கடந்த ஆண்டு 239 பயணிகளுடன் மாயமான மலேசிய விமானம் பனிப்பிரதேசமான அண்டார்டிகாவுக்கு கடத்தப்பட்டதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.
மாயமான விமானம்
மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனத் தலைநகர் பீஜிங்கிற்கு 239 பயணிகளுடன் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 8–ந்தேதி மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான எம்.எச்.370 போயிங் ரக விமானம் புறப்பட்டுச் சென்றது. அதில் 5 இந்திய பயணிகளும் இருந்தனர்.

அந்த விமானம் புறப்பட்டுச் சென்ற சிறிது நேரத்தில் தரைக்கட்டுப்பாட்டு நிலையத்துடன் கொண்டிருந்த தொடர்பை இழந்தது. பின்னர் அந்த விமானம் என்னவானது, அதில் இருந்த பயணிகள் என்ன ஆனார்கள்? என்பது கிட்டத்தட்ட ஓராண்டாகி விட்ட நிலையிலும் உறுதியாக தெரியவரவில்லை.
ஓயாத சர்ச்சை
மாயமான விமானம் விபத்துக்கு உள்ளாகி விட்டதாகவும், அதில் பயணம் செய்த அனைவரும் பலியாகிவிட்டதாகவும் மலேசிய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
மாயமான விமானம் விபத்துக்கு உள்ளாகி விட்டதாகவும், அதில் பயணம் செய்த அனைவரும் பலியாகிவிட்டதாகவும் மலேசிய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
எனினும் மாயமான விமானத்தை தேடும் பணி இன்னொரு பக்கம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
இதனால் அந்த விமானம் பற்றிய சர்ச்சை இன்னமும் ஓய்ந்தபாடில்லை. அனேகமாக மாயமான விமானத்தை 11 மாதங்களுக்கும் மேலாக தேடுவது வரலாற்றில் இதுதான் முதல் முறையாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இதுபற்றி தற்போது வெளியாகி இருக்கும் பரபரப்பு தகவல்கள் வருமாறு:–
திசை திருப்பப்பட்டது
மாயமான மலேசிய விமானம், வேண்டுமென்றே அண்டார்டிகா பனிப்பிரதேசத்தை நோக்கி கொண்டு செல்லப்பட்டதாக விமான போக்குவரத்து நிபுணர்கள் தெரிவித்து இருக்கிறார்கள். இதுபற்றி இங்கிலாந்தைச் சேர்ந்த ‘தி மிரர்’ நாளிதழ் ஆவணப்படம் ஒன்றையும் வெளியிட்டு உள்ளது.

அதில் எம்.எச்.370 விமானம் 3 முறை தனது பாதையில் இருந்து திசை திருப்பப்பட்டது. 3–வது திருப்பத்தின்படி அண்டார்டிகா நோக்கி அந்த விமானம் சென்றிருக்க வாய்ப்பு உள்ளது என்று கூறப்பட்டு இருக்கிறது.
சுட்டு வீழ்த்தப்பட்டது
இதுபற்றி பிரபல விமான போக்குவரத்து நிபுணர் மால்கம் பிரெனர், விமானிகள் அறையில் இருந்த ஒருவரால் விமானம் வேண்டுமென்றே அண்டார்டிகா நோக்கி இயக்கப்பட்டது. அந்த விமானம் என்ன ஆனது என்பதற்கு விரைவில் விடை கிடைக்கும் என்று உறுதியாக கூறினார்.

