புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 பிப்., 2015

இலங்கையில் இடம்பெற்ற மாற்றங்களின் பின்னணியில் அமெரிக்கா: ஜோன் கெரீ


இலங்கையில் தற்போது இடம்பெற்றுள்ள மாற்றங்களின் பின்னணியில் அமெரிக்கா காணப்படுகின்றது என அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெரீ தெரிவித்துள்ளார்.
அமெரிக்க பாராளுமன்றத்தில் நேற்று உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா, பிரச்சினைகளுக்குரிய பல நாடுகளில் பல்வேறு நலன்புரித்திட்டங்களை மேற்கொண்டுள்ளது.
உலக நாடுகளில் இதுவரை ஜனநாயகம் இல்லாத பிரச்சினைகளை சந்தித்த பல நாடுகளில் இப்போது உண்மையான ஜனநாயகத்தை காணமுடிகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அமெரிக்க இராஜாங்கச் செயலாளரின் இந்தக் கருத்து, இலங்கையில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் பின்னணியில் அமெரிக்கா இருந்திருப்பதை மேலும் வலுப்படுத்தியுள்ளது

ad

ad