யாழ்.பல்கலைக்கழக சமூகத்தின் அமைதிப் போராட்டத்தினை வலுப்படுத்தும் முகமாக நோர்வே வெளிநாட்டு அமைச்சகத்தின் முன்றலில் நேற்று கவனயீர்ப்பு போராட்டம் நோர்வே ஈழத்தமிழர் அவையால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
யாழ்.பல்கலைக்கழக சமூகத்தின் அமைதிப் போராட்டத்தினை வலுப்படுத்தும் முகமாக நோர்வே வெளிநாட்டு அமைச்சகத்தின் முன்றலில் நேற்று கவனயீர்ப்பு போராட்டம் நோர்வே ஈழத்தமிழர் அவையால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் இடம்பெற்ற இன அழிப்பு படுகொலைகள் தொடர்பிலான ஐ.நா விசாரணை அறிக்கையை தாமதமின்றி மார்ச் அமர்விலேயே வெளியிடுமாறு வலியுறுத்தி இக் கவனயீர்ப்புப் போராட்டம் நடாத்தப்பட்டது.
நோர்வே வெளிநாட்டு அமைச்சகத்திற்கு முன்கூட்டியே இந்த தகவலை ஈழத்தமிழர் அவையால் வழங்கப்பட்டு, எதற்காக இந்தக் கவனயீர்புப் போரட்டம் செய்யப்படுகின்றது எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
அறிக்கையினை கட்டாயமாக மார்ச் மாதம் ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத்தொடரிலே சமர்ப்பிக்கப்பட நோர்வே அரசாங்கம் குரல் கொடுக்க வேண்டி நிற்கிறோம் என வலியுறுத்தி மின் அஞ்சல் முலம் மகஜர் கொடுக்கப்பட்டது.
வெளிநாட்டு அமைச்சகம் அறிக்கையைப் பெற்றுக் கொண்டதாக ஈழத்தமிழர் அவை தெரிவித்துள்ளது.
சீரற்ற காலநிலையிலும் பல இளைஞர்களும் ஈழ உணர்வாளர்களும் கவனயீர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் ஜனநாயக ரீதியிலான எதிர்ப்பையும் கண்டனத்தையும் தெரிவித்திருந்தார்கள்.
மக்களவை வலியுறுத்திய விடயங்கள்:
1) ஐ.நா சபை இனப்படுகொலை தொடர்பான போர்க்குற்ற விசாரணை அறிக்கையை ஒத்திவைக்காமல் மார்ச் மாத கூட்டத்தொடரிலேயே வெளியிட வேண்டும்.
2) ஐ.நா நிபுணர்குழுவை உடனடியாக இலங்கைக்குள் விசாரணைக்காக இலங்கை அரசு அனுமதிக்க வேண்டும்.
3) இலங்கையின் உள்ளக விசாரணையில் நம்பிக்கை எங்களுக்கு இல்லை.
4) நீதியான சர்வதேச விசாரணையை எதிர்பார்த்து நிற்கின்றோம்.
5) நோர்வேக்கு ஒரு தார்மீகப்பொறுப்பு உள்ளது என்பதை மறக்க வேண்டாம்.