்பு அத்தியாவசிய பொருட்களுடன் படகு மூலம் வெள்ளத்தின் பின் இரண்டாவது தடவையாக வாகரை பிரதேசத்துக்கு விஜயம் செய்துள்ளார். அங்கு சென்று சகல கிராமங்களையும் இடைத்தங்கல் முகாம்களையும் பார்வையிட்டதுடன் மக்களுக்கு தேவையான
பொய் வழக்கில் ஈழத் தமிழ் இளைஞர்கள் கைது: சிங்கள அரசின் ஏவலுக்குப் பணிவதா? தமிழக, இந்திய அரசின் போக்குகளுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கண்டனம்! - தொல்.திருமாவளவன். சென்னை, பல்லாவரம் அருகே தங்கிவரும் ஈழத் தமிழ் இளைஞர்கள் 10 பேரை அண்மையில் தமிழக க்யூ பிரிவு உளவுத் துறையினர் திடீரெனக் கைது செய்து அவர்களில் நால்வரை மட்டும் பொய் வழக்கில் சிறைப்படுத்தியுள்ளனர். மிச்சமுள்ள 6 பேர் என்ன
சோமாலியக் கடற்கொள்ளையர்கள் மீது திடீர் தாக்குதல்: இந்தியர்கள் உள்பட 22 பிணைக்கைதிகள் மீட்பு
கடந்த 2009-ம் ஆண்டு 22 பேர்களுடன் சென்ற பனமா நாட்டுக்கு சொந்தமான ஒரு கப்பலை ஏமன் நாட்டு கடல் எல்லையிலிருந்து அவர்கள் கடத்தி சென்றனர். அன்றிலிருந்து அவர்களின் பிடியில் பிணைக்கைதிகளாக இருந்தவர்களை மீட்கப்பட முடியவில்லை.
பாரிசில் இடம்பெற்ற பரிதி அவர்களின் 45 ஆம் நாள் நினைவு அமைதிப் பேரணி!
சனிக்கிழமை மாபெரும் அமைதிப் பேரணியும் ஒன்றுகூடலும் பாரிசில் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது. கடந்த 08.11.2012 அன்று பிரான்சில் சிறிலங்கா அரச பயங்கரவாதத்தால் படுகொலை செய்யப்பட்ட பரிதி அவர்களின் 45 ஆம் நாள் நினைவு தினமான 22.12.2012 நேற்று
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்: இன்று எம்.ஜி.ஆர்., நினைவு தினம் மக்கள் திலகம்' என புகழப்பட்ட, மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., 1917 ஜன., 17 ல் பிறந்தார். நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், அரசியல்வாதி என, பன்முகம் கொண்டவர். மக்களின் மனங்களை கொள்ளை கொண்டவர்.
பாஜகவின் மதவாதம் தெளிவாகத் தெரிந்த காரணத்தினால்தான் அவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்ற உறுதியுடன் திமுக செயல்படுவதாக கருணாநிதி கூறியுள்ளார்.
இது தொடர்பாக சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
சில்லறை வர்த்தகத்தில் நேரடி அன்னிய முதலீட்டுக்கு அனுமதி அளித்தது தொடர்பாக நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடைபெற்றது.
கழுத்து வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில் தமிழ்ப் பெண் ஒருவரின் சடலம் நேற்றுக் காலை மீட்கப்பட்டுள்ளது.மஹரகம பிலியந்தல லும்பினி ஒழுங்கையிலுள்ள வீட்டிலிருந்து 30 வயது மதிக்கத்தக்க பெண்ணின் சடலத்தை பொலிஸார் மீட்டனர்.
கொலை செய்யப்பட்ட பெண் தாயுடன் வசித்து வந்ததார். அவரது கணவர் சில காலங்களுக்கு முன்னர் வீட்டைவிட்டு வெளியேறி நேற்றுமுன்தினமே மீண்டும் வீட்டிற்கு வந்திருந்தார். பெண்ணின் தாயாருடன் அவர் சண்டையிட்டுக் கொண்டிருந்ததை அயலவர்கள் அவதானித்துள்ளனர்
கடத்தப்பட்டு காணாமல்போனவர்களின் உறவினர்கள் ஐநா உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளிடமோ அல்லது வேறு வெளிநாட்டு நிறுவனங்களிடமோ முறைப்பாடு செய்யக்கூடாது என்றும் இராணுவத்தினர் எச்சரித்துவிட்டுச் சென்றுள்ளதாக அப்பகுதி மக்கள் தமக்கு முறைப்பாடு செய்துள்ளதாக வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் போரினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக குரல்கொடுக்கின்ற அமைப்பொன்றின் தலைவி தெரிவித்தார்.
