புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 ஏப்., 2013





          ""ஹலோ தலைவரே...…சட்டமன்றக் கூட்டத் தொடர் நடந்துக்கிட்டிருந்தாலும் எம்.பி. தேர்தல் விஷயத்தில்தான் ஜெ. ரொம்ப கவனமா இருக்காராம். ஒவ்வொரு நாளும் உளவுத்துறை மூலமா அப்டேட்  ரிப்போர்ட்  போய்க்கிட்டிருக்காம்.''  nakkeeran

""பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளரா நரேந்திர மோடியை முன்னிறுத்துவதற்கான எல்லா வேலைகளும் மும்முரமா நடந்துக் கிட்டிருக்கு. அதற்குத் தகுந்ததுபோல 6 பேர் கொண்ட பா.ஜ.க.வின் தேசிய கமிட்டியிலும் மோடியை மெம்பராக்கியிருக்காங்க. இதன் பின்னணி பற்றியெல்லாம் ஜெ.வுக்கு ரிப்போர்ட் போயிருக்குமா?''

""அதுமட்டுமில்லீங்க தலைவரே... தமிழகத்தில் அ.தி.மு.க.வோ, தி.மு.க.வோ தங்களோடு கூட்டணி சேராதுன்னு தெரிந்திருக்கிற பா.ஜ.க., தமிழகம்-புதுவையில் உள்ள 40 தொகுதிகளிலும் போட்டியிட்டு கணிசமா ஓட்டு வாங்குவதுன்னு முடிவு செய் திருக்குதாம். சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு விவகாரத்தில் நாடார் சமு தாயத்தில் உள்ள நீண்டகால காங்கிரஸ் ஆதரவாளர்களே மத்திய அரசு மேலே கடும் அதிருப்தியில் இருக்கிறதால அதைப் புரிஞ்சிக்கிட்ட பா.ஜ.க தலைமை, அந்த சமுதாயத்தைச்  சேர்ந்த தமிழிசை சவுந்திர ராசனை கட்சியின் தேசியச்செயலாளரா நியமிச்சிருக்கு. இது பற்றியும்கூட ஜெ.வுக்கு அப்டேட் ரிப்போர்ட்  போயிருக்குதாம்.'' 


""அவரோட ரியாக்ஷன் என்னவாம்?''

""தமிழ்நாட்டில்  உள்ள உயர்ஜாதி இந்துக்களோட ஓட்டு முழுக்க, தன்னால்தான் அ.தி.மு.க.வுக்கு ஆதரவா விழுந்துக் கிட்டிருக்குன்னு ஜெ. உறுதியா நம்புறார். பிராமண சமுதாயத்து தலைவர்களும், தன் னாலதான் அ.தி.மு.க.வை ஆதரிக்கிறாங்கன்னு அவர் நினைக்கிறார். இப்ப மோடியை பிரதமர் வேட்பாளரா அறிவிச்சி, பா.ஜ.க. இங்கே களமிறங்கினா அந்த ஓட்டுகள் பா.ஜ.க பக்கம் போகும் வாய்ப்பு அதிகமா இருக்குதுன்னு ஜெ.வுக்கு பதட்டம் ஏற்பட்டிருக்கு. அதனால தன்னோட ஆலோசனை வட்டத்தில் உள்ள பத்திரிகையாளரும்  பா.ஜ.க ஆட்சிக்காலத்தில் நியமன எம்.பியா இருந்தவருமான அந்த நபர்கிட்டே இதுபற்றி பேசியியிருக்கிறார் ஜெ. "எல்லாத் தொகுதியிலும் பா.ஜ.க. நிற்க வேணாம். ஓட்டுப் பிரிந்து அது நமக்கு சிக்கலாயிடும். நாளைக்கு மத்தியில்  பா.ஜ.க ஆட்சி அமைக்கும் சூழல் வந்தால் நான்தானே ஆதரவு  தரப்போறேன். அதனால ஒருசில தொகுதி களில் மட்டும் போட்டி போடச்சொல்லுங்க'ன்னு சொல்லியிருக்கிறாராம்.'' 

""கூட்டணிக்கு அப் பாற்பட்ட கூட்டணின்னு சொல்லு!''