அமெரிக்க–தாய்லாந்து ராணுவத்தினர் இணைந்து நடத்திய கூட்டு போர் பயிற்சியின்போது மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக இன்னொரு தகவல் கூறுகிறது.
அமெரிக்கா கடத்தியதா?
மலேசிய விமானத்தை வெகு தொலைவில் உள்ள தனது விமானப் படைத்தளமான டிகோ கார்சியாவில் கட்டாயப்படுத்தி அமெரிக்கா தரை இறக்கியதாக மற்றொரு தகவலும் வெளியாகி இருக்கிறது.
மலேசிய விமானத்தை வெகு தொலைவில் உள்ள தனது விமானப் படைத்தளமான டிகோ கார்சியாவில் கட்டாயப்படுத்தி அமெரிக்கா தரை இறக்கியதாக மற்றொரு தகவலும் வெளியாகி இருக்கிறது.
இதை மலேசியாவில் உள்ள அமெரிக்கத் தூதரகம் மறுத்துள்ளது. இதுபற்றி மலேசியாவுக்கான அமெரிக்க செய்தி தொடர்பாளர் கூறுகையில் ‘‘இந்த ஊகத்தில் எந்த உண்மையும் கிடையாது. எம்.எச்.370 விமானம் மாலத்தீவு அருகிலோ, டிகோ கார்சியா தீவின் அருகிலோ பறந்ததாக தகவல் இல்லை’’ என்று மறுத்தார்.
ரஷியாவில் இருந்து வெளிவரும் மோஸ்கோவ்கி கொம்சோலெட்ஸ் என்ற பத்திரிகை வெளியிட்டுள்ள தகவல்:–
காந்தகாரில் உள்ளது
மலேசிய விமானம் தீவிரவாதிகளால் ஆப்கானிஸ்தான் நாட்டுக்கு கடத்திச் செல்லப்பட்டது. அங்கு பயணிகள் அனைவரும் பணயக் கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டு உள்ளனர்.
மலேசிய விமானம் தீவிரவாதிகளால் ஆப்கானிஸ்தான் நாட்டுக்கு கடத்திச் செல்லப்பட்டது. அங்கு பயணிகள் அனைவரும் பணயக் கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டு உள்ளனர்.
ஹிட்ச் என்ற தீவிரவாதிதான் இந்த விமானத்தை ஆப்கானிஸ்தானுக்கு கடத்திச்சென்றவர்.
இந்த விமானம் தற்போது பாகிஸ்தான் எல்லையில் காந்தகார் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறது என்று செய்தி வெளியிட்டு உள்ளது.
முன்னாள் பிரதமர் குற்றச்சாட்டு
மலேசியாவின் முன்னாள் பிரதமர் மகாதிர் முகமது அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ.க்கு மாயமான விமானம் பற்றி தெரியும் என்று குற்றம் சாட்டினார்.
மலேசியாவின் முன்னாள் பிரதமர் மகாதிர் முகமது அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ.க்கு மாயமான விமானம் பற்றி தெரியும் என்று குற்றம் சாட்டினார்.
இதில் யாரோ எதையோ மறைக்கிறார்கள். ஏனென்றால் இதுபோன்ற ஓசையில்லாத வேலைகளை செய்ய அமெரிக்க உளவு நிறுவனங்களுக்கு மட்டுமே தெரியும் என்று வலைத்தளம் ஒன்றில் அவர் கூறி உள்ளார்.
இன்றாக இருக்கட்டும்
ஆஸ்திரேலிய போக்குவரத்து பாதுகாப்பு பிரிவின் ஆணையர் மார்டின் டோலன் மாயமான மலேசிய விமானத்தை தேடும் பணியில் இன்னும் நம்பிக்கையுடன் ஈடுபட்டு வருகிறார்.
ஆஸ்திரேலிய போக்குவரத்து பாதுகாப்பு பிரிவின் ஆணையர் மார்டின் டோலன் மாயமான மலேசிய விமானத்தை தேடும் பணியில் இன்னும் நம்பிக்கையுடன் ஈடுபட்டு வருகிறார்.
அவர் கூறுகையில், இன்றைக்காவது இந்த விமானத்தை கண்டுபிடித்து விடமாட்டோமா? என்ற கேள்வியுடன்தான் தினமும் காலையில் கண்விழிக்கிறேன். அந்த நாள் இப்போதிலிருந்து மே மாதத்துக்கு உட்பட்ட காலமாக இருக்கலாம் என்ற நம்பிக்கையும் எனக்கு உள்ளது என்கிறார்.