இன்று காலை 10 மணியளவில் வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கடற்பகுதியில் அப்பகுதி மீனவர்கள் தொழில் செய்துகொண்டிருந்தபோது அங்கு வந்த இந்திய மீனவர்கள் கடலில் வைத்து கூரிய ஆயுதங்கள் மற்றும் கொட்டன்களால் வடமராட்சி கிழக்கு மீனவர்கள் மீது காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை நடத்தியுள்ளனர்.
இதேவேளை நேற்று இரவு வடமாராட்சி கிழக்கு கடற்பகுதியில் மீனவர்களின் பல இலட்சம் பெறுமதியான வலைகள் இந்திய மீனவர்களால் அறுத்தெறியப்பட்டுள்ளன.
இந்தச் சம்பவங்களை கண்டித்து இன்று அப்பகுதி மீனவர்கள் கடற்கரையில் திரண்டு இந்த பிரச்சினைக்கு தீர்வு தரும்படி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டதுடன், அங்கு பா.உறுப்பினர் சி.சிறீதரனுக்கு வடமராட்சி கிழக்கு கட்சி அமைப்பாளர் சூரியகாந் ஊடாக மகஜர் ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர்.
- See more at: http://www.tamilwin.com/show-RUmtyCRaSUnvyC.html#sthash.NO8viocQ.dpufஇந்தச் சம்பவங்களை கண்டித்து இன்று அப்பகுதி மீனவர்கள் கடற்கரையில் திரண்டு இந்த பிரச்சினைக்கு தீர்வு தரும்படி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டதுடன், அங்கு பா.உறுப்பினர் சி.சிறீதரனுக்கு வடமராட்சி கிழக்கு கட்சி அமைப்பாளர் சூரியகாந் ஊடாக மகஜர் ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர்.