""அ.தி.மு.க. தன்னோட கூட்டணியில் ம.தி.மு.க., சி.பி.எம்., சி.பி.ஐ. இந்தக் கட்சிகளை வச்சிக்கிட்டு ஆளுங்கட்சிங்கிற கோதாவிலும், தேர்தல் கமிஷன் சப்போர்ட்டுடனும் எம்.பி. தேர்தலை சமாளிச்சிடலாம்னு நினைக்குது. பா.ம.க தானாக வந்தால் சேர்த்துக்கலாம்ங்கிற எண்ண மும் அ.தி.மு.க.வுக்கு இருக்குது. ஆனா, பா.ம.க. நிறுவனர் ராமதாஸோ தனித்துப் போட்டின்னு தொடர்ந்து சொல்லிக்கிட்டே  இருக்காரு. தனித்தே 13 தொகுதிகளில் பா.ம.க ஜெயிக்கும்னு சொல்றார். அதே நேரத்தில், அ.தி.மு.க தலைமைக்கு ம.தி.மு.க மேலே சந்தேகப் பார்வை விழுந்திருக்கு.''

""புதுத் தகவலா இருக்குதே.. ஜெ.வின் செயல்பாடுகளுக்கு உடனடி நன்றித் தீர்மானம் வைகோகிட்டேயிருந்துதானே வெளி யாகுது.''

""சமீபநாட்களா வைகோவின் மூவ்களைப்  பார்க்கும்போது,  அவர் தி.மு.க கூட்டணிக்கு ட்ரை பண்ணுறாரோன்னு சந்தேகம் வருவதா அ.தி.மு.க நிர்வாகிகள் சொல்றாங்க. சீட் எண்ணிக்கையில் இந்த முறை வைகோ தங்க  ளோடு காம்ப்ரமைஸ் பண்ணமாட்டாருன்னு நினைக்கும் அ.தி.மு.க., வைகோ இப்போதெல் லாம் தி.மு.க. மேலே விமர்சனங்களை வைப்பதில்லைங்கிறதையும் நைஸா குறிப்பிடுறாங்க.'' 

""தி.மு.க.வின் எம்.பி. தேர்தல் கணக்கு என்னவாம்?''

""இப்போதைக்கு விடுதலைசிறுத்தைகள் கட்சி மட்டும்தான் அவங்க பக்கம் இருக்குது. இரண்டு  கம்யூனிஸ்ட் கட்சிகளில் சி.பி.ஐ. கட்சி அ.தி.மு.க. பக்கம்ங்கிறதால சி.பி.எம் தங்கள் பக்கம் வந்தால் நன்றாக இருக்கும்னு தி.மு.க. நினைக்குது. அதற்கான மூவ்களும் நடக்குதாம். ஆனா, அ.தி.மு.க. ஆதரவு மனநிலையில் உள்ள இடதுசாரி        எம்.பியும் அவரோட  பத்திரிகையாள நண்பரும்  தி.மு.க. சி.பி.எம். பக்கம் போயிடக்கூடாதுங்கிறதுக்கான வேலைகளைத் தொடங்கிட்டாங்க. தே.மு.தி.க.வைப் பொறுத்தவரை விஜயகாந்த்தும், பிரேமலதாவும் சமீபத்தில்  பேசிய பொதுக்கூட்டங்களில், கடந்த தி.மு.க. ஆட்சிக்காலத்தில் கலைஞர் எப்படி எதிர்க்கட்சிகளுக்கு வாய்ப்பளித்தார்னு பாராட்டிப் பேசியிருப்பதால தே.மு.தி.க. நம்ம பக்கம் வருவதற்கு வாய்ப்பு இருக்குதுன்னு தி.மு.க. நினைக்குது.  இதுதான் இப்போதைய நிலவரம்.''


""வெளியிலிருந்து கட்சிகள் வருவது இருக்கட்டும். உள்ளுக்குள்ளே ஒற்றுமை எப்படி இருக்குது? மு.க.ஸ்டாலின் குடும்பம் தங்களை மதிப்பதில்லைன்னு துரைமுருகன்கிட்டே மு.க.அழகிரி வருத்தப்பட்டதை பற்றி  போன முறை பேசியிருந்தோமே!''

""மதுரையிலிருந்து திரும்பிய துரைமுருகன்  இந்த விவரங்களையெல்லாம் கலைஞர்கிட்டேயும் ஸ்டாலின் கிட்டேயும் சொன்னதோடு, தான் பேசிய  பொதுக் கூட்டத்துக்கு அழகிரியின் நெருங்கிய வட்டாரத்தில் உள்ள கட்சி நிர்வாகிகள் யாரும் வரலைங்கிறதையும் சொல்லியிருக்காரு. இதையடுத்து மன்னன், கவுஸ்பாட்சா உள்பட 16 பேருக்கும் விளக்க  நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அவங்க அதை எடுத்துக்கிட்டு அழகிரிகிட்டே ஓடியிருக்காங்க. இந்த நோட்டீசுக்கு என்ன பதில் அனுப்புறதுன்னு அவங்க கேட்க, என்ன காரணத்துனால போகலையோ அதையே பதிலா அனுப்பிடுங்க.. நான் எல்லா விவரத்தையும் துரைமுருகன்கிட்டே சொல்லியிருக்கேன். இப்போதைக்கு சமாதானமா போறதுதான் நல்லதுன்னு அழகிரி சொல்லியிருக்காரு.''

