புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 பிப்., 2015

ஸ்காட்லாந்து அணியை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் முதல் வெற்றியை பதிவு செய்தது.


உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஸ்காட்லாந்து அணியை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் முதல் வெற்றியை பதிவு செய்தது.


உலக கோப்பை கிரிக்கெட்டில் இன்று ‘ஏ’ பிரிவில் நியூசிலாந்தின் டுனெடின் மைதானத்தில் நடந்த ஆட்டத்தில் குட்டி அணிகளான ஆப்கானிஸ்தானும், ஸ்காட்லாந்தும் மோதின. ஆப்கானிஸ்தான் அணி தனது முதல் இரு ஆட்டங்களில் வங்காளதேசம் மற்றும் இலங்கையிடம் தோற்றது. ஸ்காட்லாந்து அணி நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்திடம் தோல்வியை தழுவியது. இதனால் இவ்விரு அணிகளும் முதல் வெற்றிக்காக களமிறங்கின. ஆனால் ஆப்கானிஸ்தான் அணியின் கையே ஓங்கியது.

போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பீல்டிங் தேர்வு செய்தது. இதனையடுத்து ஸ்காட்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்து விளையாடியது. ஸ்காட்லாந்து அணி 50 ஓவர்களும் விளையாடியது. 50 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து ஸ்காட்லாந்து அணி 210 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் பெரிதும் சொதப்பினர். இருப்பினும் சென்வாரியின் ஆட்டத்தினால் ஆப்கானிஸ்தானின் நம்பிக்கைக்கு பலன் கிடைத்துள்ளது. ஆப்கானிஸ்தான் உலக கோப்பை கிரிக்கெட்டில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. 

ஆப்கானிஸ்தான் 49.3 ஓவர்களுக்கு 9 விக்கெட்களை இழந்து 211 ரன்கள் எடுத்து ஒரு விக்கெட் வித்தியாசத்தில் போராடி வெற்றிபெற்றது. சென்வாரியின் அதிரடியால் ஆப்கானிஸ்தான் முதல் வெற்றியை பதிவு செய்தது. சென்வாரி 96 ரன்கள் அடித்தார். ஹக் பந்துவீச்சில் அவுட் ஆகி தனது சதத்தை தவறவிட்டார். சென்வாரி தனது பொறுப்பான ஆட்டம் மூலம் அணிக்கு ரன்சேர்த்து வெற்றிபெற செய்தார். ஆப்கானிஸ்தான் - ஸ்காட்லாந்து ஆகிய இரு அணிகளும் உலக கோப்பை போட்டிகளில் இதுவரை எந்த வெற்றியும் பெற்றது கிடையாது. முதல் முறையாக ஸ்காட்லாந்து அணியை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றுள்ளது. 

ad

ad