புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 பிப்., 2015

இரண்டு பாடசாலைகளில் புதிய தொழில்நுட்ப ஆய்வுகூடங்கள் திறப்பு



சாவகச்சேரி இந்துக் கல்லூரி மற்றும் பருத்தித்துறை மெதடிஸ் பெண்கள் கல்லூரி ஆகியவற்றில் புதிதாக அமைக்கப்பட்ட தொழில்நுட்ப ஆய்வுகூடங்களின்
திறப்பு விழா இன்று நடைபெற்றன.
.
இந்த நிகழ்வில் கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டிருந்தார். 
அவருடன் மகளிர் விவகாரப் பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், , நாடாளுமன்ற உறுப்பினர்களான ஈ.சரவணபவன், சுரேஸ்பிரேமச்சந்திரன் ஆகியோரும் வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை அமைச்சர் த.குருகுலராஜா, கல்வி அமைச்சின்  செயலர் சத்தியசீலன், வலையக் கல்விப் பணிப்பாளர்கள் , அதிகாரிகள்  உட்பட பலர் கலந்து கொண்டனர். 
ஆயிரம் பாடசாலை வேலைத்திட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளில் ஆய்வுகூடங்கள் கட்டப்பட்டன. அதற்கமைய அவை இன்று வைபவ ரீதியாக நாடா வெட்டித்திறந்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 
சாவகச்சேரி இந்துக்கல்லூரியில், 
பருத்தித்துறை மெதடிஸ் பெண்கள் கல்லூரியில்,

ad

ad