""அவரோட ஆதரவாளர்கள் என்ன சொன்னாங்களாம்?''

""நாங்க பொதுக்கூட்டத்துக்குத் தான் போகலையே தவிர, துரை முருகனை வரவேற்றதிலிருந்து ஏர் போர்ட்டில் வழியனுப்புவதுவரை கூடத் தான் போனோம். பேப்பரில்கூட படம் வந்திருக்குன்னு சொல்லியிருக்காங்க. அப்ப அதையே  விளக்கமா எழுதி  அனுப்பிட்டு, கட்சி வேலை இருந்தா பாருங்க.. இல்லைன்னா உங்க சொந்த வேலையைப் பாருங்கன்னு அழகிரி சொல்லி யிருக்காரு. அதையே விளக் கமா எழுதிய அவரோட  ஆதரவாளர்கள்,  கூட்டத்தில் ஏன் கலந்துக்கலைங்கிறதுக்கு அம்மாவுக்கு உடம்பு சரி யில்லை.. வயித்துவலியால் அவதிப்பட்டேன், ஒரு துக்கத்துக்காக வெளியூர் போயிட்டேன்னு ஒவ்வொரு காரணமா எழுதிக்கிட்டிருக் காங்களாம்.'' 

""துரைமுருகன் மூலமா அழகிரி சொல்லிவிட்ட தகவலுக்கு ஸ்டாலின் தரப்பிலிருந்து என்ன பதில் வந்ததாம்?''

""குடும்பத்தினர் மரியாதை கொடுக்கலைங்கிறதையெல்லாம்  சரிபண்ணிடலாம்னு சொன்ன ஸ்டாலின், அடுத்த 6 மாதத்தில் அண்ணன் மறுபடியும் ஏதாவது வம்பிழுப்பார். அவரோட முன்கோபம் அப்படி. மதுரையில் உள்ள ஒருத்தரை சென்னையில் மா.செ.வாக்கணும்பார். சென்னையில் உள்ள ஒருத்தருக்கு விருதுநகரில் சீட் தரணும்பார். அவர் கட்சிக்காரரான்னு கூட பார்க்க மாட்டார். இப்படித்தான் போன எம்.பி. எலெக்சனில் நடிகர் ரித்தீஷுக்கு சீட் வாங்கிக் கொடுத்து எம்.பி.யாக்குனாரு. அண்ணன் எப்ப என்ன செய்வாருன்னு தெரியாது. 13-ந் தேதி நடக்கும் ராமநாதபுரம்  எம்.பி. தொகுதி செயல்வீரர்கள் கூட்டத்திற்காக 12-ந் தேதி மதுரை போகிறேன். அங்கே  வைத்துப் பேசிக்கலாம்னு பிடி கொடுக்காமல் ஸ்டாலின் பதில் கொடுத்தாராம்.'' 

""அப்பல்லோ மருத்துவமனை ஐ.சி.யூ.வில் செருப்பைக் கழற்றிவிட்டுப் போகச் சொன்ன டாக்டர் கருணாநிதி கைது செய்யப்பட்ட விவகாரம் சட்டமன்றம் வரைக்கும் பரபரப் பாயிடுச்சே..''

""தி.மு.க. இது பற்றி பேச முற்பட்டதையும் அதற்கு அனுமதி வழங்கப்படாததையும்தானே சொல்றீங்க... டாக்டர்  கருணாநிதி யோடு ஒன்றாக ஒர்க் பண்ணிய சீனியர்  டாக்டர்கள் அவரைத் தொடர்புகொண்டு ஆறுதல் சொன்னப்பகூட, அரெஸ்ட்டான  அதிர்ச்சியிலிருந்தும் பயத்தி லிருந்தும் அவர் மீளாமல்தான் இருந்தாராம். ஆஸ்பிட்டலில் ட்ரீட்மெண்ட் எடுத்து வரும் சிவந்தி ஆதித்தனை கவனித்துக்கொள் பவர்கள்கிட்ட, அன்னைக்கு என்ன நடந்ததுன்னு கேட்டேன்.''

""என்ன சொல்றாங்க?''