இலங்கையின் கிழக்கே, திருகோணமலை மாவட்டத்தில் தம்பலகாமம் கிராமத்தில் கடத்தப்பட்டு காணாமல் போனவர்களின் குடும்பத்தினர் அது தொடர்பாக மனித உரிமைகள் அமைப்புக்களிடம் முறையிடக்கூடாது என மக்கள் பாதுகாப்புத் தரப்பினரால் எச்சரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மன்னார் மாவட்டம் மடு உதவி அரசாங்க அதிபர் பிரிவிற்குட்பட்ட குஞ்சுக்குளம் கிராமத்திற்கு செல்லும் பிரதான பாதைகள் அனைத்தும் வெள்ளநீரில் மூழ்கியுள்ளதாக மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப்பணிப்பாளர் எம்.ஏ.சி. றியாஸ் தெரிவித்தார்.இது குறித்து அவர் தெரிவிக்கையில்,
குஞ்சுக்குளத்திற்கான தரை வழிப்பாதை முழுமையாக துண்டிக்கப்பட்டுள்ளதுடன் குஞ்சுக்குளம் தொங்கு பாலத்திலும் நீர் மட்டம் அதிகரித்துள்ளது. குஞ்சுக்குளம் பிரதான துருசின் நீர்மட்ட அளவு 14.2 அடி அளவிற்கு உயர்ந்துள்ளது.இதேவேளை, குறித்த பாதைகளில் வெள்ள நீர் பாய்ந்து ஓடுவதினால் வீதிகளில் பாரிய குழிகள் காணப்படுகின்றன. இதனால் குறித்த கிராம மக்கள் வெளியேற முடியாத நிலையில் உள்ளனரென அவர் மேலும் தெரிவித்தார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக இதுவரையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக அதிகரித்துள்ளதுடன் 21 பேர் காயமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, 9 பேர் காணாமல் போயுள்ள நிலையில், 60 ஆயிரத்து 784 குடும்பங்களைச் சேர்ந்த 2 இலட்சத்து 22 ஆயிரத்து 699 பேர் பாதிக்கப்பட்டுள்ள அதேவேளை, 5 ஆயிரத்து 25 குடும்பங்களைச் சேர்ந்த 17 ஆயிரத்து 168 பேர் 100 தற்காலிக நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், 3 ஆயிரத்து 136 வீடுகள் முற்றாகவும் 7 ஆயிரத்து 694 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.
அடுத்துவரும் சில நாட்களுக்கு கனத்த மழை பெய்யும்!- வளிமண்டலவியல் திணைக்களம்
அடுத்து வரும் சில தினங்களுக்கு மழை வீழ்ச்சி மேலும் அதிகரிக்கும் என்று வளிமண்டலவியல் திணைக்களத்தின் கடமை நேர வானிலையாளர் பபோதினி கருணாபால நேற்று தெரிவித்தார்.
கனடா -ஒண்டோரியோவிலும் க்யுபெக்கிலும் கடுமையான மழை!
உறையவிக்கும் குளிரும் மழையும் பனியும் ஒண்டோரியோவையும் தென் க்யுபெக்கையும் வாட்டி எடுத்து விட்டது. தெற்கு ஒண்டோரியோவில் கடுமையான மழையைத் தொடர்ந்து உறையவைக்கும்
இங்கிலாந்தில் உள்ள Newcastle நகரில் கிறிஸ்துமஸ் விழாவிற்கு முந்தைய கடைசி வெள்ளிக்கிழமையான நேற்று, பயங்கர வன்முறை நடந்தது. காவல்துறையினருக்கு ஒரு சவாலான நாளாக இருந்ததாக லண்டன் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
''சமூக, அரசியல் விழிப்பு உணர்வு அதிகம் உள்ள தமிழ்நாட்டில் தலித் - தலித் அல்லாதோர் என்ற பிரிவினையை உருவாக்க நினைப்பது மிக மோசமானது. இந்தக் குறிப்பிட்ட பிரச்னையில் பா.ம.க-வைத் தனிமைப்படுத்த வேண்டும்!''
