அல்லைப்பிட்டியில் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில்
வைக்கப்பட்டுள்ளார்.
வைக்கப்பட்டுள்ளார்.
அல்லைப்பிட்டி 2ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த சிவலிங்கம் (வயது 56 ) என்பவர் கடந்த மாதம் 22 ஆம் திகதி இரும்புக் கம்பியினால் தாக்கப்பட்டு உயிரிழந்தார். சம்பவம் குறித்த விசாரணையினை ஊர்காவற்றுறை பொலிஸார் மேற்கொண்டனர்.
அதனையடுத்து கிடைத்த தகவலின் படி அல்லைப்பிட்டி முதலாம் வட்டாரத்தைச் சேர்ந்த ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார்.
வழக்கினை விசாரணை செய்த ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதிபதி எஸ். லெனின்குமார் சந்தேக நபரை மார்ச் மாதம் 9 ஆம் திகதி வரைக்கும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.