""சிவந்தி ஆதித்தனின் நலன் விசாரிக்க  வரும் வி.ஐ.பிகள், வி.வி.ஐ.பிகளெல்லாம் ஆஸ்பிட்டலின் நான்காவது ஃப்ளோரில் உள்ள சூட்டில் தங்கி யிருக்கும் சிவந்தியின் மனைவிகிட்டேயும் அவரோட மகன்கிட்டேயும்தான்  நலன் விசாரிப்பது வழக்கம். ஆனா, ஜெ. நேரில் சிவந்தியைப் பார்க்கணும்னு சொன்னதால் அவர் வார்டுக்குள் போயிட்டார். அப்ப வெளியிலே ஏதோ சத்தம். என்னன்னு ஜெ. திரும்பிப் பார்க்க, அவரோடு வந்திருந்த அரசு போட்டோ கிராபர், வீடியோகிராபர், பாதுகாப்பாளர்கள்கிட்டே ஷூவை கழற்றிட்டுப் போகும்படி சொல்லிக்கிட்டி ருந்திருக்கிறார் டாக்டர் கருணாநிதி. அவங்களை உள்ளே விடச்சொல்லியிருக்கிறார் ஜெ. அவங்க ஜெ.கிட்டே, சி.எம் ஷூவோடு உள்ளே போனதே தப்புன்னு அந்த டாக்டர் சொல்றாரு மேடம்னு சொல்லியிருக்காங்க. ஜெ. முகம் சிவக்க,  இதை யடுத்துதான் கைது நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டதாம்.''

""2ஜி விவகாரத்துக்கான ஜே.பி.சியில் பிரதமர்  ஆஜராகணும்னு அவருக்கே பா.ஜ.க.வின் யஷ்வந்த் சின்ஹா கடிதம் எழுதினாரு. ஆனா, எல்லா  விவரத்தையும் ஏற்கனவே சொல்லிட்டதாகவும், அதனால நேரில் ஆஜராக வேண்டியதில்லைன்னும் மன்மோகன்சிங் மறுத்துட்டாரே!''

""மன்மோகன் ஜே.பி.சி.யில் ஒப்புதல் வாக்குமூலமா கொடுப்பாரு. தப்பிக்கப் பார்க்கும் மன்மோகனை கோர்ட் மூலம் வழக்கில் சேர்க்க குற்றம்சாட்டப்பட்ட தரப்பு தீவிர சட்ட ஆலோ சனைகளில் இறங்கி யிருக்கு. இதை முறியடிக்க பிரதமர் அலுவலகம் சகல வேலைகளையும் இப்பவே ஆரம்பிச் சிருச்சாம்.''


 லாஸ்ட் புல்லட்!

சங்கரராமன் கொலை வழக்கு விசாரணை புதுச்சேரி சிறப்பு நீதிமன்றத்தில் பல தடைகளைத் தாண்டி வியாழக்கிழமையோடு முடிந்தது. குற்றம் சாட்டப்பட்ட ஜெயேந்திரர், விஜயேந்திரர் குரூப்புக்கு நிச்சயம் தண்டனை கிடைக்கும் என்கிறார் அரசு வழக்கறிஞர் தேவதாஸ். வரும் 16-ம் தேதி தீர்ப்பு தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சசிகலாவின்  தம்பி திவாகரன் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார். ஆனால் இன்னும் அவர் பெயில் பெட்டிஷன் போடவில்லை.  வேறு ஏதாவது பெரிய கேஸ் போடப்படும் என்ற பயம்தான் காரணமாம். மேலிடத்துடன் பேசச் சொல்லியிருக்கிறேன். அங்கிருந்து சிக்னல் வந்தபிறகுதான் பெயில் பெட்டிஷன் என்கிறாராம் திவாகரன்.

எஸ்.ஆர்.எம் பல்கலை நிறுவனரான பச்சமுத்து என்கிற பாரிவேந்தர் நன்கொடை விவகாரத்தில் சி.பி.ஐ.யின் பொறியில்  சிக்கினார். தனக்கு நன்கொடை  கொடுத்ததாகக் கூறும் கஸ்டம்ஸ் அதிகாரிக்கும் தனக்கும் சம்பந்தமில்லை என்கிறாராம் பச்சமுத்து. கஸ்டம்ஸ் அதிகாரியோ யாரிடம் நன்கொடை கொடுத்தேன் என்பது  தெரியவில்லை.  நேரில் பார்த்தால்  அடையாளம் காட்டிவிடுவேன் என்கிறாராம். சி.பி.ஐ. அதற் கான முயற்சிகளில் வேகமாக இருக்கிறது. இந்நிலையில் மற்ற கல்லூரிகளின்  சேர்மன் உள்ளிட்ட நிர்வாகிகள் நன்கொடைகளை நேரில்  வாங்காமல் வேறு ரூட்டில்  வாங்கிக் கொண்டிருக்கிறார்களாம்.

ad

ad