தர்மபுரி தீ இன்னும் அடங்கவில்லை. தலித்-தலித் அல்லாதோர் பிரிவினையாக, அதை மாநிலம் முழுக்க விரிவுபடுத்தும் சதியை சிலர் செய்ய ஆரம்பித்துள்ளார்கள். 'இது மிக அபாயகரமான போக்கு’ என எச்சரிக்கும் அரசியல் தலைவர்கள், கடந்த வாரம்
‘எனக்கு வாழ ஆசையாக இருக்கிறது. என்னை எப்படியாவது காப்பாற்றுங்கள்‘ என்று எழுதி காட்டினார்-டெல்லிமாணவி
டெல்லியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஓடும் பஸ்சில் பிசியோதெரபி மாணவி ஒருவர் 6 பேர் கொண்ட கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் தற்போது அவருக்கு சப்தர்ஜங் மருத்துவமனையில் சிகிச்சை
யாழ். குடாநாட்டில் 15 ஆயிரத்து 100 இராணுவத்தினரே உள்ளனர்.
இதற்கு மேலதிகமாக ஒரு இராணுவ வீரர் கூட யாழ்ப்பாணத்தில் இல்லை. இலங்கையில் இருப்பது சிங்கள இராணுவம் அல்ல, இலங்கை இராணுவமே என யாழ். மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மஹிந்த ஹத்துருசிங்க தெரிவித்தார்.யாழ்ப்பாணம் பலாலி இராணுவத் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.இலங்கையில் இருப்பது இலங்கை இராணுவமே. அதில் சிங்களம், தமிழ் எனப் பிரிவுகள் இல்லை. இலங்கை இராணுவத்தில் 2 இலட்சம் பேர் உள்ளனர். யாழ்ப்பாணத்தில் 15 ஆயிரத்து 100 பேர் உள்ளனர்.நாட்டில் எந்தப் பகுதியிலும் மேலதிகமாக இராணுவத்தினர் நிலைநிறுத்தப்படவில்லை” என அவர் மேலும் தெரிவித்தார்.
தலைநகர் டெல்லியில் 23 வயது துணை மருத்துவ மாணவி, கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு தனது நண்பருடன் பஸ்சில் பயணம் செய்தபோது, ஒரு கொடிய கும்பலால் கற்பழிக்கப்பட்டார்.
இந்தச்சம்பவம், நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. குற்றவாளிகள் 6 பேரும் கைது செய்யப்பட்டு விட்டனர். இருப்பினும் அவர்களை உடனே தூக்கில் போட வலியுறுத்தி போராட்டங்கள் வலுத்து வருகின்றன.Photos.Video
அமெரிக்காவில் மற்றொரு துப்பாக்கி சூடு: அதிர்ச்சியில் உறைந்துள்ள மக்கள் அமெரிக்காவில் 20 குழந்தைகள் சுட்டுக் கொல்லப்பட்ட அதிர்ச்சியிலிருந்து மக்கள் இன்னும் மீளாத நிலையில், மற்றொரு துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது.அமெரிக்காவின் கனெக்டிக்ட் மாகாணத்தில் தொடக்க பள்ளிக்குள் நுழைந்த ஆடம் லான்சா என்பவர், 20 குழந்தைகள் உட்பட 28 பேரை சுட்டுக் கொன்றார்.இதனால் துப்பாக்கி சட்டத்தை கடுமையாக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.இந்நிலையில் பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள கீசிவுடன் பகுதியில் நேற்று மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டனர், இதில் 4 பேர் கொல்லப்பட்டனர்.இந்த துப்பாக்கி சூட்டை தடுக்க வந்த பொலிசாரும் சுடப்பட்டனர். இவ்வாறு அடுத்தடுத்த துப்பாக்கி சூடு சம்பவங்கள் நிகழ்வதால், எப்போது என்ன நடக்கும் என்ற அதிர்ச்சியில் மக்கள் உறைந்துள்னர்.
மின்னஞ்சலில் கல்லூரி மாணவிக்கு ஆபாச படங்கள் அனுப்பி தொந்தரவு செய்தவரை காவல்துறையினர் வலைவீசி தேடிவருகின்றனர். தஞ்சாவூரைச் சேர்ந்த மாணவி, தனது வேலை விசயமாக சென்னை ஆதம்பாக்கத்தில் உள்ள தனியார் வேலைவாய்ப்பு நிறுவனத்துக்கு தனது பயோடேட்டாவை அனுப்பியிருந்தார். அந்த நிறுவனத்தின் உரிமையாளர் தினகர் பிரசாத்(வயது 37) என்பவர்., அந்த மாணவியின் பயோடேட்டா மூலம்