புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 ஏப்., 2013


தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக பாலியல் குற்றம் புரிந்தவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தத
 

சென்னை நொசப்பாக்கத்தில் வசிப்பவர்கள் சாரதா - சந்திரன் தம்பதியர் (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளது) இவர்களுக்கு 6 வயதில் ஒரு மகனும், 3 வயதில் பெண் குழந்தை ஒன்றும் உள்ளது. சாரதா அழகு நிலையம் ஒன்றில் வேலை பார்க்கிறார்
. இவர்கள் வசிக்கும் வீட்டின் மாடியில் சாஜி என்பவர் வாடகைக்கு குடியிருந்து வந்தார்.

இந்த நிலையில் சாரதாவுக்கும் சாஜிக்கும் சில மாதங்களாக பழக்கம் இருந்து வந்துள்ளது. சாஜி டி.நகரில் சொந்தமாக துணிக்கடை நடத்தி வருகிறார். கடந்த 16.01.2013 அன்று சாரதாவை தொடர்பு கொண்டு உன் குழந்தையை பார்க்க விரும்புகிறேன் கடைக்கு அழைத்து வா என்று கூறியுள்ளார். சாரதாவும் குழந்தையை அழைத்துச் சென்று சாஜியின் கடையில் விட்டு விட்டு வேலைக்கு சென்றுள்ளார். 
இரவு கடைக்கு திரும்பி வந்து குழந்தையை அழைத்தபோது, குழந்தை அழுது கொண்டிருந்தது. வீட்டிற்கு சென்று ஆடைகளை கழட்டி பார்த்தபோது சாரதா சந்தேகம் அடைந்து குழந்தையை விசாரித்துள்ளார். சாஜி மாமாவும், இன்னொரு மாமாவும் தன்னை பாலியல் தொல்லை கொடுத்ததை, தனக்கு தெரிந்த மொழியில் தாயிடம் விளக்கி சொல்லியிருக்கிறது குழந்தை. உடனடியாக சாரதா குழந்தையை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டுபோய் சேர்த்தார். 
இதுகுறித்து தியாகராய நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திலும் புகார் கொடுத்தார். புகாரை பெற்ற போலீசார், இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 324, 354, 376, 511, 506 (2) மற்றும் 7 or - w 8 குழந்தைகள் பாலின குற்ற தடுப்பு சட்டம் 2012ன் கீழ் வழக்குப் பதிவு செய்து, சாஜியை கைது செய்தனர். 
சாஜி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் மத்திய புழல் சிறையில் அடைக்கப்பட்டார். சாஜியுடன் உடனிருந்து பாலியல் தொல்லை கொடுத்த இன்னொரு நபர் சிறுவன் என்பதால், அவன் சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டான். 
இந்த சம்பவம் பற்றி அறிந்த பொதுமக்களும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும், பாலியல் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என்று காவல் துறையினரிடமும், நீதித்துறையினரிடமும் மனு அளித்தனர். 
இதைத்தொடர்ந்து சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் உத்தரவின்பேரில், குற்றவாளி என நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்ட சாஜிக்கு ஓராண்டு குண்டர் சட்டம் விதித்து உத்தரவிட்டார்.

தமிழ்நாட்டில் முதல் முறையாக குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றம் புரிந்த குற்றவாளி ஒருவர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்படுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. 
-சேது

ad

ad